பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சனைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை முடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையை தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத ‘குஷன்’ நாற்காலிகளை பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைச் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதை தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை முடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். ‘ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்’ ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
* உடல் உழைப்பு குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதை தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.
திங்கள், 25 அக்டோபர், 2010
செக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா?
லண்டன்:மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத, தவிர்க்கக்கூடாத விஷயம் செக்ஸ். ஆகவே, அதைப் பற்றி உலகம் முழுவதும் இடைவெளி விடாமல் ஆய்வு செய்கிறார்கள். புதிது, புதிதாய் கண்டுபிடித்து வெளியிடுவதற்கென்றே, ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ வெளியீடு வந்து கொண்டிருக்கிறது. உறவு நேரத்தில் ஜோடிகள் என்னென்ன செய்வார்கள் என கூடுதலாய் பல ‘அந்தரங்க’ மேட்டர்கள் பற்றி விசாரித்து லேட்டஸ்ட் இதழில் போட்டிருக்கிறார்கள்.
‘விஷயம்’ துவக்கும் முன், சலிக்கிற (சலிக்குமா!?) வரை முத்தம் கொடுப்பவர்கள் ஆண்களாம். அப்போது வெட்கப்பட்டு ‘ச்ச்ச்சீ.. ப்போங்க!’ என ஒதுங்குகிற பெண்கள்.. எல்லாம் முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் முத்த ஆயுதத்தால் சரமாரியாக தாக்குகின்றனர்.
உறவு முடிந்த பிறகு, ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். சைலன்ட் பேச்சு, முத்தம், வாஞ்சையாய் தடவிக் கொடுத்தல் ஆகியவையும் இந்த நேரத்தில் நடக்கிறதாம்.
ஆண்களுக்கு அதை விட முக்கியமான வேலை இருக்கிறது. ‘விஷயம்’ முடிந்ததும் நிறைய பேர் சிகரெட் பத்த வைக்கிறார்களாம். இன்னும் சிலர் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவது அல்லது கம்மென்று படுத்துத் தூங்குவது என்று சுருண்டு விடுகிறார்களாம்.
இன்னும் இருப்பது ஒரேயொரு ஞாயிறு!
தீபாவளி நெருங்கிவிட்டது. இன்னும் இருப்பது ஒரேயொரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே. தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். நேற்றைய தினம் துணிக் கடைகள் நிறைந்த தி.நகரும், புரசைவாக்கமும் மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடின.
தீபாவளி பண்டிகை நவம்பர் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சரியாக சொன்னால் இன்னும் 11 நாட்களே உள்ளன. தீபாவளி என்றால் துணிகளும், பட்டாசுகளும்தான் பிரதானம். தீபாவளிக்கு துணி எடுக்க குடும்பத்துடன் துணிக் கடைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இன்னும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே உள்ள நிலையில், நேற்று ஏராளமானோர் கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்கிச் சென்றனர்.
இனிமேல் கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அலுவலகம், பள்ளிக்கு விடுமுறை எடுத்தாலும் பரவாயில்லை என்று விடுமுறை போட்டுவிட்டு வார நாட்களில் கடைக்குச் செல்லுங்கள். அல்லது மாலையில் கடைக்குச் சென்று துணிகளை வாங்கிவிடுங்கள்.
குழந்தைகள், வயதானவர்களுடன் கடைக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். கூட்ட நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் செல்வதாக இருந்தால், ஒருவரை கடையின் நுழைவாயிலில் குழந்தை மற்றும் பெரியவர்களுடன் அமர வைத்துவிட்டு துணி எடுப்பவர்கள் மட்டும் உள்ளே நுழைந்து துணியை எடுத்துவிட்டு வருவது நல்லது.
குழந்தைகளையும், பெரியவர்களையும் கூட்ட நெரிசலில் சிக்க வைக்காமல் வீட்டில் விட்டுச் செல்வது இன்னும் நல்லது. ஆனால் அழைத்துச் செல்ல வேண்டி ஏற்பட்டால் மேற்கூறியவாறு செய்யலாம்.
குழந்தைகளுக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்களை அணிவிக்க வேண்டாம். பையில் விலை மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் செல்வதையும் தவிர்க்கவும்.
பொதுவாக பணமாக இல்லாமல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி துணி வாங்குவது நல்லது. பணத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படாது.
எந்த கடைக்குச் செல்வது, எப்படி செல்வது, எப்படி திரும்புவது, மதிய நேர உணவு குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அலைந்து திரிந்து ஒரே ஒரு கர்ச்சீப் மட்டும் வாங்கும் பழக்கத்தை பெண்கள் விட்டுவிட வேண்டும். முன்பே திட்டமிட்டு அதன்படி என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு பட்டியலைப் போட்டுக் கொண்டு அதை விடுத்து மற்றவற்றை வாங்காமல், பட்டியலில் உள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குவது நேரத்தை மிச்சமாக்கும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடாதீர்கள். தீபாவளிக்கு முன்பு வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான கூட்டம் கடைகளின் முன்பு குவியும். எனவே, அதற்கு முன்பே வார நாட்களில் கடைக்குச் செல்வதுதான் குடும்பத்துடன் செல்லும் நபர்களுக்கு ஏற்றது.
எப்போது சென்றாலும் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லுங்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தீபாவளிக்கு புத்தாடை அணிவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நாம் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 5-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. சரியாக சொன்னால் இன்னும் 11 நாட்களே உள்ளன. தீபாவளி என்றால் துணிகளும், பட்டாசுகளும்தான் பிரதானம். தீபாவளிக்கு துணி எடுக்க குடும்பத்துடன் துணிக் கடைக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இன்னும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே உள்ள நிலையில், நேற்று ஏராளமானோர் கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்கிச் சென்றனர்.
இனிமேல் கடைக்குச் சென்று துணி எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அலுவலகம், பள்ளிக்கு விடுமுறை எடுத்தாலும் பரவாயில்லை என்று விடுமுறை போட்டுவிட்டு வார நாட்களில் கடைக்குச் செல்லுங்கள். அல்லது மாலையில் கடைக்குச் சென்று துணிகளை வாங்கிவிடுங்கள்.
குழந்தைகள், வயதானவர்களுடன் கடைக்குச் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். கூட்ட நெரிசல் மிகுந்த கடைகளுக்குள் செல்வதாக இருந்தால், ஒருவரை கடையின் நுழைவாயிலில் குழந்தை மற்றும் பெரியவர்களுடன் அமர வைத்துவிட்டு துணி எடுப்பவர்கள் மட்டும் உள்ளே நுழைந்து துணியை எடுத்துவிட்டு வருவது நல்லது.
குழந்தைகளையும், பெரியவர்களையும் கூட்ட நெரிசலில் சிக்க வைக்காமல் வீட்டில் விட்டுச் செல்வது இன்னும் நல்லது. ஆனால் அழைத்துச் செல்ல வேண்டி ஏற்பட்டால் மேற்கூறியவாறு செய்யலாம்.
குழந்தைகளுக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்களை அணிவிக்க வேண்டாம். பையில் விலை மதிப்புமிக்க பொருட்களை எடுத்துச் செல்வதையும் தவிர்க்கவும்.
பொதுவாக பணமாக இல்லாமல், ஏடிஎம் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி துணி வாங்குவது நல்லது. பணத்தைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படாது.
எந்த கடைக்குச் செல்வது, எப்படி செல்வது, எப்படி திரும்புவது, மதிய நேர உணவு குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். அலைந்து திரிந்து ஒரே ஒரு கர்ச்சீப் மட்டும் வாங்கும் பழக்கத்தை பெண்கள் விட்டுவிட வேண்டும். முன்பே திட்டமிட்டு அதன்படி என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு பட்டியலைப் போட்டுக் கொண்டு அதை விடுத்து மற்றவற்றை வாங்காமல், பட்டியலில் உள்ளவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்குவது நேரத்தை மிச்சமாக்கும்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிடாதீர்கள். தீபாவளிக்கு முன்பு வரும் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான கூட்டம் கடைகளின் முன்பு குவியும். எனவே, அதற்கு முன்பே வார நாட்களில் கடைக்குச் செல்வதுதான் குடும்பத்துடன் செல்லும் நபர்களுக்கு ஏற்றது.
எப்போது சென்றாலும் மிகவும் எச்சரிக்கையுடன் செல்லுங்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
தீபாவளிக்கு புத்தாடை அணிவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நாம் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
மேதைகள் விட்டுச் சென்றவை..!
சில மேதைகளும், சாதனையாளர்களும் நமக்காக விட்டுச் சென்ற பொன் மொழிகளை இங்கு பார்க்கலாம்.
நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் குற்றமல்ல.. ஆனால் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் குற்றம்தான் - பில்கேட்ஸ்
நீங்கள் எந்த பிரச்சினையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் - சுவாமி விவேகானந்தர்.
வெற்றி பெற மூன்று வழிகள்
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்
நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியது இல்லை. ஆனால் நீங்கள் தோலவி அடைந்தால், அதை பற்றி விளக்க அங்கே நீங்கள் இருக்கக் கூடாது. - அடல்ப் ஹிட்லர்
உங்களோடு நீங்கள் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்களையே நீங்கள் இழிவுபடுத்திக் கொள்வதாக அர்த்தமாகும். - அலென் ஸ்டிரைக்
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?- அன்னை தெரசா
வெற்றி பெற்றால் மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர் என்று அர்த்தமாகாது, ஒரு வேலையை மற்றவர்களை விட சிறப்பாக மற்றும் மற்றவர்களை விட விரைவாக செய்ததாக அர்த்தமாகும்.- போன்னி பிளேர்
எல்லோருமே உலகத்தை மாற்ற வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களேத் தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. - லியோ டோல்ஸ்டோய்
எல்லோரையும் நம்புவது பயங்கரமானது. ஆனால் யாரையுமே நம்பாமல் இருப்பது மிகவும் பயங்கரமானது - அப்ரகாம் லிங்கன்.
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும். - ஐன்ஸ்டீன்
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் - சார்லஸ்
நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்கள் குற்றமல்ல.. ஆனால் ஏழையாகவே இறந்தால் அது உங்கள் குற்றம்தான் - பில்கேட்ஸ்
நீங்கள் எந்த பிரச்சினையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால், உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம் - சுவாமி விவேகானந்தர்.
வெற்றி பெற மூன்று வழிகள்
ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு.. மற்றவர்களை அதிகமாக பணியாற்றுங்கள்
மூன்று... மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
-வில்லியம்ஸ் ஷேக்ஸ்பியர்
நீங்கள் வெற்றி பெற்றால் அதைப் பற்றி யாருக்கும் விளக்க வேண்டியது இல்லை. ஆனால் நீங்கள் தோலவி அடைந்தால், அதை பற்றி விளக்க அங்கே நீங்கள் இருக்கக் கூடாது. - அடல்ப் ஹிட்லர்
உங்களோடு நீங்கள் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படி நீங்கள் செய்தால், உங்களையே நீங்கள் இழிவுபடுத்திக் கொள்வதாக அர்த்தமாகும். - அலென் ஸ்டிரைக்
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால், நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?- அன்னை தெரசா
வெற்றி பெற்றால் மற்றவர்களை விட நீங்கள் சிறந்தவர் என்று அர்த்தமாகாது, ஒரு வேலையை மற்றவர்களை விட சிறப்பாக மற்றும் மற்றவர்களை விட விரைவாக செய்ததாக அர்த்தமாகும்.- போன்னி பிளேர்
எல்லோருமே உலகத்தை மாற்ற வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்களேத் தவிர, ஒருவரும் தன்னை எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. - லியோ டோல்ஸ்டோய்
எல்லோரையும் நம்புவது பயங்கரமானது. ஆனால் யாரையுமே நம்பாமல் இருப்பது மிகவும் பயங்கரமானது - அப்ரகாம் லிங்கன்.
ஒருவர் தான் எப்போதுமே எந்தத் தவறும் செய்ததில்லை என்று கூறுவாரேயானால், அவர் எப்போதும் புதிய ஒன்றை முயற்சித்ததில்லை என்று அர்த்தமாகும். - ஐன்ஸ்டீன்
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4 விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள். அதாவது, நம்பிக்கை, சத்தியம், உறவு, இதயம். ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால் அதிகமாக சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும் - சார்லஸ்
ஆஸ்ட்ரேலியாவில் குறைந்த இந்திய மாணவர்கள்!
சில வருடங்களுக்கு முன்பு வரை உயர் படிப்புக்காக அமெரிக்கா, இங்கிலாந்தைப் போன்று ஆஸ்ட்ரேலியாவுக்கும் படையெடுத்து வந்த இந்திய மாணவர்கள், சமீப காலமாக ஆஸ்ட்ரேலியாவுக்கு செல்வது வெகுவாக குறைந்துவிட்டதாக கூறுகிறார்கள் கல்வியாளர்கள்!
உயர் படிப்புக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஆஸ்ட்ரேலியா சென்று படிப்பது இந்திய மாணவர்களின் வாழ்நாள் கனவு மற்றும் லட்சியமாக இருந்ததற்கு, படிக்கும்போதே பகுதி நேர வேலையில் கல்விக்கட்டணத்தை சமாளித்துக்கொள்ளலாம் மற்றும் படிப்பு முடித்தவுடன் டாலர்களில் கிடைக்கும் ஊதியம், சுகபோக வாழ்க்கை போன்றவைதான் காரணமாக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாக இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்டு வந்த இனவெறி தாக்குதல்கள் மற்றும் இந்திய மாணவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் போன்றவை இந்திய மாணவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்திய அரசும் இது தொடர்பாக தூதரகம் வாயிலாகவும், அந்நாட்டு தலைவர்களுடன் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி, இத்தகைய தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரியது.
ஆனாலும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதும், அதனை இந்தியா கண்டிப்பதுமாக நிலைமை மோசமான நிலையில்தான், ஏராளமான இந்திய மாணவர்கள் கடந்த கல்வியாண்டிலேயே படிப்பை பாதியுலேயே கைவிட்டு, மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு தாய் நாடு திரும்பினர்.
மீதமுள்ளவர்களும், கல்விக்கட்டணத்தை கட்டிவிட்டோமே என்ற பரிதவிப்பிலும், குடும்பச் சூழல் காரணமாகவும்தான் படிப்பை தொடர்ந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகத்தான் ஓரிரு சம்பவங்களைத் தவிர பெரிய அளவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக பெரிய அளவில் இனவெறி தாக்குதல் ஏதும் நடைபெறாமல் இருந்தது.
ஆனால் அந்த மகிழ்ச்சியும் அதிகம் நீடிக்கவில்லை.இந்த முறை ஆஸ்ட்ரேலிய காவல்துறையினரே எந்த அளவுக்கு இனவெறியுடன் உள்ளனர் என்பது இந்த மாத தொடக்கத்தில் அம்பலமானது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆஸ்ட்ரேலிய காவல்துறை உயரதிகாரிகள் சிலரே தங்களுக்குள், இந்தியர்களைப்பற்றி இனவெறியுடன் கேலி மற்றும் கிண்டலாக ஒருவருக்கு ஒருவர் இமெயில்களை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இத்தகைய இமெயில்களில் இடம்பெற்றிருந்த தகவல்களை மெல்போனிலிருந்து வெளியாகும் ' த ஹெரால்டு சன்" என்ற ஆஸ்ட்ரேலிய ஊடகம் அம்பலப்படுத்தியது.
இந்தியாவில் கூட்டம் நிறைந்த ரயில் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் இந்தியர் ஒருவர், ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நிற்கும்போது, எழுந்து நிற்கிறார்.
அதனைப் பார்த்து கீழே நிற்கும் பயணிகள், பயத்தில் அலறும்போதே அந்த பயணி மீது மேலே செல்லும் மின்சார ஓவர்ஹெட் கேபிள் வயரின் மின்சாரம் பாய்ந்து, அவர் உயிரிழக்கிறார்.
இந்த காட்சி அடங்கிய வீடியோவை காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பி, ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் பிரச்சனயை தீர்க்கவும் இதுதான் (மின்சாரம் பாய்ச்சுவது) சிறந்த வழி என்று கூறி, மேலும் பல கேலி, கிண்டல்கள் அடங்கிய இனவெறி வாசகங்களை அனுப்பியுள்ளனர்.
இது குறித்து ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை அதிகாரிகளே இத்தகைய இனவெறியுடன் இருக்கும்போது, தாங்கள் தாக்கப்பட்டால் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று குமுறல்களை வெளியிட்டனர்.
இதனையடுத்து இது குறித்து டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான ஆஸ்ட்ரேலியா தூதர் பீட்டர் வர்கீஸிடம் விளக்கம் கோரியது இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம்.
அதற்கு அந்நாடு எத்தகைய விளக்கத்தை அளித்தது என்பது குறித்த தகவல் எதையும் இந்திய அரசு இன்னமும் தெரியப்படுத்தவில்லை.
இந்நிலையில்தான் இனியும் ஆஸ்ட்ரேலியவில் உயர் கல்வி பயிலச் செல்வது என்பது எமனை தேடிச் செல்வதற்கு சமமானது என்று உணர்ந்துகொண்ட இந்திய மாணவர்கள், அந்நாட்டிற்கு செல்வதை கைவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர்.
இதன் காரணமாகத்தான், ஆஸ்ட்ரேலிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 2011 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்களின் எண்ணிக்கையில், இந்திய மாணவர்களின் வருகை 80 விழுக்காடு வரை குறைந்துபோனதாக அந்நாட்டில் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்ன் பல்கலைக்கழக துணைவேந்தர் க்ளின் டேவிஸ் இது குறித்து கூறுகையில், " இந்தியாவிலிருந்து வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக அண்மைக்காலமாக வெளியான செய்திகளின் தாக்கம் காரணமாகவே ஆஸ்ட்ரேலியா முழுவதும் இந்திய மாணவர்களின் வருகை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது" என்றார்.
உயர் படிப்பில் சேர இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் 80 விழுக்காடு வரை குறைந்து போனதாகவும், சில கல்வி நிறுவனங்கள் 90 விழுக்காடு வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆஸ்ட்ரேலிய கல்வி நிறுவனங்களுக்கு அயல்நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் செலுத்தும் கல்வி கட்டணம்தான் மிகப்பெரிய வருவாயாக இருந்துவந்தது.அதிலும் அயல்நாட்டு மாணவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களது வரத்து மிகவும் குறைந்து போனதால், அதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை எண்ணி அவை அதிர்ச்சியடைந்துபோய் இருக்கின்றன
"இதுநாள் வரை ஆஸ்ட்ரேலிய கல்விநிறுவனங்கள் ஒரு சீரான வளர்ச்சியைக் கொண்டிருந்த நிலையில், இனி அது நீடிக்காது என்பது தான் உண்மை நிலையாக உள்ளது.எனவே நாங்கள் மீண்டும் பழைய இடத்திற்கு சென்று திரும்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று டேவிஸ் மேலும் கூறுகிறார்.
விதைத்ததைத்தானே அறுவடை செய்ய முடியும்?
வெள்ளி, 22 அக்டோபர், 2010
உலகம் முழுவதும் 1800 பணியாளரை நீக்கும் நோக்கியா!
ஹெல்ஸிங்கி: செல்போன் தயாரிப்பில் உலகின் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் 1800 பணியாளரை நீக்குகிறது.
ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஆப்பிள் மற்றும் ப்ளாக்பெரி நிறுவனங்களின் போட்டியால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பைச் சரிகட்ட இந்த நடவடிக்கை [^] எடுக்கப்படுவதாக நோக்கியா சிஇஓ ஸ்டசீபன் எலாப் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்பட உலகம் [^] முழுக்க உள்ள நோக்கியா தொழிற்சாலைகள் அனைத்திலுமே இந்த பணி நீக்கம் இருக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், செல்போன் வர்த்தகத்தை மீண்டும் சூடுபிடிக்க வைக்க குறைந்த விலையில் நவீன மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டங்களையும் அறிவிக்கப் போகிறதாம் நோக்கியா.
வண்டியின் பின்னால் ஓடியதால் கொசு மருந்து கரும்புகையால் சிறுமியின் முகம் கருகியது!
ஆர்.கே.நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. கொசு மருந்து வண்டியை வைத்து, மாநகராட்சி ஊழியர் ஒருவர் ஒவ்வொரு தெருவாக கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆர்.கே. நகர் 1-வது தெருவில் கொசு மருந்து அடித்தபோது அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்- சிறுமிகள் பலர், வண்டியின் பின்னால் ஓடினர். அதே தெருவில் வசித்து வரும் செல்வம் என்பவரின் மகள் லத்திகா (வயது 7)வும் கொசு மருந்து வண்டியின் பின்னால் ஓடினாள். திடீரென சிறுமி லத்திகா, அய்யோ, அம்மா என்று அலறி துடித்தபடி கீழே விழுந்தாள்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை தூக்கினர். லத்திகாவின் முகம் தீயில் கருகி இருந்தது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாள். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் லத்திகாவை சேர்த்தனர். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து லத்திகாவின் தந்தை செல்வம் வண்ணாரப்பேட்டை போக்குவரத்து துறை போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் புகாரை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆர்.கே. நகர் பகுதியில் கொசு மருந்து வண்டியின் பின்னால் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் ஓடி விளையாடுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது என்றும், இதனை பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. கொசு மருந்து வண்டியில் இருந்து வெளிவந்த கரும் புகை, அனலுடன் வந்ததால்தான் சிறுமியின் முகம் கருகியதாக அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே கொசு மருந்து அடிக்கும் வண்டிகளை சரியாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதன், 20 அக்டோபர், 2010
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்!
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.
இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்?
திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு,
அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது.
செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி
வெளியே வந்தது.
இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.
கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார்
அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு
பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.
உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர்.
ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.
இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன்
ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற
பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார்
செய்கின்றன.
100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும்.
சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில்
சந்தேகமில்லை.
செவ்வாய், 19 அக்டோபர், 2010
காதலுக்கும், பாலுறவுக்கும் உள்ள தொடர்பு!
கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - திருக்குறள். இந்தக் குறளையே பின்னாளில் வந்த சினிமா பாடலாசிரியர்கள் பலவாறாக தங்களின் கற்பனை நயங்களைச் சேர்த்து பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளனர். `கண்ணும், கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்' என்று ஒரு கவிஞர் எழுதினார்.
சரி, இதையெல்லாம் ஏன், இப்போது குறிப்பிடுகிறோம் என நீங்கள் கேட்பது புரிகிறது. இப்போது விடயத்திற்கு வருவோம். முந்தைய கட்டுரையில் திருமணமான தம்பதிகள், குறிப்பிட்ட இடைவெளியில் பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொண்டால், கணவன்-மனைவி இடையேயான அன்பு மாறாமல் உறவு நீடிக்கும் என்று கூறியிருந்தோம்.
அந்தவகையில் காதலும், பாலுறவும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு நண்பர் காதல் பற்றி மிகக் கடுமையாக சாடினார். ``காதல் தெய்வீகமானது. காதலிக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்பதெல்லம் சுத்தப்பொய். காதல் என்பதே பாலுறவுடன் மறைமுகத் தொடர்பு உடையது'' என்று கூறினார்.
அதையெல்லாம் மறுத்து, அவருக்கு விளக்கம் கொடுத்த நிலையில், அவர் இறுதியாகக் கேட்ட கேள்விக்கு நம்மால் மறுத்துப் பதில் அளிக்க இயலவில்லை. ``காதலித்து திருமணம் முடிந்த பின் பாலுறவுப் புணர்ச்சி கொள்ளாதவர்கள் யாரேனும் உண்டா?
காதலின் உச்சக்கட்டம் அல்லது எல்லை பாலுறவுப் புணர்ச்சிதானே?'' என்று வினவியதற்கு ஆம் என்ற பதிலைத் தவிர நம்மிடம் வேறு பதில் இல்லை. ``இளம் பருவத்தில், 20 - 30 வயதுகளில் காதலித்து திருமணம் முடித்து, குழந்தைகளையும் பெற்றுக் கொண்ட பின், 10 ஆண்டுகளுக்குப் பின் யோசித்தால், தாங்கள் செய்தது சுத்த போலித்தனம் என்பதை உணர்வார்கள்'' என்று அந்த நண்பர் உறுதிபடக் கூறினார்.
நண்பர் கூறியதை சரி என ஆமோதிக்க முடியா விட்டாலும், அந்தக் கூற்றின் யதார்த்தத்தை அலசிப் பார்ப்போம்.
“மனித குண்டாக வருவேன்” போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை, தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி புத்தாடைகள் வாங்குவதற் காக தியாகராய நகருக்கு பொதுமக்கள் படையெடுத்த வண்ணமாக உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில் நேற்று மாலை பிரபல ஜவுளிக்கடையான போத்தீசுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது.
போனில் பேசிய அந்த மர்ம ஆசாமி “நான் மனித வெடிகுண்டாக” கடைக்குள் வரப்போகிறேன் என்று கூறி விட்டு வைத்து விட்டான். இதனை கேட்டு பயந்து போன கடையின் மேனேஜர் மைக்கேல் மாம்பலம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் விரைந்து வந்தனர். வெடி குண்டு நிபுணர்கள் கருவிகளுடன் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.
தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்க வந்தவர்கள் அனைவரையும் வெளியேற்றி னர். கடை ஊழியர்களையும் வெளியே போகச்சொல்லி கடையின் அனைத்து மாடிகளிலும் சோதனை போட்டனர். ஆனால் எதுவும் சிக்க வில்லை. அதன் பிறகே அதுவதந்தி என்பது தெரிய வந்தது. இந்த சோதனையை கண்டு பொதுமக்களிடம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகே இயல்பு நிலை திரும்பியது.
மலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை!
தமிழக அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் மூலம் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு இது.
மலேஷியாவின் முன்னணி மருத்துவமனைக்கு மனநல மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.
இதுகுறித்த அறிவிப்பு:
The delegates from A.M. Medical Care & Services, Malaysia is arriving India by the end of October 2010 to conduct interview for their House Clinic for Doctors in the following specialties.
1. Specialists in Psychiatry &
2. Medical Doctors( MBBS or its equivalent)
If you are interested, confirm your willingness by email(ovemcl@gmail.com) and also send the following documents on or before 15.10.2010 by post to the address given below:-
1. A copy of the basic medical degree.-(1 copy each)
2. A copy of both the Compulsory Rotating Houseman/Internship Certificate and Bonafide Student Certificate – (1 set)
3. ‘Curriculum Vitae’ of Applicant (type- written) – 1 copy
4. The working experiences stated in the ‘curriculum vitae’ must be supported with certified true copies of testimonials from relevant department heads/supervisors at least for the last THREE years – (1copy each)
5. A copy of the passport
6. A copy of the marriage certificate for foreign spouse of Malaysian, if applicable
7. A copy of a full registration certificate issued by a foreign Medical Council or Medical Licensing Authority in the LAST country of practice, where applicable
8. A current and original Letter of Good Standing issued by a foreign Medical Council or Professional Licensing Authority in the LAST country of practice
9. A recent passport-sized photograph (4 copies)
10. If the practitioners’ printed names in any of the documents submitted differ, they are required to submit a Statutory Declaration to the effect
11. If the original documents are not in either Bahasa Malaysia or English, translated versions in either Bahasa Malaysia or English along with certified copies of the document in its original language need to be submitted. Translated documents are only acceptable if carried out by qualified translators or officers of appropriate embassy.
Salary and other Benefits:-
1. A monthly fee of RM 4500.00 (equivalent approx. INR 66,481) and accommodation allowance of RM 500.00 (equivalent approx. INR 7,386) monthly. Negotiable for specialist in Psychiatry.
2. Free Air ticket from Chennai on Economical Class with return ticket after completion of contract.
3. Free Baggage allowance of 40.0kg per trip.
4. Free medical indemnity insurance up to a limit of RM500,000.00
5. The Immigration fees and levies will be borne by the employer.
6. The Malaysian Medical Council fees for registration will be borne by the employer.
7. Single accommodation is provided.
The contract is for 2 years (subject to change), good remunerations, 5 days a week, office hours with overtime if need be.
Age Limit for Medical Doctors – up to 45 years and Specialist in Psychiatry – upto 55 yrs.
For further details contact 044- 24467562/ 24464269/9566005357.
இந்தியாவின் வெளிநாட்டுக்கடன் ரூ 12,28,950 கோடி!
மும்பை : இந்தியாவின் வெளிநாட்டு கடன் மேலும் 4.1 சதவீதம் உயர்ந்து ரூ 12,28,950 கோடியானது.
நடப்பு நிதி [^] ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 1,080 கோடி டாலர் கடன் உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 48,600 கோடி!
குறுகிய கால அடிப்படையில் வாங்கப்பட்ட கடன்கள் 540 கோடி டாலரும், நீண்ட காலக் கடன்கள் 21,520 கோடி டாலராகவும் உயர்ந்துள்ளன.
வணிக கடன்கள் மற்றும் வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்களும் கணிசமாக உயர்ந்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி [^]யின் மாதாந்திர புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இது குறித்த காலாண்டு ஆய்வை ரிசர்வ் வங்கி மேற்கொண்ட காலகட்டத்தில், இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடனில், வெளிநாட்டு வணிக கடன்கள் 27.3 சதவீத அளவிற்கும், குறைந்த கால கடன்கள் 21.2 சதவீத அளவிற்கும், பன்னாட்டு அமைப்புகளிடமிருந்து பெற்ற கடன்கள் 16.4 சதவீத அளவிற்கும் இருந்தது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் [^] செய்த டெபாசிட் 17.6 சதவீதம் என்ற அளவில் இருந்தது என ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையும், அலைக்கழிப்பும்!
தமிழ்நாட்டில் இதுவரை குடும்ப அட்டை வாங்காதவர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று வேலூரில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியவற்றில் பொது வினியோக திட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியிருக்கிறார்.
குடும்ப அட்டைகளை விரைவாக வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கவுண்ட்டர்களில் துணை ஆட்சியர் நிலையில் இருக்கும் அலுவலர்களிடம் பொதுமக்கள் வருகிற 19, 20 ஆகிய 2 நாட்களிலும் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கலாம். அப்போது அவர்களுக்கு ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். பின்னர் அந்த மனு மீது 30 நாட்களுக்குள் தணிக்கை செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்கவேண்டும் என்று நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.
ஆனால் குடும்ப அட்டை வாங்க மக்கள் படும்பாட்டைப் பார்த்தால் சொல்லிமாளாது. 2008ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் போலி குடும்ப அட்டைகளை முற்றிலும் களைவதற்காகவும், குடும்பத்தில் உள்ள நபர்களையும், குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை சரி பார்ப்பதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று தணிக்கை செய்யப்பட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம் முதல் போலி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
அந்த தணிக்கையின்போது, வெளியூர் சென்றவர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேலைக்கு சென்று விட்டதால் வீடுகள் பூட்டப்பட்டு இருந்ததாலும், நீண்ட நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் போன்றவர்களின் குடும்ப அட்டைகளும் ரத்து செய்துவிட்டுச் சென்று விட்டனர் அரசு அலுவலர்கள்.
இதுபோன்ற குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், மீண்டும் விசாரணை செய்து அத்தகைய குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் உடனடியாக குடும்ப அட்டைகளை கொடுப்பது இல்லை. அதிலும் பல நாட்கள் அலைகழிப்புதான்.
இதுவரை குடும்ப அட்டைகள் வாங்காதவர்கள் மனு செய்தால் உடனடியாக விசாரணை செய்து புதிய குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறுகிறார். அமைச்சர் சொல்வதோடு சரி, அதனை அதிகாரிகள் செயல்படுத்துவது கேள்விக்குறித்தான்.
இதுவரை குடும்ப அட்டை வாங்காத நரிக்குறவர்கள், அரவாணிகள், குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்கள், காதல் திருமணம் செய்துகொண்டவர்கள், விவாக ரத்துப் பெற்றவர்கள் போன்றவர்கள் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான விசாரணையை உடனடியாக முடித்து அவர்களுக்கு உடனடியாக குடும்பஅட்டை வழங்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டோடு சரி, அது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை.
எந்தப்பொருளும் வேண்டாம் என குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் அமைச்சர் எ.வ.வேலு கூறியிருந்தார். முறையான ஆவணங்கள் வைத்திருந்தும் கூட குடும்ப அட்டை பெற மக்கள் படும்பாட்டை அமைச்சர் நேரில் சென்று பார்த்தால் புரியும். அலுவலகங்களில் இருந்து உத்தரவு போடலாம், அது செயல்படுத்தப்படுகிறதா என்பதை அமைச்சர் நேரில் சென்று பார்ப்பாரா? பார்த்திருந்தால் இதுவெல்லாம் தெரிந்திருக்கும்.
முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் ஆகியவற்றிற்காக உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க நேரிடுகிறது. அதுவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தான் மனுக்கள் வாங்கப்படும் என்று அலுவலகத்தில் பெரிய கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். அதுவும் 3 மணி நேரம் அவர்களுக்கு வேலை. அந்த வேலையையும் ஒழுங்காக செய்கிறார்களா என்றால் இல்லை.
விடுமுறை எடுத்துக் கொண்டு வரிசையில் காத்திருக்கும் பொது மக்கள், ஒரு மணி நேரம் கழித்துக் கவுண்ட்டரில் தனது மனுவை கொடுக்கும் போது இந்த மனுவை இங்கே வாங்க மாட்டோம் என்று கூறி அனுப்பி விடுகின்றனர். ஒரு மணி நேரம் காத்திருந்த மக்கள், வேறொருவரிடம் மனுக் கொடுக்க செல்கிறார்கள். அங்கும் அவர்களது மனு நிராகரிக்கப்படுகிறது. இப்படி அங்கு செல், இங்கே செல் என்று அலைகழிக்கப்படும் பொதுமக்கள், கடைசியில் விரக்தியில் குடும்ப அட்டையே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு பணிபுரியும் அலுவலர்கள் நடந்து கொள்கின்றனர். இப்படிப்பட்ட அவலங்களை வில்லிவாக்கத்தில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் கண்கூடாக காணமுடிந்தது.
மனுவை பெற்றுக் கொள்ளும் அரசு அலுவலர்கள், பெயர் மாற்றம் என்றால், 10 நாட்கள், பெயர் சேர்ப்பு என்றால் 15 நாட்கள், பெயர் நீக்கம் என்றாலும் அதே 15 நாள்தான். இது பொதுமக்களுக்கு அலுவலர்கள் கொடுக்கும் கால அவகாசம். அந்த கால அவகாசம் முடிந்து வந்து குடும்ப அட்டையை கேட்டால் 2 நாள் கழித்து வாருங்கள் என்று அனுப்பி விடுகின்றனர். இப்படி அலைகழிக்கப்படும் பொதுமக்கள் ஒரு கட்டத்தில் அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் அளவுக்கு போகிறது. இப்படியே போனால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியதுதான்.
நடந்த நிகழ்வு ஒன்றை நம்முடைய வாசகர்களுக்கு சொல்ல விரும்புகிறோம்: தூத்துக்குடி மாவட்டம் நாலுமுளைகிணறு என்ற கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் சி.ராஜா. வேலை காரணமாக சென்னைக்கு வரும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார். அப்போது கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து இவரது பெயர் நீக்கப்படுகிறது. எப்படியென்றால் சி.ராஜாவுக்கு பதில் சி.ராசு என்று. அப்போது பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உண்மையான பெயர் நீக்கம் செய்து சான்றிதழ் கொடுக்கும்படி கேட்டுள்ளார் ராஜா. ஆனால் அந்த அலுவலரோ, நீங்கள் சென்னையில் உங்களது உண்மையான பெயரை சொல்லி குடும்ப அட்டையை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த நிகழ்வு 2008இல் நடந்தது.
இதையடுத்து அந்த பெயர் நீக்கம் செய்யப்பட்ட சீட்டுடன் உணவு பொருள் வழங்கல்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ள ராஜாவுக்கு பெரும் அதிர்ச்சி. உங்கள் பெயர் ராசு என்று உள்ளது. எப்படி ராஜா என்று சேர்க்க முடியும் என்று கூறிவிட்டு, அவரது மனுவை நிராகரித்துள்ளார் அலுவலர். அப்போது, தனது கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றையும் காண்பித்துள்ளார் ராஜா. ஆனால் அவருக்கு அங்கு ஏற்பட்டது ஏமாற்றம்தான். தற்போது 2010 ஆண்டு பிறந்து முடியபோகிறது. இதுவரை ராஜா, குடும்ப அட்டை வாங்கவில்லை.
இப்படி பல ராஜாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் கவனத்திற்காகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் அலைகழிக்க விடாமல் இருப்பார்களா என்றால் கேள்விக்குறித்தான். இந்த அரசு மட்டும் அல்ல எந்த அரசு வந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை. ஏனெனில் இந்திய ஜனநாயகத்தில், அவர்கள் மன்னர்களாக அல்ல, சபிக்கப்பட்டவர்களாகவே நடத்தப்படுகின்றனர்!
வ - குவாட்டர் கட்டிங்!
ஒய் நாட் புரொடக்சன், கிளவுட் நைன் இணைந்து வ குவாட்டர் கட்டிங் படத்தை தயாரித்துள்ளன. ஓரம்போ படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரியின் இரண்டாவது படம் இது. இதில் வ என்பது படத்தின் பெயர். இதற்கு தமிழில் ஒன்றின் கீழ் நான்கு அதாவது குவாட்டர் என்ற பொருள். குவாட்டர் கட்டிங் என்பது படத்தின் கேப்ஷன்.
வெளிநாட்டு வேலைக்காக சென்னை வருகிறார் சிவா. மறுநாள் அவர் வெளிநாடு கிளம்ப வேண்டும். அதற்கு முதல் நாள் இரவு தனக்கு விருப்பப்பட்டதை எல்லாம் அனுபவிக்க அவர் ஆசைப்படுகிறார். அவரது ஆசையை தீர்த்து வைப்பவர் எஸ்.பி.பி.சரண். இவர் சிவாவின் அக்காவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர். அந்த ஒரு நாள் இரவு சென்னையில் அவர்கள் எதிர்கொள்ளும் நபர்களும், பிரச்சனைகளும்தான் படத்தின் கதை.
ஹீரோயினாக லேகா வாஷிங்டன் நடித்துள்ளார். இசை ஜி.வி.பிரகாஷ்குமார். உன்னை கண் தேடுதே பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். அத்துடன் பிரகாஷ்குமாரும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்தி வார்த்தைகள் நிறைந்த ஒரு பாடலை சிவா எழுதியுள்ளார்.
சென்னை நகரின் இரவு வாழ்க்கையை திரையில் கொண்டு வருவதற்காக இந்தப் படத்தை எடுத்திருப்பதாக புஷ்கர் - காயத்ரி தெரிவித்துள்ளனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் படத்தின் முக்கியமான அம்சங்கள்.
இரண்டு மணி நேரம் சிரித்துவிட்டு வர வ குவாட்டர் கட்டிங் உத்தரவாதம் என்கின்றனர் இயக்குனர் தம்பதிகளான புஷ்கரும் காயத்ரியும்.
அசுர வேகத்தில் வளரும் சென்னை, அகமதாபாத்!
சர்வதேச அளவில் வேகமாக வளரும் பட்டியலில் சென்னை, அகமதாபாத் மற்றும் பெங்களூர் ஆகிய 3 இந்திய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மாநிலங்களிலேயே தொழிற்துறை மற்றும் சந்தைகள் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும், அமெரிக்காவின் பிரபல பிசினஸ் பத்திரிகையான " போப்ஸ்" வர்ணித்துள்ளது.
நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங் அல்லது டோக்கியோ போன்ற ஸ்தாபிதமாகிவிட்ட சர்வதேச மையங்களிலிருந்து தனது பார்வையை திருப்பியுள்ள அப்பத்திரிகை,அடுத்த பத்தாண்டுகளின் நகர சக்திமையங்களாக நியூயார்க்கோ அல்லது மும்பையோ திகழாது என்றும், சீனாவின் சாங்கிங், சானிடிகோ, சிலி மற்றும் ஆஸ்டின், டெக்சாஸ் போன்ற சிறிய நகரங்கள்தான் திகழும் என்றும் கூறியுள்ளது.
உள்ளார்ந்த நகரங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்தும் சீனாவின் தைரியமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள "போப்ஸ்" இந்தியாவும், திட்டமிடாமலேயே இதேப்போன்ற வளர்ச்சியை கண்டுவருவதாக தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களைக் கொண்டுள்ள பெங்களூர், அகமதாநாத் ( இந்நகரிலுள்ளவர்வர்களின் தனிநபர் வருமானம், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்களை காட்டிலும் இருமடங்கு அதிகமாகும்) மற்றும் சென்னை ( இந்த ஆண்டில் மட்டும் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது) உள்ளிட்ட இந்தியாவின் நகர மையங்கள் அதிகரித்துவருகிறது.இந்தியாவின் முக்கிய தொழில்கள் - ஆட்டோ தயாரிப்பு, மென்பொருள் மற்றும் பொழுதுபோக்கு - இந்த நகரங்களில் தாமாகவே ஸ்தாபித்துக்கொண்டிருக்கின்றன.
இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் வளர்ச்சி, சரக்குகளுக்கான சந்தைகள் மற்றும் சேவைகளோடு முதலீடு மூலதனத்தையும் உருவாக்குவதினால், மற்ற நாடுகளையும்,குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில், வளரும் சக்தி நாடுகளாக உருவாக்குவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது.
மிகப்பெரிய பெருநகரமாக உள்ள அகமபாத்பாத் நகரைக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலம்தான், அநேகமாக இந்திய மாநிலங்களிலேயே தொழிற்துறை மற்றும் சந்தைகள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. குஜராத் மாநிலத்தின் கொள்கைகள்தான் டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்கத்திலிருந்து அம்மாநிலத்திற்கு வர உதவியது.
அகமதாபாத் நகரின் வளர்ச்சி இந்த அளவுக்கு திகழ்கிறதென்றால், பெங்களூரிலோ கோல்ட்மேன் சாஸ்ச்ஸ், சிஸ்கோ, ஹெச்பி போன்ற பல்வேறு மகா தொழிநுட்ப மற்றும் சேவை நிறுவனங்கள் செயல்படுவதாக புகழாராம் சூட்டியுள்ளது ஃபோப்ஸ்.
அதேப்போன்று இந்த ஆண்டில் மட்டும், டெல்லி மற்றும் மும்பை போன்ற எந்த ஒரு மற்ற பெரிய இந்திய நகரைவிட 1 லட்சம் வேலை வாய்ப்புகளை சென்னை நகர் உருவாக்கி உள்ளதாக கூறும் அப்பத்திரிகை, வளர்ந்து வரும் இந்திய தொழிற்துறையின் முழு ஆதாயத்தையும் தன்னகத்தே சுவீகரித்துக்கொண்டுள்ள சென்னை, டெல், நோக்கியா, மோட்டாரோலா, சாம்சங், சிமென்ஸ், சோனி மற்றும் ஃபாக்ஸான் போன்ற நிறுவனங்களின் வருகையால் மேலும் வளர்ச்சியடைந்து வருவதாகவும், மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பொழுதுபோக்கு தொழில் துறை நகராக வளர்ந்து வருவதாகவும் பாராட்டியுள்ளது.
இத்தகைய பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும், சென்னையின் மக்கள் தொகை வருகிற 2025 ல் 10 மில்லியனுக்கும் அதிகமாகிவிடும் என்று கூறப்படுகிற நிலையில், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை பெற்றால்தான் சென்னையின் இந்த வளர்ச்சியை எதிர்காலத்திலும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர் தொழில்துறை வல்லுனர்கள்.
ரூ 9,000 கோடி சொகுசு வீட்டில் குடியேறும் முகேஷ் அம்பானி!
அன்டிலியா... உலகின் மிக மிக காஸ்ட்லியான சொகுசு வீட்டின் பெயர் இது.
மும்பையின் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ள இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர், விரைவில் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராகவிருக்கும் முகேஷ் அம்பானி.
விரைவில் குடும்பத்துடன் இந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறுகிறார் முகேஷ் அம்பானி.
4,00,000 சதுர அடியில், மாடியில் மூன்று ஹெலிபேட்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்ட வீட்டின் மதிப்பு ரூ 9,000 கோடிகள்.
இந்த வீட்டின் ஒவ்வொரு மாடியும் சாதாரண வீடுகளை விட இருமடங்கு உயரம் கொண்டவை. 570 அடி உயரத்தில் இருந்தாலும் மொத்தம் 27 மாடிகள் மட்டுமே உள்ளன. சாதாரணமாக இந்த உயரத்துக்கு 60 மாடிகள் வரை கூட கட்டலாம் என்கிறார்கள் கட்டடக் கலை வல்லுநர்கள். ஒவ்வொரு மாடியும் புதிய வடிவிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன.
பிரமாண்ட வட்ட வடிவ அறைகள், அவற்றின் கூரையில் பார்க்குமிடமெல்லாம் கிரிஸ்டல் சரவிளக்குகள், 9 லிப்டுகள் என கேட்பவரை திக்குமுக்காட வைக்கும்படி உள்ளது இந்த வீட்டின் வசதிகளும் செல்வச் செழிப்பும்.
கார் பார்க்கிங்குக்கு மட்டுமே 6 அடுக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 160 கார் களை நிறுத்தலாம்.
டல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பெர்கின்ஸ் மற்றும் வில் அண்ட் ஹ்ரிஷ்க் பெண்டர் நிறுவனங்கள் இந்த கட்டடத்தை வடிவத்துள்ளன.
வீட்டுக்குள்ளேயே சர்வதேச தரத்தையும் மிஞ்சும் ஸ்பா சென்டரும், 50 பேர் மட்டும் அமர்ந்து பார்க்கும் வகையில் குட்டி தியேட்டரும் உள்ளது.
மொத்தம் 600 பணியாளர்கள் இந்த வீட்டை பராமரிக்க அமர்த்தப்பட்டுள்ளனர். வீட்டின் ஒவ்வொரு பொருளும் உலகின் மிகச்சிறந்த தயாரிப்பாக இருக்க வேண்டும் என பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் இன்றைய சொத்து மதிப்பு ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
எடை குறைந்த குழந்தைகளை அதிகம் கொண்ட நாடாக ஒரு பக்கம் இந்தியா திகழ்கிறது. மறுபக்கம் இப்படி படோடபமாகவும் இருக்கிறது!.
ஐஸ்வர்யா ராய் பச்சன்..
ஐஸ்வர்யா ராய் பச்சன்... அபார அழகு தேவதை! தகுதியும் திறமையும்
அழகாகச் சங்கமித்த ஹைக்கூ கவிதை. பசையாக இழுக்கும் பச்சைக் கண்கள்தான் இன்று உலக அழகின் உச்சம்!
மங்களூரில் 1973-ம் வருடம் நவம்பர் 1-ம் தேதி பிறந்தார். பெற்றோர்கள் கிருஷ்ணராஜ் ராய் மற்றும் விருந்தா ராய். ஒரே ஒரு அண்ணன் ஆதித்யா ராய்!
அப்பா, அண்ணா இருவரும் கடற்படையில் பணி புரிந்தவர்கள். இதனால், தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்த ஐஸ், 'என் அம்மாவின் உற்சாகஊட்டல்தான் என் இப்போதைய சாதனைக்குக் காரணம்' என்பார்!
தேர்ந்த ஆர்க்கிடெக்ட் ஆக வேண்டும் என்பது தான் ஐஸ்வர்யாவின் லட்சியம். ஆனால், ஆர்க்கிடெக்ட் படிக்கும்போதே, மாடலிங் வாய்ப்புகள் குவிய, அழகுப் புயல் அப்படியே திசை திரும்பிவிட்டது!
கேமலின் நிறுவன விளம்பரத்தில் முதன்முதலில் ஐஸ் நடித்தபோது, அவருக்கு வயது ஒன்பது. பகுதி நேர புகைப்படக்காரரான தனது ஆசிரியர் ஒருவரின் வற்புறுத்தல் காரணமாகத்தான், அந்த விளம்பரத்தில் நடித்தார்!
பள்ளி நாட்களில் டான்ஸ், டிராமா என ஏரியா வாரியாக வெளுத்துக்கட்டினாலும், கணக்கில் ஐஸ்வர்யா கொஞ்சம் வீக். 'நீ எல்லாவற்றிலும் சிறந்தவள் என்று என்னால் சொல்ல முடியாது!' என்று அவருடைய கணித ஆசிரியை சொன்னதை இன்றுவரை மறக்க வில்லை ஐஸ். அன்று முதல் இன்று வரை, கடுமையான விமர்சனங்களுக்கு ரொம்பவே மனம் வருந்துவார்!
1994 'மிஸ் இந்தியா' போட்டியில் சுஷ்மிதா சென் அழகிப் பட்டம் வென்றார். அதில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது இடம். அதே வருடத்தில், உலக அழகிப் போட்டியில் இன்னும் தைரியம், நம்பிக்கை சேர்த்து கலந்துகொண்டார் ஐஸ். உலக அழகிப் பட்டத்தோடு மிஸ் போட்டோஜெனிக் பட்டமும் ஐஸ் வசம்!
ஐஸ்வர்யாவின் 21-வது பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது 'உலக அழகிப் பட்டம்'! அழகி கீரிடம் சூடிய உடன், அரங்கில் இருந்து அனைவரும் தத்தமது மொழிகளில் 'பிறந்த நாள் வாழ்த்து' பாடிய பெருமை இவரைத் தவிர, வேறு அழகிகளுக்குக் கிடைக்கவில்லை!
'மற்ற நாட்டுப் போட்டியாளர்கள் 'இந்தியர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள். துளியும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள்' என்று மட்டம் தட்டிக்கொண்டே இருப் பார்கள். அதைப் பொய்யாக்கும் வேகம்தான் உலக அழகிப் பட்டம் பெற எனக்கு உத்வேகம் ஏற்படுத்தியது!' என பேட்டிகளில் அடிக்கடி குறிப்பிடுவார் ஐஸ்வர்யா!
மாடலிங் நாட்களில் இருந்தே ஐஸ்க்ரீம் தவிர்ப் பவர். நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள்தான் ஐஸின் ஃபிட்னெஸ் ரகசியம்!
1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படம்தான் சினிமாவுக்கு ஐஸின் அறிமுகம். அதே ஆண்டு பாபி தியோலுடன் ஐஸ் நடித்த முதல் இந்திப் படமான 'Aur pyar Ho Gaya' செம ஃப்ளாப். ஆனாலும், 'சிறந்த புதுமுகம்' விருது வென்றார் ஐஸ்!
1999-ல் இவர் நடித்து வெளியான 'Hum Dil De Chuke Sanam' படம் ஃபிலிம்பேர் விருது பெற்றுத் தந்தது. 'அழகு பொம்மை' அடையாளம் உடைத்து 'திறமையும் நிரம்பியவர்' என்று, முதல் அழுத்த முத்திரை பதித்தார்!
இளவரசி டயானாவுக்குப் பிறகு காதல், திருமணச் செய்திகளுக்காக பத்திரிகையாளர்கள் அதிகமாகப் பின் தொடர்ந்தது ஐஸ்வர்யாவை என்கிறார்கள்!
கர்னாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை முறையாகக் கற்றவர். தொடர்ந்து பரத நாட்டியமும் கற்றுக்கொண்டார். சினிமாக்களில் ஐஸ்வர்யாவின் பரத அசைவுகள் அனைத்தும் சொந்த முனைப்புதான்!
ஆயுர்வேதப் பொருட்களை மட்டுமே உபயோகிப் பார். வீட்டு சமையல் பொருட்களையே மேனி பராமரிப் புக்கும் பயன்படுத்துவார். இரவு உறங்கச் செல்லும்முன் மேக்கப் கலைக்க ஐஸ் பயன்படுத்தும்மாய்சரைஸர்... சுத்தமான பசும் பால்!
17 ஆயிரம் வெப்சைட்டுகள் ஐஸ்வர்யாவுக்காகத் தங்கள் தளத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கி இருக்கிறது. இவருக்கு அடுத்தபடியாக அதிக பக்கங்களை ஆக்கிர மித்து இருப்பவர் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்!
2004-ல் 'டைம்ஸ்' பத்திரிகை, உலக அளவில் மக்களை ஈர்த்த 100 அழகுப் பெண்களில் ஐஸ்வர்யாவையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது!
2005-ல் பார்பி நிறுவனம், இங்கிலாந்தில் ஐஸ்வர்யா ராயைப் போல் தோற்றம்கொண்ட பார்பி பொம்மைகளை விற்பனைக்கு வெளியிட்டது. ஒரே நாளில் எல்லா பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இன்றும் அந்த கலெக்ஷன் பொம்மைகளுக்கு ஏக டிமாண்ட் உண்டு!
அமெரிக்காவின் பிரபல 'ஓப்ரா வின்ஃப்ரே ஷோ'வில் கலந்துகொண்ட முதல் இந்திய நடிகை ஐஸ்தான். அந்த ஷோவில், 'நீங்கள் மிக விரைவாக சேலை கட்டிக்கொள்வீர்களாமே!' என்று ஓப்ரா கேட்க, பதில் சொல்லவில்லை ஐஸ்வர்யா. ஒரு சேலையை நான்கே நிமிடங்களில் ஓப்ராவுக்கு அணிவித்து அப்ளாஸ் அள்ளினார்!
லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மெழுகு மியூஸியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் மெழுகுச் சிலை, அழகுச் சிலை ஐஸ்வர்யாவினுடையதுதான்!
இவரிடம் உள்ள வாட்ச்களை வைத்து ஒரு கண்காட்சியே நடத்தலாம். அவ்வளவு பெரிய கலெக்ஷன். இவர் பிராண்ட் அம்பாஸடராக இருக்கும் Longines வகை வாட்ச்களின் ஆரம்ப விலையே 18 ஆயிரம்!
'குரு' பட ஷூட்டிங் சமயம், ஹோட்டல் லாபியில் ஐஸ் நின்று கொண்டு இருந்தார். கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து அப்போது காதலைச் சொன்னார் அபிஷேக் பச்சன். தன்னைவிட, மூன்று வயது இளையவரான அபிஷேக் பச்சனுக்கு உடனே ஓ.கே. சொல்லிவிட்டார் ஐஸ்வர்யா ராய்!
சமீபத்திய பேட்டி ஒன்றில், 'என் அப்பாவைப்போல இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை!' என்று பூரித்தார் அபிஷேக் பச்சன். அடுத்த நொடியே, 'ஆனால், இதற்கு ஐஸ்வர்யா ஈடுபாடு காட்டவில்லை!' என்று தன் வருத்தத்தை யும் பதிவு செய்துவிட்டார்!
நிஜ வாழ்வில் ஐஸ்வர்யா, அபிஷேக் கெமிஸ்ட்ரி அபாரமாக இருந்தாலும், நிழல் பதிவான 'குரு' மற்றும் 'ராவணா'வில் அது எடுபடவில்லை என்பது தம்பதிகளுக்கே சற்று வருத்தம்தான்!
எத்தனையோ விளம்பரங்கள், சினிமாக்களில் உடல் மறைக்கும் நகைகள் அணிந்து நடித்து இருந்தாலும், தங்கத்தின் மீது ஒரு துளிகூட விருப்பம் இல்லாதவர்!
தன் நீலம் கலந்த பச்சை விழிகளே தனது இத்தனை புகழுக்கும் காரணம் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா!
செவ்வாய், 12 அக்டோபர், 2010
இப்படியும் கணவர்கள்!
சி.சி.டி.வி. எனும் ரகசிய கண்காணிப்பு கேமரா இன்றைக்கு இல்லாத வர்த்தக நிறுவனங்களே கிடையாது. சமீபத்தில் சென்னையில் ஆட்டோ டிரைவர் ஒருத்தரை கொலை செய்த கொலையாளியை சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராதான் அடையாளம் காட்டியது.
வர்த்தக நிறுவனங்களில் கொள்ளை மற்றும் சிறு திருட்டுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கேமராவை தற்போது மனைவிகளை வேவுபார்க்க வீடுகளில் சில கணவர்கள் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்தான் இதோ...
நக்கீரனுக்கு நெருக்கமான அந்த வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த அந்த கணவன்-மனைவியை தனித்தனியாக சந்தித்தோம்.
முதலில் மனைவியை சந்தித்த போது, ""நாங்க ரொம்ப வசதியானவங்க. அவர் ஷிப் மூலம் எக்ஸ்போர்ட் மற்றும் கமிஷன் கான்ட் ராக்ட் பிசினஸ் செய்து வருகிறார். மாசத்துக்கு குறைந்தது 2 முறையாவது பிசினஸ் சம் பந்தமாக வெளிநாடு போவார். எனக்கும் அவருக்கும் 15 வயசு வித்தியாசம். தற்போது எனக்கு 45 வயசாகுது. எங்களுக்கு இதுநாள் வரையிலும் அந்த விஷயத்தில் குறைவே யில்லை. அவர் சந்தேக பேர்வழி என்றாலும் பிறருக்கு உதவும் குணமுடைய ஒரு நல்ல மனிதர்தான்.
பின்னால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள் வெளி ஆட்கள் வருவதையே தவிர்ப்பார். அவர் வீட்டில் இல்லாதபோது சொந்தக்காரர்கள் முதல் எந்த ஆட்கள் வந்தாலும் -அவர் வெளிநாட்டில் இருந்தாலும் வந்தவர்கள் பற்றி உடனே போன் மூலம் சொல்லி விட வேண்டும். இது அவர் போட்டிருக்கும் கண்டிஷன். காரில் போனா கூட காரின் கண்ணாடியை திறக் காமல்தான் போகணும். அந்தளவு...
அவருடைய எண்ணங்கள் அறிந்து நானும் இன்ஜினியரிங் படிக்கும் எங்களின் ஒரே மகளும் அப்படியே நடந்து கொண்டோம். அவர் வெளிநாடு போயிட்டு வரும்போதெல் லாம் விதவிதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட் கள் வாங்கி வருவார். அது என்னவென்று கூட மாஸ்டர் டிகிரி படித்த நான் பார்க்க மாட்டேன்.
இந்த நிலையில், அவர் கடந்த மாதம் வெளிநாடு போயிட்டு வந்த மறுதினம் அவருடைய லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதை திடீ ரென்று எதிர்பாராத விதமாக பார்த்த நான் அதிர்ந்து போனேன். ஏனென்றால் லேப்டாப்பில் நானும், மகளும் படுத்து உறங்குவது, குளித்துவிட்டு வந்து ஆடைகள் மாற்றுவது, சாப்பிடுவது, டி.வி. பார்ப்பது, வீட்டில் வேலை செய்வது என எல்லாமே படமாக ஓடிக் கொண்டிருந்தது.
இதில் மகளும், நானும் தனித்தனி அறையில் நிர்வாணமாக ஆடை மாற்றும் படத்தைப் பார்த்து அதிர்ச்சியான நான் ஆவேசத்துடன் அடிக்காத குறையாக அவரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறு செய்து, லேப்டாப்பை உடைத்து பத்ரகாளியாட்டம் ஆடினேன். இதைப் பார்த்து வேர்க்க, விறுவிறுக்க எதுவும் பேச முடியாமல் தடுமாறிய அவர் மயக்கம் போட்டு விழுந்தார்.
அதன்பிறகு சகஜ நிலைக்கு திரும்பிய அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டேன் என விளக்கமாகக் கூறி எனது காலை பிடித்து மன்னிப்பு கேட்டு, "இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன்' என கெஞ்சியதால் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அசிங்கம் என கருதி "கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என்ற முறையில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும் என எல்லாத்தையும் மறந்து விட்டேன்'' என்றார் கண்ணில் நீர் வழிய.
""பெத்த மகளையும் தொட்டு தாலி கட்டின மனைவியையும் எதற்காக இப்படி படம் புடிச்சீங்க? அதுவும் எப்படி'' என அவரிடம் பேசினோம்.
""திருமணத்திற்கு பிறகு என்னவோ நடந்தது போல மனைவி மீது எப்போதும் சந்தேகம் இருந்து வந்தது. அந்த சந்தேகம் தொடர்ந்து வயசுக்கு வந்த பிள்ளைங்க மீதும் நீடித்தது. சந்தேகம் என்னை தினம் தினம் பேயாக மாற்றியது.
இந்தக் காலத்தில் சந்தேகம் என்பது எனக்கு மட்டுமல்ல, எல்லா கணவனுக்கும் அப்பனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதில் எனக்கு கொஞ்சம் அதிகமாயிடிச்சி.
நான் அடிக்கடி வெளிநாடு, வெளியூர் என போயிட்டு இருப்பேன். மனைவி தனியாக இருக்கும்போது என்ன செய்து கொண்டு இருக்கிறாள், யாரெல்லாம் வீட்டிற்குள் வருகிறார்கள். அதை மறைத்து என்னிடம் பொய் சொல்லுகிறாளா என கண்டுபிடிக்க எங்களது பெட்ரூமிலும், மகளின் பெட்ரூமிலும் மற்றும் ஹாலிலும் சிறிய சைஸில் யாரும் கண்டுகொள்ளாதபடி சி.சி.டி.வி. கேமராவை மறைத்து வைத்து இருந்தேன்.
நான் வெளிநாடு போயிட்டு வந்ததும் அந்த கேமராவில் உள்ள மெமரி கார்டை எனது லேப்டாப்பில் போட்டுப் பார்ப்பேன். இதுவரை 3 முறைதான் பார்த்திருக்கிறேன். அப்போது மனைவி, மகளின் அந்தரங்க விஷயங்கள் தெரிந்தாலும் அது எனக்கு ஆபாசமாக தோன்றவில்லை. அது என்னுடைய சந்தேகத்தை பூர்த்தி செய்யக்கூடியதாக இருந்தது.
கடைசியாக பார்க்கும்போது எனது மனைவி பார்த்துவிட்டாள். அதன்பிறகுதான் நடக்கக் கூடாதது எல்லாம் நடந்துவிட்டது. பின்னர்தான் உணர்ந்தேன், எந்த களங்கமும் இல்லாத என் மனைவியை சந்தேகப்பட்டு விட்டேன் என்று. இந்த சம்பவம் என் மனசுக்குள் இருந்து என்னை தினம், தினம் கொன்னுட்டு இருக்கு.
நான் செய்த தப்பால் எதுவும் தெரியாத என் பிஞ்சு மகள் பட்ட வேதனை... எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அந்த பாவம் என்னை விட்டு நீங்காது. இதனால் நிம்மதியே போச்சு. இதுபோன்ற தவறை இனி எவரும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் உங்களிடம் சொல்லுறேன். தயவு செய்து பெயரை போட்டுவிடா தீர்கள்'' என கேட்டுக் கொண்டார் அந்த மனிதர்.
சில மருத்துவமனைகளில் பெண்களை டாக்டர்கள் பரிசோதிப்பது, பெண்களுக்கு ஊசி போடுவது, மருத்துவமனைக்கு வந்த பெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது போன்றவை எல்லாம் அந்த கேமராவில் பதிவு ஆகிறது. அதுபோல் ஹாஸ்டலில் பெண்களுக்கு தெரியாமலே வைக்கப்பட்டு அவர்களின் அந்தரங்க விஷயங்களை பல கல்லூரி முதலாளிகள் பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அதிகமிருப்பதால் அங்கிருந்து இந்த கேமராவை வாங்கி வந்து யாருக்கும் தெரியாமல் வீடுகளில் பொருத்தியுள்ளனர்.
தன் மனைவியின் நடத்தையை கண்டுபிடிக்க கேமரா பொருத்திய சிலர், தன் உடன்பிறந்த அக்கா, தங்கைகளின் கள்ளத்தொடர்பு பதிவானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவங்களும் உண்டு.
""ஜவுளிக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்யும் பெண்கள் சீருடை மாற்றும் அறை, பாத்ரூம்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி அதை தனி அறையில் அமர்ந்து ரசிக்கும் முதலாளிகளும், அவர்களின் வாரிசுகளும் ஈடுபடுகிறார்கள். இனிமேல் சி.சி.டி.வி. பொருத்துகிறவர்கள் அதை காவல்துறையிடம் தெரிவித்து அனுமதி வாங்கி, எந்தெந்த இடங்களில் கேமரா பொருத்தியுள்ளார்கள் என்பதை தெரிவிக்க ஏற்பாடு செய்வது மட்டுமில்லாமல் மாதம் ஒரு தடவை சோதனையும் செய்ய வேண்டும்'' என்கின்றனர் தொழிலாளர்கள்.
இதுபற்றி வழக்கறிஞர் ஹரினிவாசபிரசாத்திடம் கேட்டபோது...
""எந்த விஷயத்திற்காக இருந்தாலும் ஒருத்தருக்கு விருப்பம் இல்லாமல் படம் பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். அது கணவனாக இருந்தாலும் குற்றம்தான். பொதுவாக இந்த மாதிரி கேமரா எங்கெல் லாம் பயன்படுத்த வேண்டுமென்று ஒரு வரைமுறையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.
இது சம்பந்தமாக ராமநாதபுரத்தில் பிரபல மனோ தத்துவ மருத்துவர் பெரியார்லெனினிடம் கேட்டோம்...
""மனிதர்களின் அந்தரங்கத்தில நுழைவதுபோல் செயல்படும் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்துவதை தடை செய்யவேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் ஒழுக்கமாக இருந்தாலே இதுபோன்ற அத்துமீறும் சம்பவங்கள், வக்ர நிகழ்வுகள் நடக்காது'' என்றார் பெரியார்லெனின்.
இந்த ரகசிய கேமராக்கள் மூலம் பெரிய குடும்பத்து ஆட்களை ப்ளாக்மெயில் செய்யும் கொடூரமும் அதிகரித்து வருகிறது. சேலத்தில் அழகு நிலையம் என்ற பெயரில் பலான தொழில் நடத்தும் 32 வயது சுதாவும், பிரபல அசைவ ஹோட்டலான செல்வி மெஸ் உரிமை யாளரின் ஒரே மகன் 28 வயது தமிழரசனும் ஒன்றாக மெய்மறந்து இருந்தபோது, ஒரு குரூப் திடுதிப்பென்று உள்ளே புகுந்து செல்போனில் படமெடுத்து, இப்போது மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழரசனின் மோதிரம், செயின், 2 மொபைல், 15 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறித்துள்ள யுவராஜ், தீபக், கார்த்தி உள்ளிட்ட டீமை தேடி வருகிறது காவல்துறை.
படம் பிடித்த கும்பலிடமிருந்து அந்த செல்போனை மீட்டுத் தருவதாகச் சொல்லி அரசியல் செல்வாக்குள்ள லோக்கல் ரவுடி ஒருவர் 20 ஆயிரம் ரூபாய் பறித்திருக்கிறார். இதுபோல ஏரியாவுக்கு ஒரு குரூப் கிளம்பி யுள்ளது. கணவன்-மனைவி சந்தோஷமாக இருக்கும்போது ரகசியமாக படம் எடுத்து விட்டு, இண்டர்நெட்டில் போட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன.
திங்கள், 11 அக்டோபர், 2010
சச்சின் புதிய உலக சாதனை!
பெங்களூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் சச்சின் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் சச்சின் தெண்டுல்கர். டெஸ்டில் அதிக ரன், சதம், ஒரு நாள் போட்டியில் அதிக ரன், அதிக சதம் என்பது உள்பட பல்வேறு உலக சாதனைகளை புரிந்துள்ளார்.
தெண்டுல்கர் தற்போது மேலும் ஒரு மைல்கல்லை தொட்டிருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவர் 14 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
உலக அளவில் 14 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற பெருமை சச்சின் அடைந்துள்ளார். 27 வது ஓவரில் பவுண்ட்டரி அடித்து மைல்கல்லை எட்டியுள்ளார்.
170-வது டெஸ்டில் விளையாடி தெண்டுல்கர் 13,973 ரன் எடுத்திருந்தார். அதிகபட்ச ரன் 248 ஆகும். 48 சதமும், 57 அரை சதமும் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் 14 ஆயிரம் ரன்னை தொட்டார்.
அவருக்கு அடுத்தப் படியாக ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 147 டெஸ்டில் 12,101 ரன்னும், லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 131 டெஸ்டில் 11,953 ரன்னும், ராகுல் டிராவிட் (இந்தியா) 143 டெஸ்டில் 11,580 ரன்னும், ஆலன்பார்டர் (ஆஸ்திரேலியா) 156 டெஸ்டில் 11,174 ரன்னும் எடுத்துள்ளனர்.
புலி... பழி... போராட்டம்!
கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனி... கடந்த 1993-ம் ஆண்டு, தன் கைகளின் மேல்
101 கார்களை ஏறச் செய்தார். கை எலும்புகள் சிதைய, வழிந்த தன் ரத்தத்திலே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை ஓவியமாக வரைந்தார். அடுத்த சில மணி நேரங்களிலேயே, போயஸ் கார்டனுக்குத் தகவல் போக, உடனடியாக அழைக்கப்பட்டார். கராத்தே பயிற்சிப் பள்ளிக்காக பெசன்ட் நகர் பகுதியில் ` 9 கோடி மதிப்புள்ள 13 கிரவுண்ட் நிலத்தை ஜெயலலிதாவிடமிருந்து பெற்றார். அதன்பின்னர் சினிமா, செக்யூரிட்டி நிறுவனம், வி.சி.டி. தடுப்புப் படை என சகல திசைகளிலும் ஹுசைனி உச்சத்துக்குப் போனார்!
ஆனால், 98-ம் வருடம் 'முதல்வன்' படம் ரிலீஸான நேரம்... மதுரையில் அந்தப் படத்தின் வி.சி.டி-க்கள் பரவலாக விநியோகிக்கப்பட, அதனைத் தடுக்கும் பொறுப்பில் இருந்த ஹுசைனி, அங்கிருந்த சிலருக்கு எதிராக சீறினார். அவர்கள் பழி தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் போலி பாஸ்போர்ட் வைத்து இருந்ததாகவும், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவராகவும் ஹுசைனி மேல் 6 வழக்குகள் டெல்லி போலீஸாரால் பதிவு செய்யப் பட்டன. அத்தனை வழக்குகளுக்காகவும் போராடி வந்த ஹுசைனிக்கு, கடந்த 4-ம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 'குற்றமற்றவர்' எனத் தீர்ப்பு வழங்கப்பட... 12 வருட சட்டப் போராட்டத்தை முடித்த திருப்தி யோடு காமன்வெல்த் போட்டிகளில் குதித்தார் ஹுசைனி.
கடந்த 7-ம் தேதி நடந்த வில் வித்தைப் போட்டியில் அவரது மாணவ ரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சின்ராஜ் ஸ்ரீதர் வெள்ளிப் பதக்கம் வாங்க... ஹுசைனியின் அடுத்த ரவுண்ட் ஆரம்பமாகிவிட்டதாக செம டாக்!
ஹுசைனிக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.
''மூன்று மாதங்களுக்கு முன்பு, 'சின்ராஜ் ஸ்ரீதருக்கு வில் வாங்கிக் கொடுக்க உதவினால், கண்டிப்பாக அவர் சாதிப்பார்!' என மீடியாக்கள் மூலமாக அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அது அரசின் கவனத்தை எட்டியதா என்று தெரியவில்லை. ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து திடீர் அழைப்பு. அந்த மாணவரையும் அழைத்துப்போய் பார்த்தேன். வில் வாங்கு வதற்காக ` 2 லட்சத்தைக் கொடுத்து உதவினார். அவருடைய உதவிதான் வெள்ளிப் பதக்கத்துக்கு வித்திட்டது!'' என சிலிர்ப்பாகச் சொன்னவர், பழைய போராட்ட வாழ்க்கையின் பக்கங்களையும் நம்மிடம் புரட்டிக் காட்டினார்.
''நான் மதுரையில் பிறந்தவன், என்றாலும் என் தாய் தந்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால், டெல்லி ஏர்போர்ட்டில் என் பாஸ்போர்ட்டை போலி எனச் சொல்லி, என்னை விடுதலைப் புலியாக சந்தேகப்பட்டார்கள். 'இங்கு இருக்கும் தமிழர்கள் யாரிடமாவது கேளுங்கள்... தமிழகத்தில் நான் எந்தளவுக்கு பிரபலமானவன் என்பதைச் சொல்வார்கள்...' எனச் சொன்னேன். ஏர்போர்ட் க்ளீனராக இருந்த ஒரு தமிழரை அழைத்துவந்து என்னைக் காட்டினார்கள். 'இவர் 'புன்னகை மன்னன்' படத்தில் நடித்தவர். இவர் விடுதலைப் புலிதான்!' என அவர் சொல்ல... எனக்கு தலைசுற்றிவிட்டது. அந்தப் படத்தில் போராளி கேரக்டரில் நான் நடித்தேன். அதைவைத்து, என்னை விடுதலைப் புலியாகவே சித்திரித்து, ஜெயிலில் அடைத்தார்கள். அப்போது, தமிழகத்தில் இருந்த போலீஸ் அதிகாரி காளிமுத்துவிடம் டெல்லி போலீஸார் என்னைப்பற்றிக் கேட்க... அவரும், 'இரண்டு மாதங்களுக்கு முன்பு மண்டபம் முகாமில் இருந்து தப்பியவர் அவர்!' என வடிகட்டிய பொய்யைச் சொன்னார். அதனால், அடுத்தடுத்து 6 வழக்குகள் போடப்பட்டன.
இதற்கிடையில் என்னைப்பற்றி தவறான தகவலைச் சொன்ன அந்த தமிழக போலீஸ் அதிகாரி, மீண்டும் என்னைக் குறிவைத்து விரட்டத் தொடங்கினார். 'உயிரே' படம் ரிலீஸானபோது திருட்டு வி.சி.டி. விற்றவர்களைப் பிடித்தேன். ஆனால், அவர்களை நான் ஏ.கே.47 துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக என் மீதே வழக்குப் போட்டார்கள். ஓவிய கண்காட்சிக்காக ஒட்டிய போஸ்டர், மதரீதியான பிரச்னையைக் கிளப்பியதாகச் சொல்லி, என் மீது வழக்குப் போட்டு என்னுடைய 147 ஓவியங்களை லாரிகளில் போலீஸ் அள்ளிக்கொண்டு போனது. ` 13 லட்சம் மதிப்புள்ள அந்த ஓவியங்கள், இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை. இத்தனை கஷ்டங்களுக்கு மத்தியிலும் யாருக்கும் தலைவணங்கி என்னைக் காப்பாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. அனைத்தையும் சட்டரீதியாகவே சந்தித்து ஜெயித்தேன். அந்த நிறைவோடுதான் என் பையன்களை காமன்வெல்த் களத்துக்கு அழைத்து வந்தேன்.
'ஜெயிச்சிட்டேன் சார்...' என என் பையன் வெள்ளிப் பதக்கத்தோடு வந்தபோது, இத்தனை வருட கஷ்டம் எங்கே போனது என்றே தெரியவில்லை..!'' என தழுதழுத்தவர், ''கராத்தே, சினிமா, சிற்பம், ஓவியம், வில் வித்தை என இனி மறுபடியும் தடதட வேகத்தோட களம் இறங்கப் போகிறேன். அடைய வேண்டிய அத்தனை வருத்தங்களையும் கடந்தாச்சு. இனி எல்லாமே வெற்றியாத்தான் இருக்கும்!'' என்கிறார் நம்பிக்கையோடு.
ஹுசைனி தற்போது நடித்துவரும் படத்தின் தலைப்பு 'முடிவு'! அது அவரைத் துரத்திய துயரங் களுக்கான முடிவாக அமையட்டும்!
ஏர் இந்தியாவுக்கு மேலும் ரூ 2000 கோடி வழங்கும் மத்திய அரசு!
டெல்லி: பெரும் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மேலும் ரூ 2000 கோடியை வழங்குகிறது மத்திய அரசு. இந்த நிதி [^]யை பங்குகள் மூலம் வழங்குகிறது மத்திய அரசு.
இதன் மூலம் ஏர் இந்தியாவின் நிதி நிலையை மட்டுமல்லாது, கடன் பெறும் திறனையும் உயர்த்துகிறது மத்திய அரசு. நிதியை வழங்க மத்திய அரசின் முறையான ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன வங்கிகள்.
செயலர்கள் கமிட்டி ஏற்கெனவே ஏர் இந்தியாவுக்கு ரூ 5000 கோடி நிதியை உள்ளீடு செய்ய முடிவு செய்தது. இதில் முதல் தவணையாக ரூ 2000 கோடியை ஏர் வழங்க அனுமதியும் அளித்துவிட்டது. இதைத் தொடர்ந்து ரூ 800 கோடி கடந்த நிதியாண்டில் வழங்கப்பட்டது. மீதித்தொகை இந்த ஆண்டு வழங்கப்படும்.
அடுத்து மேலும் ரூ 2000 கோடியை பங்குகள் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் [^] ரூ 14000 கோடி நஷ்டம், ரூ 18000 கோடி மூலதன கடனில் உள்ளது. இவை தவிர, ரூ 50000 கோடிக்கு புதிய விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்துள்ளது.
மாறிவரும் மருத்துவம்!
மருத்துவம் என்பது நோயால் அவதிப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களது நோயில் இருந்து பூரண குணமளிப்பதாகும். பாட்டி வைத்தியம் முதல் தற்போது ரோபோக்கள் செய்யும் அறுவை சிகிச்சை வரை அனைத்துமே மனிதனின் நோயைக் குணப்படுத்தவே உருவானதாகும்.
ஆனால், எல்லா இடங்களிலும் மருத்துவம் என்பது இதேக் கொள்கையுடன் செய்யப்படுகிறதா? இல்லை என்பதே பரவலானக் கருத்து.
மருத்துவர் என்பவர், நோயில் இருந்து நம்மைக் காப்பாற்றி, அவரது கட்டணத்தால் கொல்பவர் என்ற புதுக்கவிதை நிஜக்கதையாகி வருகிறது.
மருத்துவத் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை விட, அதில் நடக்கும் ஏமாற்று வேலைகள்தான் அதிகம். மருத்துவமனைகளில் நடக்கும் ஏமாற்று வேலைகள் சிலவற்றை தான் நாம் இதுவரை அறிந்திருப்போம். வெளிப்படையாக தெரியாமல் நமது உடலுக்குள் எத்தனையோ தேவையற்ற மருந்துகள் செலுத்தப்படுவதை எப்படி நாம் அறிவோம்?
உதாரணமாக ஒரு சில மருத்துவமனைகளில் நடக்கும் விஷயத்தைக் கூறினால் பலரால் தாங்கவே முடியாது...
தனியார்களால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் தனியாக மருந்தகமும் இயங்கிவரும். ஒவ்வொரு மாதமும், இன்னும் சில மாதங்களில் பயன்பாடு முடிவடைய உள்ள மாத்திரைகளின் பட்டியலை எடுப்பார்கள். இது எதற்கு என்றால், (அவற்றை தேர்வு செய்து அப்புறப்படுத்த அல்ல) அந்த பட்டியல் நேராக அம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களின் கைக்குச் செல்லும்.
அவ்வளவுதான், அவர்களைச் சந்திக்க வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்துகளில் எது பொருந்துமோ அவற்றை ஒரு நாளைக்கு 2 என 30 நாட்கள் சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்த நோயாளிகளோ ஏதோ உடலுக்கு நல்ல மாத்திரை என்று நினைத்து மொத்தம் 60 மாத்திரைகளையோ, மருந்தையோ வாங்கிச் செல்வர். இதில் பாதிப்பேர் அதை முழுமையாகப் போட மாட்டார்கள். அதுவும் உடலுக்கு நல்லதுதான்.
அப்படியே சிலர் முதலில் 10 மாத்திரைக் குடும்மா என்று மருந்தகப் பணியாளர்களிடம் கேட்டால், அவர்களுக்கு முன்னமே அளித்த பயிற்சியின் படி, இந்த மாத்திரை இந்த மருந்தகத்தில் மட்டும்தான் கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது. சீக்கிரம் காலியாகிவிடும். 5 நாள் கழித்து நீங்கள் வந்து கேட்டால் கூட கிடைக்காமல் போகலாம். எனவே 30 நாட்களுக்கும் சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குவார்கள். இதை நம்பி நோயாளிகள் (ஏமாளிகள்) மருந்து முழுவதையும் வாங்கிச் செல்வர்.
அந்த மாத இறுதியில், மருந்தகத்தால் எடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள அனைத்து மருந்துகளும் விற்றுத் தீர்க்கப்பட்டுவிடும் என்பதுதான் இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இது வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருக்கலாம். இன்னும் சில மருத்துவமனைகளில் நடக்கும் கொடுமை சொல்லி மாளாதது.
தனியார் மருத்துவமனைகளில் சிலவற்றில் அடிக்கடி காய்ச்சல் என்று செல்பவர்களுக்கு ரத்த சோதனை எடுக்கச் சொல்கிறார்கள். ரத்த சோதனைக்கு மட்டும் சில ஆயிரங்களைப் பிடுங்கிக் கொள்ளும் நிர்வாகம், அடுத்ததாக வைக்கப் போவதுதான் பயங்கர சோதனை.
ரத்த சோதனை முடிவில் எலி காய்ச்சல் என்று கூறி குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக பல ஆயிரங்களை கரந்து விடுவார்கள். உண்மையில் நடப்பது என்ன? அவர்களுக்கு ஏதேனும் ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சலாக இருக்கும். அதற்குண்டான மருந்து வெளிநோயாளியாகவே இருந்து சாப்பிட்டு குணமடைந்திருக்கலாம். ஆனால் இவர்களது மருத்துவமனை அறைகளை நிரப்புவதற்காக இதுபோன்று வரும் நோயாளிகளை பிடித்து அட்மிட் பண்ணுவது சரிதானா?
நோய் என்றால் மருத்துவமனையை நோக்கி விரைந்து செல்லும் மக்கள், இனி ஒரு நிமிடம் நின்று யோசிக்க வேண்டும்? நாம் போகும் மருத்துவமனை நோயை குணமாக்குமா? அல்லது நோயை உண்டாக்குமா என்று?
சில வார்த்தைகளின் நிஜங்கள்!
நாம் பேச்சு மொழியில் பல ஆங்கில வார்த்தைகளை எளிதாகப் பயன்படுத்துகின்றோம். ஆனால் அதன் விரிவாக்கம் என்ன என்பதை அறிந்திருப்பது மிகச் சிலரே.
நாம் பயன்படுத்தும் சுருக்கமான வார்த்தையின் விரிவாக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.
இது 3டி (முப்பரிமானம்) படம் என்போம். அது என்னவென்றால் 3 டைமன்சன் என்பதன் சுருக்கமாகும்.
காலை நேரத்தை ஏஎம் என்றும், இரவு நேரத்தை பிஎம் என்றும் கூறுவோம்.
ஏஎம் என்றால் ஆண்டி மெரிடியம் என்றும், பிஎம் என்றால் போஸ்ட் மெரிடியம் என்பதும் விரிவாக்கமாகும்.
கணினியைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் இமெயில். இமெயில் மூலம் மின்னஞ்சல் முகவரி உள்ள எவருக்கும் நாம் கடிதம் அனுப்பலாம். இதில் இ மெயில் என்பது எலக்ட்ரானிக் மெயில் என்பதன் சுருக்கமாகும்.
அதேப்போல, நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது, மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை டூ என்ற இடத்திலும், சிலரது முகவரியை சிசி என்ற இடத்திலும், ஒரு சிலரை பிசிசி என்ற இடத்திலும் போடுகிறோம்.
சிசி என்றால் என்ன? பிசிசி என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சிசி என்றால் கார்பன் காபி என்று பொருள். இந்த முகவரியில் சேர்க்கப்படுபவர்களுக்கும், நாம் இன்னாருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் சேர்க்கப்படுவதாகும்.
பிசிசி என்றால், பிளைன்ட் கார்பன் காபி என்று பொருள். பிசிசியில் சேர்க்கப்படும் முகவரி மற்றவருக்குத் தெரியாது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் பயன்படுத்தும் வார்த்தை ஏடிஎம் கார்ட் என்பதாகும். ஏடிஎம் என்றால் ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின் என்பதாகும்.
செல்பேசியில் நாம் நண்பர்களுக்கு அனுப்பும் குறுந்தகவலான எஸ்எம்எஸ் என்பதற்கு ஷார்ட் மெசேஜ் சர்வீஸ் என்பதுதான் விரிவாக்கமாகும்.
நாம் வாய்க்கு வாய் சொல்லும் ஓகே என்பதன் விரிவாக்கம், ஆல் கரைக்ட் என்பதாகும்.
இதற்கு மேல் உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளின் விரிவாக்கத்தை நீங்கள் சொல்லலாம்.
நாம் பயன்படுத்தும் சுருக்கமான வார்த்தையின் விரிவாக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.
இது 3டி (முப்பரிமானம்) படம் என்போம். அது என்னவென்றால் 3 டைமன்சன் என்பதன் சுருக்கமாகும்.
காலை நேரத்தை ஏஎம் என்றும், இரவு நேரத்தை பிஎம் என்றும் கூறுவோம்.
ஏஎம் என்றால் ஆண்டி மெரிடியம் என்றும், பிஎம் என்றால் போஸ்ட் மெரிடியம் என்பதும் விரிவாக்கமாகும்.
கணினியைப் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் இமெயில். இமெயில் மூலம் மின்னஞ்சல் முகவரி உள்ள எவருக்கும் நாம் கடிதம் அனுப்பலாம். இதில் இ மெயில் என்பது எலக்ட்ரானிக் மெயில் என்பதன் சுருக்கமாகும்.
அதேப்போல, நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது, மின்னஞ்சல் அனுப்பப்பட வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை டூ என்ற இடத்திலும், சிலரது முகவரியை சிசி என்ற இடத்திலும், ஒரு சிலரை பிசிசி என்ற இடத்திலும் போடுகிறோம்.
சிசி என்றால் என்ன? பிசிசி என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சிசி என்றால் கார்பன் காபி என்று பொருள். இந்த முகவரியில் சேர்க்கப்படுபவர்களுக்கும், நாம் இன்னாருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் சேர்க்கப்படுவதாகும்.
பிசிசி என்றால், பிளைன்ட் கார்பன் காபி என்று பொருள். பிசிசியில் சேர்க்கப்படும் முகவரி மற்றவருக்குத் தெரியாது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரும் பயன்படுத்தும் வார்த்தை ஏடிஎம் கார்ட் என்பதாகும். ஏடிஎம் என்றால் ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின் என்பதாகும்.
செல்பேசியில் நாம் நண்பர்களுக்கு அனுப்பும் குறுந்தகவலான எஸ்எம்எஸ் என்பதற்கு ஷார்ட் மெசேஜ் சர்வீஸ் என்பதுதான் விரிவாக்கமாகும்.
நாம் வாய்க்கு வாய் சொல்லும் ஓகே என்பதன் விரிவாக்கம், ஆல் கரைக்ட் என்பதாகும்.
இதற்கு மேல் உங்களுக்குத் தெரிந்த வார்த்தைகளின் விரிவாக்கத்தை நீங்கள் சொல்லலாம்.
தீப்பிடிக்காத அற்புதக் கூரைகள்!
இயற்கை நமக்குத் தந்த செல்வம் சம்பா புல்! சம்பங்கோரை என்று தமிழிலக்கியம் கூறும் இப்புல் ஏரிகளில்தான் வளரும் (விளையும்). இதன் சிறப்பு தீப்பற்றினால் பிறவகை புற்கள், கீற்றுகள் போல் கொழுந்து விட்டெரியாது. வீணர்களாலோ மற்றும் அறியாமலோ பிற வகையான கூரைகள் தீப்பிடித்தால் கூட நீண்ட நேரம் எரியும். ஆனால் சம்பா புல் மட்டும் தீப்பிடித்ல் ஓரிரு அடிகள் கூட பரவாது. கருகி அங்கேயே புகை மண்டும். புகையை நாம் பார்த்தமட்டில் தண்ணீர் விட்டு அணைக்கலாம். கருகிய சிறு பாகத்தை நீக்கிவிட்டு செலவின்றி அப்படியே சரிசெய்துவிடலாம்.
இயற்கை நமக்களித்த கொடை இதுவாகும். உலகில் இது போன்ற ஒருவகைப் புல் இனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திண்டிவனம் வட்டத்தில் உப்பு வேலூரில் அதை அடுத்த கிராம ஏரிகளில் இச்சம்பா புல் விளைகிறது. மஞ்சம் புல்லைவிட அடர்தியாக விளைகிறது. எடையும் குறைவானது. உப்பு வேலூர் பக்கமுள்ள கிராமங்களில் வீடு கட்ட, கல்நடைக் கொட்டகைகள் அமைக்க இப்புல்லை உபயோகிக்கின்றனர். கூரை வேய்ந்தால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும். செலவின்றி ஏரியில் வளரும் சம்பா புல்லால் நீர் நிரம்பிய போது சுற்றியும் குளிர்ந்த காற்று வீசும்.
சிமெண்டு ஓடு கூரைக்குச் சார்பாகக் குரல் எழுப்புவோர், தென் ஓலைக் கூரையில் வாழ்க்கை நடத்துபவர்களையும் ஆதரித்துப் பேசுபவர்கட்கு இடையில் இந்த ஓர் அரிய செய்தியை அறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். சிமெண்ட் ஓடு கூரைக்கும், மஞ்சம்புல் வேய்ந்த கூரைக்கும் ஆகும் செலவையும் எண்ணிப் பார்த்தால் செலவு குறைவதுடன் சற்று நீடித்த கூரையின் ஆயுள், உடலாரோக்கியம், தீ பற்றிய பயமின்மை என அறிந்திடின் சம்பாபுல் கூரையே சிறந்ததாகும்.
மஞ்சம்புல் கூரையை விட மூன்றாண்டுகள் நீடித்த ஆயுள் சம்பா புல் கூரைக்கே உண்டு என்பது சிறப்பு. அரசு தற்போது ஏரிகளில் கருவேல் மரங்களை வளர்த்து வருகின்றனர். அதனால் தீங்கு அதிகம். அம்மரங்கள் நீரினை அதிகம் உறிஞ்சுகிறது. சுற்றுப்புறச் சூழலை கெடுக்கிறது. நிலவளமும் பாழ்படுகிறது. பதிலாக சம்பாபுல் ஏரிகளில் வளர்த்தால் தீமைகளின்றி குடிசைகள் செம்மைப்படும். இந்த அற்புதக் கூரைகளைப் பற்றி நாமும் சிந்திப்போம்.
இயற்கை நமக்களித்த கொடை இதுவாகும். உலகில் இது போன்ற ஒருவகைப் புல் இனம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் திண்டிவனம் வட்டத்தில் உப்பு வேலூரில் அதை அடுத்த கிராம ஏரிகளில் இச்சம்பா புல் விளைகிறது. மஞ்சம் புல்லைவிட அடர்தியாக விளைகிறது. எடையும் குறைவானது. உப்பு வேலூர் பக்கமுள்ள கிராமங்களில் வீடு கட்ட, கல்நடைக் கொட்டகைகள் அமைக்க இப்புல்லை உபயோகிக்கின்றனர். கூரை வேய்ந்தால் கோடையிலும் குளிர்ச்சியாக இருக்கும். செலவின்றி ஏரியில் வளரும் சம்பா புல்லால் நீர் நிரம்பிய போது சுற்றியும் குளிர்ந்த காற்று வீசும்.
சிமெண்டு ஓடு கூரைக்குச் சார்பாகக் குரல் எழுப்புவோர், தென் ஓலைக் கூரையில் வாழ்க்கை நடத்துபவர்களையும் ஆதரித்துப் பேசுபவர்கட்கு இடையில் இந்த ஓர் அரிய செய்தியை அறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். சிமெண்ட் ஓடு கூரைக்கும், மஞ்சம்புல் வேய்ந்த கூரைக்கும் ஆகும் செலவையும் எண்ணிப் பார்த்தால் செலவு குறைவதுடன் சற்று நீடித்த கூரையின் ஆயுள், உடலாரோக்கியம், தீ பற்றிய பயமின்மை என அறிந்திடின் சம்பாபுல் கூரையே சிறந்ததாகும்.
மஞ்சம்புல் கூரையை விட மூன்றாண்டுகள் நீடித்த ஆயுள் சம்பா புல் கூரைக்கே உண்டு என்பது சிறப்பு. அரசு தற்போது ஏரிகளில் கருவேல் மரங்களை வளர்த்து வருகின்றனர். அதனால் தீங்கு அதிகம். அம்மரங்கள் நீரினை அதிகம் உறிஞ்சுகிறது. சுற்றுப்புறச் சூழலை கெடுக்கிறது. நிலவளமும் பாழ்படுகிறது. பதிலாக சம்பாபுல் ஏரிகளில் வளர்த்தால் தீமைகளின்றி குடிசைகள் செம்மைப்படும். இந்த அற்புதக் கூரைகளைப் பற்றி நாமும் சிந்திப்போம்.
சனி, 9 அக்டோபர், 2010
'இந்தியாவின் சொத்து மதிப்பு 6.4 டிரில்லியன் டாலராக உயரும்'!
டெல்லி: அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியாவின் சொத்து மதிப்பு 6.4 டிரில்லியன் டாலராக உயரும் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் உள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சொத்து வளம் 6.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கிரடிட் சூஸ் குளோபல் வெல்த் அறிக்கை தெரிவித்துள்ளது.
இது தற்போதுள்ள மதிப்பை விட 2 மடங்கு அதிகமாகும். தற்போது இந்தியாவின் சொத்து மதிப்பு 3.5 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. 2015ல் இது 6.4 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்து விடும்.
உலகளாவிய சொத்து மதிப்பு 195 டிரில்லியன் டாலர்களாக உள்ளது. இது 2015ல் 135 டிரில்லியன் டாலர்களாக எகிறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவிலான கோடீஸ்வரர்களைக் கொண்ட கண்டமாக ஆசியாதான் திகழ்கிறதாம். ஐரோப்பாவை விட ஆசியா பசிபிக் பிராந்தியத்தில்தான் பெருமளவில் கோடீஸ்வரர்கள் உள்ளனர். உலகம் [^] முழுவதும் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 1000 ஆகும். இவர்களில் வட அமெரிக்காவில் 500 பேரும், ஆசியா பசிபிக்கில் 245 பேரும் உள்ளனர். ஐரோப்பாவில் 230 பேர் மட்டுமே உள்ளனர்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்து ரஹ்மான் இசையில் பாட்டு-தெர்தலனையம் திட்டம்!
வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பாடலை உருவாக்குவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அனுகவுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.குரேஷி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு மக்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பாடலை உருவாக்க தீர்மானித்துள்ளோம்.
இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை அணுக திட்டமிட்டுள்ளோம். அவரை அணுகி அவரிடமிருந்து விழிப்புணர்வு பாடலைப் பெற்று, காட்சிப்படுத்தி, அதை நாடு முழுவதும் ஒளிபரப்பி வாக்களிப்பதன் அவசியத்தை மக்களிடையே பரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
விரைவில் இதுதொடர்பாக ரஹ்மானை தேர்தல் ஆணையம் அணுகும் என்றார்.
2011-ம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள்!
2011-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் 2011 ஆம் ஆண்டில் மொத்தம் 24 அரசு விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது.
அதாவது,
ஆங்கில புத்தாண்டு (ஜனவரி 1, சனிக்கிழமை)
தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் (ஜன.15 சனி)
திருவள்ளுவர் தினம் (ஜன.16, ஞாயிறு)
உழவர் திருநாள் (ஜன.17, திங்கள்)
குடியரசு தினம் (ஜன.26, புதன்கிழமை)
மீலாது நபி (பிப்.16, புதன்)
ஆண்டு வங்கிக்கணக்கு முடிக்கும் நாள் (ஏப்ரல் 1, வெள்ளி)
தெலுங்கு வருடபிறப்பு (ஏப்.4, திங்கள்)
அம்பேத்கர் பிறந்தநாள் (ஏப்.14 வியாழன்)
மகாவீர் ஜெயந்தி (ஏப்.16, சனி)
புனிதவெள்ளி (ஏப்.22, வெள்ளி)
மே தினம் (மே 1, ஞாயிறு)
சுதந்திர தினம் (ஆக.15, திங்கள்)
கிருஷ்ண ஜெயந்தி (ஆக.21, ஞாயிறு)
ரம்ஜான் (ஆக.31, புதன்)
விநாயகர் சதுர்த்தி (செப்.1, வியாழன்)
வங்கிகளில் அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் (செப்.30, வெள்ளி);
காந்தி ஜெயந்தி (அக்.2, ஞாயிறு)
ஆயுத பூஜை (அக்.5, புதன்)
விஜயதசமி (அக்.6, வியாழன்)
தீபாவளி (அக்.26, தீபாவளி புதன்)
பக்ரீத் (நவ.7, திங்கள்)
முகர்ரம் (டிச.6, செவ்வாய்)
கிறிஸ்துமஸ் (டிச.25, ஞாயிறு)
மேற்கண்ட 24 விடுமுறை தினங்களில், 8 நாட்கள், சனி, ஞாயிறு ஆகிய வழக்கமான விடுமுறை நாட்களில் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விடுமுறை நாட்களை மனதில் கொண்டு உங்களது சுற்றுலாப் பயணத்தை நீங்கள் திட்டமிடலாம்.
புதன், 6 அக்டோபர், 2010
தீபாவளிப் பண்டிகையன்று இந்தியா வருகிறார் அதிபர் ஒபாமா!
டெல்லி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தீபாவளிப் பண்டிகையன்று தனது இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார்.
முன்னதாக நவம்பர் 7ம் தேதி ஒபாமா இந்தியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய மக்களின் பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி 5ம் தேதி கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் இந்தியாவில் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒபாமாவின் பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 4ம் தேதி இரவு இந்தியா புறப்படுகிறார் ஒபாமா. தீபாவளியன்று இரவு அவர் இந்தியா வருகிறார். முதலில் மும்பை செல்கிறார். அங்கு வர்த்தக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறா்.
பின்னர் 7ம் தேதி அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப் போகிறார். 8ம் தேதி டெல்லி வருகிறார். அங்கு அவருக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு ஒபாமா உரை நிகழ்த்துகிறார்.
தனது இந்தியப் பயணத்தை அன்று முடிக்கும் ஒபாமா அங்கிருந்து இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரிய சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
ஒபாமாவுடன் மனைவி மிச்சல் வருகிறார். ஆனால் மகள்கள் சாஷாவையும், மலியாவையும் அழைத்து வரவில்லையாம். அவர்களுக்கு ஸ்கூலில் லீவு கொடுக்கவில்லையாம், இதனால் அவர்களை விட்டு விட்டு ஒபாமா தம்பதி மட்டும் வருகிறார்களாம்.
விரைவில் சீனாவை 'ஓரங்கட்டிவிடும்' இந்தியா - தி எகானமிஸ்ட்!
வாஷிங்டன்: பொருளாதாரம் [^] உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரைவில் சீனாவை விட மேம்பட்ட நிலையை இந்தியா அடையும், என தி எகானமிஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள எகானமிஸ்ட் இதழில் 'How India's growth will outpace China's' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியாகியுள்ளது. அதில் பொருளாதார அதிசயங்கள் புரியும் சக்தியாக இந்தியா எப்படி மாறியது என்று அலசப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரசியல் [^] ஸ்திரத்தன்மை வேண்டுமானால் கேள்விக் குறியாக இருக்கலாம், ஆனால் அங்குள்ள தனியார் நிறுவனங்கள் மிகவும் வலுவானவை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "எத்தனை சவால்கள் வந்தாலும் அதுபற்றி பெரிதாக இந்தியா அலட்டிக் கொள்வதில்லை. உதாரணத்துக்கு, சமீபத்திய காமன்வெல்த் போட்டிகள் பற்றி எத்தனையோ மோசமான செய்திகள் [^] வந்தன. ஆனால் இறுதியில் அவற்றைப் பொய்யாக்கி, சர்வதேசத் தரத்தில் சற்றும் குறைவில்லாமல் போட்டிகளை நடத்துகிறது.. அதுதான் இந்தியாவின் ஸ்பெஷல்.
இந்த ஆண்டு நிச்சயம் 8.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டும். இதற்கு இந்தியாவின் மக்களாட்சி முறையும் கூட பெருமளவு உதவும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவை விட சீனா பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் 2013-ல் சீனாவை விட பெரிய, வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழும், என்கிறது அக்கட்டுரை.
குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தில் தீவிரமாக உள்ள சீனாவில், உழைக்கும் மக்கள் தொகை விரைவிலேயே ஓய்வு பெறும் வயதை அடைந்துவிடும் என்றும், அதே நேரம், இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் அதன் உச்சகட்ட வீரியத்தில் இருக்கும் என்றும் இக்கட்டுரை ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு சீனாவை விட இந்தியாதான் பெட்டர் சாய்ஸ் என்று கூறியுள்ளது எகானமிஸ்ட்.
சேதமடையும் உலக அதிசயம்!
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அதனைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளாலேயே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.
எறும்பு ஊரக் கல்லும் கரையும் என்பது போல, சீன நாட்டையே கட்டிக் காக்கும் அரணாக உள்ள சீனப் பெருஞ்சுவர் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள சீனப்பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்து உள்ளது.
இவ்வளவுப் பெருமை மிக்க சீனப் பெருஞ்சுவரைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் மேலானோர் சீனாவுக்கு வருகிறார்கள். இதனால் சீனப் பெருஞ்சுவரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சீனப் பெருஞ்சுவரைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள், அங்கிருந்தபடியே சாப்பிடுவது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை செய்கின்றனர். சாப்பாடுகள் கொண்டு வந்த பாலித்தீன் பைகளையும், குளிர்பான பாட்டில்களையும், மதுபாட்டில்களையும் அப்படியே வீசி விட்டு செல்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் இப்படி குப்பைகளை அள்ளி வீசும் குப்பைத் தொட்டியாக சீனப் பெருஞ்சுவர் மாறி வருகிறது. இதனால் சீனப் பெருஞ்சுவரின் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது.
பீஜிங் அருகே உள்ள படாலிங் என்ற இடத்தில் உள்ள சீனப்பெருஞ்சுவரில் சுற்றுலா பயணிகள் கூடாரம் அமைத்து இரவு நேரத்தைக் கழிக்கிறார்கள். கூடாரம் அமைப்பதற்காக சீனப் பெருஞ்சுவரில் இரு கற்களுக்கு இடையே உள்ள சிமெண்ட் பகுதியில் ஆணி அடிப்பது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். போகும் போது அந்த ஆணிகளை அவசர கதியில் பிடுங்குவதால் பல இடங்களில் சுவர்கள் சேதமடைந்து வருகிறது.
இது நாளுக்கு நாள் தொடர் கதையாகி வருவதால் சில இடங்களில் சுவர் பலத்த சேதம் அடைந்துள்ளது. இப்படியே சென்றால் நமது சந்ததிகளுக்கு சீனப் பெருஞ்சுவரின் கற்குவியலைத்தான் காண்பிக்க இயலும். இந்த நிலையை மாற்ற யுனெஸ்கோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக சுற்றுலா செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்லும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பை உணர வேண்டும். நமக்குப் பின் வருபவர்களுக்கு அது ஒரு சுற்றுலாத் தளமாக இல்லாமல், குப்பைத் தொட்டியாக காட்சி அளிக்க இடம் தரக் கூடாது. ஒரு இடத்தை தூய்மைப் படுத்தாமல் வேண்டுமானால் இருங்கள், ஆனால் அசுத்தமாக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை உணருவோம். சுற்றுலாவை மகிழ்ச்சியாக கழிப்போம்.
திங்கள், 4 அக்டோபர், 2010
மைக்ரோசாப்டை பின்னுக்குத் தள்ளிய ஆப்பிள்!
சியாட்டில்: தொன்னூறுகளின் இறுதியில் நடந்த மேக்ஸ்வேர்ல்டு எக்ஸ்போ கண்காட்சி...
அன்றைக்கு மிகவும் சிக்கலில் மூழ்கியிருந்தது ஆப்பிள் நிறுவனம். அதன் தயாரிப்புகள் எதுவும் வேலைக்காகவில்லை. அந்த சமயத்தில் இந்த நிறுவனத்தில் 150 மில்லியன் டாலர் முதலீடு செய்து, முட்டுக் கொடுத்து நிறுத்தியது ஒரு நிறுவனம்.... அது.. ஆப்பிளின் பரம எதிரி எனப்பட்ட பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட்!.
கிட்டத்தட்ட மூழ்கிக் கொண்டிருந்த ஒரு கப்பலை மேலே கொண்டு வந்ததைப் போன்ற ஒரு பணியை பில் கேட்ஸ் செய்தார். ஓட்டளிப்பு உரிமையில்லாத பங்குகளை அவர் வாங்கிக் கொண்டார். அத்துடன் ஆப்பிள் கம்ப்யூட்டர்களிலும் செயல்படத்தக்க விதத்தில் மைக்ரோசாப்ட் மென்மொருளை உருவாக்கிக் கொடுத்தார் (முன்பு ஆப்பிள் கணிப்பொறிகளை வாங்க அனைவரும் தயங்கியதற்குக் காரணம், மைகேரோசாப்ட் மென்பொருளை அவற்றில் செயல்படுத்த முடியாமலிருந்ததுதான்!). அன்றைக்கு கம்ப்யூட்டர் உலகின் முடிசூடா மன்னன் மைக்ரோசாப்ட்தான். அதற்கு மாற்றே இல்லாத நிலை.
13 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிலைமை அப்படியே தலைகீழ்... ஐபோன், ஐபாட், ஐபேட் என ஆப்பிள் தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலை. சந்தை மூலதன மதிப்பில் இன்று மைக்ரோசாப்டை அப்படியே பின்னுக்குத் தள்ளிவிட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் தலைமையிலான ஆப்பிள்!
இன்றைய நிலவரப்படி ஆப்பிளின் மார்க்கெட் மதிப்பு 241.5 பில்லியன். மைக்ரோசாப்ட் மதிப்பு 239.5 பில்லியன் டாலர்!
அமெரிக்க நிறுவனங்களில் இரண்டாவது இடம் கிடைத்துள்ளது ஆப்பிளுக்கு. அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள மைக்ரோசாப்ட்.
நிச்சயம் தனது நிறுவனத்துக்கு இப்படியொரு நிலை வரும் என்று பில்கேட்ஸ் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்கிறது அமெரிக்காவின் பிரபல பத்திரிகை. அதாவது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதென்பார்களே... அப்படி ஒரு நிலை பில்கேட்ஸுக்கு. காரணம், ஆப்பிளில் முதலீடு செய்யுமாறு கூவிக் கூவி அழைத்தும் ஒரு டாலர் தரக்கூட ஒருவரும் முன்வரவில்லை அன்றைக்கு!
அன்று ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு பில்கேட்ஸ் தேவைப்பட்டார். இன்று சரிவிலிருந்து நிமிர பில்கேட்ஸுக்கு ஒரு ஸ்டீவ் பால்மர் (மைக்ரோசாப்ட்டின் இன்றைய சிஇஓ) மட்டும் போதாது, ஸ்டீவ் ஜாப்ஸ்களும் தேவை என்று கமெண்ட் அடித்துள்ளது அந்தப் பத்திரிகை.
காப்புரிமை மீறல்... மோட்டரோலா மீது மைக்ரோசாப்ட் வழக்கு!
நியூயார்க்: ஆன்ட்ராய்ட் செல்போன்களின் காப்புரிமை தொடர்பாக மோட்டாரோலா நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது மைக்ரோசாப்ட்.
மொத்தம் 9 காப்புரிமைகளுக்கு உரிமை கோரி் மைக்ரோசாப்ட் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் துணைத் தலைவர் ஹொராசியோ கடிரெஸ் கூறுகையில், "மோட்டாரோலாவின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களில் காலண்டர், இமெயில் சேவை, கான்டாக்ட்ஸ், மீட்டிங் ஷெட்யூல், சிக்னல் ஸ்ட்ரெங்த், பேட்டரி பவர் உள்ளிட்ட 9 வகைப் பயன்பாடுகள் மைக்ரோசாப்ட்டின் மென்பொருள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன.
எனவே சர்வதேச வர்த்தக ஆணையத்திடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றத்திலும் காப்புரிமை வழக்குத் தொடர்ந்துள்ளோம்" என்றார்.
இனி ஆன்ட்ராய்ட் போன்களில் தமது தொழில்நுட்பத்தை மோட்டரோலா பயன்படுத்த தடை கோரியும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)