ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

பிஎஸ்என்எல்லின் கையடக்க கணிணி... விலை ஜஸ்ட் ரூ 3250!

டெல்லி; பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் இப்போது கையடக்க கணிகளை உருவாக்கி உள்ளது. 3 மாடல்களில் இந்த கையடக்க கணிணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பான்டெல் என்ற நிறுவனத்துடன் இணைந்து இவை உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு ரூ3,250, ரூ10,999 மற்றும் ரூ 13,500 ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த மாடலான "T-PAD IS701R"-ல், 2ஜிபி மெமரியும் 256எம்பி ராமும் கொண்டது. இந்த 2ஜிபியை 32ஜிபி வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு. அடுத்த மாடல் "T-Pad WS704C". இது 512MB DDRIII ராம் கொண்டது. இதை தொலைக்காட்சியுடன் இணைத்துக் கொள்ளலாம். விலை உயர்ந்த மாடல் "T-PAD WS802C". 1.2ஜிகாஹெர்ட்ஸ் பிராசசர் கொண்டது. இவை 7 முதல் 8 இஞ்ச் வரையிலான திரையுடன் ஆண்ட்ராய்ட் 2.3 ஐ ஆபரேடிங் சிஸ்டமாகவும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மத்திய அரசு ஆகாஷ் கையடக்க கணிணிகளை இதைவிட குறைவான விலைக்கு உருவாக்கி இருந்தாலும் பயன்பாடு ரீதியான பி.எஸ்.என்.எல். தயாரிப்பு முக்கியத்துவம் பெறும் என்பது சந்தை வல்லுநர்களின் கருத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக