
நாகர்கோவில்: 92 வயதாகும் குமரி மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்த பெரியவர் குட்டி நாடார் தனது உடலை தானம் செய்வதாக நாகர்கோவில் அரசு [^] மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கடிதம் அளித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள ஊர் குன்னத்தூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் குட்டி நாடார். 92 வயதான இவர் ஒரு பத்திர எழுத்தர் ஆவார். இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.
நாடு 64வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டுக்காக ஏதாவது செய்ய விரும்பினார் குட்டி நாடார். இதையடுத்து தனது உடலை தானமாக அளிக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற அவர் அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் [^] மோகன் [^] ராமை சந்தித்து தனது உடலை தானமாக அளிக்க முன்வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பான ஒப்புதல் கடிதத்தையும் முதல்வரிடம் அவர் அளித்து விட்டுச் சென்றார்.
92 வயதில் உடலைத் தானமாக வழங்குவதாக மருத்துவக் கல்லூரிக்கு நேரில் வந்து ஒப்புதல் கடிதம் அளித்த அந்தப் பெரியவரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக