வெள்ளி, 25 நவம்பர், 2011

விக்கிபீடியாவுக்கு கூகுள் நிறுவனர் ரூ. 2.5 கோடி நிதியுதவி!


வாஷிங்டன்: விக்கிபீடியா ஆன்லைன் கலைக்களஞ்சிய இணையத்தளத்துக்கு ரூ. 2.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் கூகுள் இணையத்தளத்தின் இணை நிறுவனரான செர்கே பிரின்.

செர்கேயும் அவரது மனைவி ஆன் வோசிகியும் இணைந்து உருவாக்கியுள்ள பிரின்-வோசிகி அறக்கட்டளை மூலமாக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட விக்கிபீடியா, இந்த வாரம் தான் தனது வருடாந்திர நிதி திரட்டும் பணியைத் துவக்கியது.

விக்கிபீடியா மற்றும் அதன் இணைத்தளங்கள் தான் இன்டர்நெட்டில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் 5வது இணையங்களாகும்.

தமிழ் உள்பட 280க்கும் அதிகமான மொழிகளில் விக்கிபீடியா இயங்குகிறது. உலகெங்கும் சுமார் 1 லட்சம் ஆர்வலர்கள் தான் இந்தத் தளத்தில் பதிவுகளை ஏற்றுகின்றனர். விக்கிபீடியா நிறுவனத்தில் நேரடியாக பணியில் உள்ளவர்கள் வெறும் 95 ஊழியர்கள் மட்டுமே.

இந்த இணையத்தளத்தில் விளம்பரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் நன்கொடைகளை நம்பியே இந்த நிறுவனம் இயங்க வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக