
பெங்களூர்: கடந்த நிதியாண்டில் சம்பளத் தொகைக்காக மட்டும் ரூ.600 கோடி செலவிட்டுள்ளது இன்போசிஸ்.
இந்திய ஐடி துறையில் இதுவரை எந்த நிறுவனமும், ஒராண்டுக்கு இவ்வளவு சம்பளத்தொகை ஒதுக்கியதில்லை என கூறப்படுகிறது.
அதோடு, வரும் 2011ம் ஆண்டில் மேலும் 30 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தவும் இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு (2011) பணியாளர் தேர்வுக்கான 'கேம்பஸ் இன்டர்வியூ'க்களையும் முன்னதாகவே செய்து முடித்துவிட்டது இன்போசிஸ்.
2011ம் ஆண்டில் பணியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே 19 ஆயிரம் பேருக்கு 'ஆஃபர்' வழங்கப்பட்டுள்ளது என்று இன்போசிஸ் தலைவர் டிவி மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.
இதுபற்றி பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய மோகன்தாஸ்,
'இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் சீன அலுவலகங்களுக்காக ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மணிலாவில் 400 பேர் தேவை.
இதுதவிர நேரடி தேர்வு மூலமாகவும் 6,500 வரையிலான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
நிறுவனத்தின் நடுத்தர மற்றும் ஜூனியர் நிலை பணியாளர்களுக்கு பெரியளவிலான சம்பள உயர்வு தரப்பட்டுள்ளது. சீனியர் நிலையில் இருப்பவர்களுக்கு 10 சதவீத உயர்வு வழங்கப்படுகிறது.
சராசரியாக ஊதிய உயர்வு 14 முதல் 17 சதவீதம் வரை தரப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் இன்போசிஸ் மூலமாக தகுதி உயர்வு பெற்றிருக்கிறார்கள்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக