
ஊட்டி: ரத்தப் புற்று நோய்க்கு சிகி்ச்சை பெற பண வசதி இல்லாமல், நிதியுதவி நாடி நிற்கிறான் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள மேல்ஓடன் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி [^] பிந்து. இவர்களுக்கு தர்சித், தர்னேஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இதில் 5 வயதாகும் தர்னேஷ் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்த சிகிச்சைக்கு ரூ. 4 லட்சம் தேவைப்படும் என்று வேலூர் [^] கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், விவசாயக் கூலியாக இருக்கும் ராஜுவுக்கு தனது மகனுக்கு சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பண வசதியில்லை. எனவே தாராள மனம் படைத்தவர்கள் தர்னேஷின் சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்கு உதவிட விருப்பம் உள்ளவர்கள் உதவலாம்
மாஸ்டர் தர்னேஷ்
த/பெ ஹெச். ராஜு
எண் - 1 /69 B2 மேல் ஓடன் கிராமம்,
மிலித்தேன் அஞ்சல்,
கோத்தகிரி,
நீலிகிரி மாவட்டம் - 643 217.
செல் - 97860 24419.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக