
நியூசிலாந்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலத்திற்கு விட்டார். அதை ஒருவர் 36,000 டாலருக்கு ஏலம் கேட்டார். அதை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவர் நார்த்லேன்ட் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி. தன்னை யுனிகேர்ள் என்று பெயரில் அடையாளம் காட்டியுள்ளார். முழு விவரங்களை வெளியிடவில்லை. நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்தில், தனது படிப்புச் செலவுக்காக, தான் பாதுகாத்து வரும் கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்திருந்தார்.
இந்த ஏலம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாம். இதுகுறித்து அந்தப் பெண் வெளியிட்டுள்ள செய்தியில், எனது விளம்பரத்தைப் 30,000 பேர் பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. அவர்களில் 1200 பேர் ஏலம் கேட்டிருந்தனர். அவர்களில் 45,000 நியூசிலாந்து டாலருக்கு (அமெரிக்க டாலரில் 36,000) ஏலம் கேட்டவரை நான் தேர்வு செய்துள்ளேன். இது நான் கனவில் கூட நினைத்துப் பார்த்திராத தொகையாகும் என்று கூறியுள்ளார் அவர்.
இப்படிப்பட்ட விளம்பரத்தை பிரசுரித்தது குறித்து அந்த இணையதளம் நியாயப்படுத்தியுள்ளது. இதுகுறித்து அது கூறுகையில், ஒவ்வொருவரும் தங்களது பொருளை ஏலம் விடுவதற்கு உரிமை உண்டு. கன்னித்தன்மையும் கூட ஒருவரின் பொருள் போலத்தான். எனவே இதை ஏற்க முடியாது என்று நாங்கள் மறுக்க முடியாது என்று கூறியுள்ளது அது.
முன்னதாக யுனிகேர்ள் கொடுத்திருந்த விளம்பரத்தில், நான் பார்க்க கவர்ச்சிகரமாக இருப்பேன். ஒருமுறை கூட நான் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதில்லை. இன்னும் கன்னித்தன்மையுடன் இருக்கிறேன். இதை தற்போது நான் ஏலம் விடுகிறேன்.
இது நான் முழு மனதுடன் எடுத்த மிகத் தெளிவான முடிவு. மிகவும் சுகாதாரமாகவும், உடல் ரீதியாக நல்ல நலனுடனும் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடலில் எந்தவிதமான மருத்து ரீதியான பிரச்சினைகளும் இல்லை. உடலை வனப்புடனும், திடகாத்திரமாகவும் வைத்துள்ளேன் என்று கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக