சனி, 31 டிசம்பர், 2011
செவ்வாய், 29 நவம்பர், 2011
மோதிர விரல் நீளமா இருக்கா? அதிர்ஷ்டசாலிதான் நீங்கள் – ஆய்வில் தகவல்!
சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.
நோய்களை அறிந்து கொள்ளலாம்
ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.
விரலும் ஆய்வு முடிவும்
ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.
கவர்ச்சிகரமான ஆண்கள்
ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.
ஹார்மோன் தூண்டப்படும்
ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.
ஆண்மை அதிகரிக்கும்
ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
உறவில் உற்சாகம்
150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.
என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?
தங்கம் வாங்க புதியத் திட்டம்!

மும்பை: தங்கம் வாங்க இனிமேல், நகைக்கடைகளுக்குச் சென்று கூட்டத்தில் நெரிபடத் தேவையில்லை. ஏ.டி.எம்-மில் ஒரு பட்டனைத் தட்டினால் போதும் , இரண்டே நிமிடங்களில் இனி தங்கத்தை வாங்கி விடலாம். மும்பையில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு ஷாப்பிங் மகாலில், இந்தத் தங்கம் வழங்கும் ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது.
10 கிராம் தங்கத்திற்கு 31 ஆயிரம் ரூபாயும், 20 கிராம் வெள்ளிக்கு, ஆயிரத்து 400 ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவை தவிர, வைரமும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்போவதாகக் கூறுகிறது அந்தக் கடைத்தொகுதி நிறுவனம்.
தொடுதிரை தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஏ.டி.எம் கருவியில், நமக்குத் தேவையான அளவு தங்கத்தைத் தேர்வு செய்து பணம் செலுத்தினால், உடனடியாக தங்கக் கட்டிகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் நாடு முழுவதும் 300 தங்க ஏ.டி.எம் கருவிகளை நிறுவப் போவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
2 மாதங்களாக மனித தொண்டை பகுதியில் உயிர் வாழ்ந்த அட்டைப் பூச்சி!

சீனா: சுமார் 4 அங்குலம் நீளமுள்ள அட்டை பூச்சி, 16 வயது நிறம்பிய சிறுவனின் சுவாசக்குழலில் சுமார் 2 மாத காலமாக உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.
அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். அங்கிருந்து அகற்றப்பட்ட பிறகும், அது உயிராக இருந்தது.
டோ ஜியாவான் என்ற 16 வயது நிரம்பிய சிறுவன் இரண்டு மாதங்களாக தொண்டை புண்ணால் அவதியுற்றான். அச்சிறுவனின் பெற்றோர் அவனை
மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், 4 அங்குல நீளமுள்ள அட்டை பூச்சி அவன் தொண்டையில் உயிரோடு
இருப்பதாக கண்டறிந்தனர்.
பின்பு, அறுவை சிகிச்சையின் காரணமாக அச்சிறுவனுக்கு அளித்த மயக்க மருந்தின் மூலம் கூட அது இறக்கவில்லை என்பது மிக ஆச்சரியமான ஒன்று என
மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரோடு அந்த பூச்சி அகற்றப்பட்டது.
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை!
உணவில் அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நாம் அதிக அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும் சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆபத்தான சர்க்கரை:-
சிகரெட், மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய் இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.
சர்க்கரை தேவையில்லை:-
சர்க்கரையை உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது. வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால் உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்
நோயாளிகளாக மாறும் குழந்தைகள்:-
குளிர்பானங்கள், செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
புற்றுநோய் கட்டிகள்:-
உடலில் அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின் ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சனி, 26 நவம்பர், 2011
52 ரூபாய்க்கு ஒரு ஜோடி அடிடாஸ் ஷூ-விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விளையாட்டு அணிகலன், ஷூக்கள், உபகரண தயாரிப்பாளரான அடிடாஸ் நிறுவனம் ரூ. 52 மட்டுமே விலை கொண்ட மலிவு விலை ஷூவை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ ஹெர்பர்ட் ஹெய்னர் கூறுகையில், இதை வங்கதேசத்தில் தொடங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அந்த முயற்சி கை கூடவில்லை. விரைவில் இந்த ஷூவை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அத்தனை கிராமங்களிலும் இந்த மலிவு விலை ஷூவை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இடம், எப்போது என்பது இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் இது நடைபெறும் என்றார்.
ஒரு டாலர் விலையிலான இந்த ஷூவானது கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மார்க்கெட்டை குறி வைத்து இந்த ஷூவை களம் இறக்கியுள்ளது அடிடாஸ். சோதனை ரீதியான விற்பனையின்போது 5000, ரூ. 52 ஷூக்களை அடிடாஸ் நிறுவனம் விற்றுள்ளதாம்.
இந்த ஷூவின் விலை 52 ரூபாயாக இருந்தாலும், அதைத் தயாரிக்க தற்போதுஆகும் செலவு மிக அதிகமாகும். எனவே இந்த ஷூவை இந்தியாவிலேயே தயாரித்து விற்க அடிடாஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்புச்செலவைக் குறைக்க அது திட்டமிட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து கோல்டுதான் சூப்பர்!

டெல்லி: சர்வதேச அளவில் தங்கத்தை வாங்குவதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடந்த15 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் அளவு 4 மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய விலை நிலையில் இந்தியாவின் மொத்த தங்க மதிப்பு 24 லட்சம் கோடி. அதாவது இந்திய பட்ஜெட்டை விட இருமடங்கு அதிகம்.
உலகம் முழுவதும் பல நாடுகளிடமிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்தாலும், அதிக அளவு வாங்குவது சுவிட்ஸர்லாந்திடமிருந்துதான்.
கடந்த ஆண்டு மட்டும் இந்த நாட்டிலிருந்து ரூ 6 லட்சம் கோடி அளவுக்கு சுவிஸ்ஸிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. உலகின் அனைத்து நாட்டு தங்கமும் ஒரே தரம்தான் என்றாலும், சுவிடஸர்லாந்து தங்கத்தின் ஜொலிப்பு மட்டும் கூடுதலாக இருக்குமாம். இந்த தங்கத்தில் செய்யும் நகைகளின் ஃபினிஷிங் வெகு அழகாக அமையுமாம்.
எனவே வர்த்தகர்கள் அதிகமாக சுவிட்ஸர்லாந்து தங்கத்தையே நாடுகிறார்கள்.
சுவிட்ஸர்லாந்துக்கு அடுத்து அதிக அளவு இந்தியா தங்கம் வாங்கும் நாடு தென் ஆப்ரிக்கா. அதற்கு அடுத்த இடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு.
சர்வதேச அளவில் தங்க இருப்பு வைப்பதில், அமெரிக்காதான் வழக்கம்போல முதலிடத்தில் உள்ளது. ஆனால் தங்க மார்க்கெட்டைக் கட்டுப்படுத்துவதில் படிப்படியாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்.
1970-ல் மொத்த தங்க மார்க்கெட்டில் 47 சதவீதம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வசமிருந்தது. ஆனால் 2010-ல் இது 27 சதவீதமாக சுருங்கிப் போனது.
ஆனால் 1970-ல் 35 சதவீத மார்க்கெட் ஆதிக்கம் கொண்டிருந்த இந்தியாவும் கிழக்கு ஆசியாவும், இப்போது 58 சதவீதத்தை கைவசம் வைத்துள்ளன. இது உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள தகவல்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)