செவ்வாய், 3 ஜனவரி, 2012

முன்னாடி விளையாடினால் பின்னாடி நல்லா இருக்கும்!

திருமணத்திற்கு பின்னர் கணவன் மனைவி இடையே தாம்பத்யத்தில் ஏற்படும் மகிழ்ச்சியானது படுக்கையறையோடு நின்றுவிடுவதில்லை. ஆங்காங்கே இலைமறை காயாக சமையலறையில் எழும் சின்ன சின்ன சங்கீதமும், கிணற்றடியில் யாருக்கும் தெரியாமல் நிகழும் சின்ன ஸ்பரிசமும் தம்பதியரை உற்சாகத்திற்கு கொண்டு செல்லும். உறவு மட்டுமல்லாது வீட்டுக்குள் தம்பதியருக்கிடையே நிகழும் முன்விளையாட்டுகளும் அவசியம் என்கின்றனர் உளவியலாளர்கள். புதுமண தம்பதியர்களுக்கு உறவைப் பற்றி ஒரு எதிர்பார்ப்பும், குறுகுறுப்பும் இருந்து கொண்டேதான் இருக்கும் அதனால்தான் கோவில் குளத்திற்கோ, திரைப்படங்களுக்கோ தம்பதியர்கள் தனியாக சென்றுவர வேண்டும் என்று வற்புறுத்தினர் முன்னோர்கள். திருமண தினத்தன்று நிகழும் சின்ன சின்ன வேடிக்கை, விளையாட்டுக்களும் இத்தகையதே. தண்ணீர் குடத்திற்குள் ரொமான்ஸ் ஒரு சின்ன குடத்திற்குள் மஞ்சள் தண்ணீரை ஊற்றி அதனுள் சிறிய மோதிரத்தைப் போட்டு புதுமணத்தம்பதியரை எடுக்கச் சொல்லி அனைவரும் வற்புறுத்த வெட்கத்தால் நெளிந்துகொண்டே இருவரும் கைகளை குடத்தினுள் விட அந்த சின்ன மோதிரத்தை தேடும்போதே இருவரின் கைகளும் உரசிக் கொள்ளுமே,அப்பொழுதே தொடங்கிவிடுகிறது காதலின் முன்விளையாட்டு. காதல் பாடல்கள் இது கொஞ்சம் ஒல்டு பேசன்தான் என்றாலும் அவசியமானது. காதல் பாடல்களை மெதுவாய் மனைவியின் காதுகளுக்கு மட்டுமே கேட்குமாறு பாடலாம். அதன் மூலம் உங்களின் எண்ணத்தை நீங்கள் வெளிப்படுத்தியத போலவும் ஆச்சு. உங்கள் மனைவியின் உற்சாகத்தை தூண்டிவிட்டது போலவும் ஆச்சு. என்ன பாட ரெடியாகிட்டீங்களா? சமையலறை சங்கீதம் உண்மையிலேயே ரொமான்ஸ் செய்ய ஏற்ற இடம் எதுவென்றால் அது சமையலறைதான். ஏனென்றால் அதில்தான் மையல் ஒளிந்திருக்கிறதே. அவ்வப்போது சமையலில் உதவுவது போல சென்று சின்ன சின்ன ஸ்பரிசங்களின் மூலம் உங்களின் எண்ணத்தை மெதுவாக வெளிப்படுத்தலாம். அசத்தலான ஆல்பம் போராடிக்கும் தருணங்களில் திருமண ஆல்பம், ஹனிமூன் போட்டோக்களை எடுத்து பார்த்து அந்த இன்பத்தருணங்களை மறுபடியும் கண்முன் கொண்டுவரலாம். நெருக்கமாக அமர்ந்து திருமண நாளில் நடந்த விளையாட்டுக்களை வீடியோவில் கண்டு ரசிக்கலாம். சின்னதாய் ஒரு ஷாப்பிங் வீட்டிற்கு அருகில் உள்ள ஷாப்பிங் மால்களுக்கு சென்று உங்கள் வாழ்க்கைத்துணைக்கு ஏற்ற பொருட்களை சர்ப்ரைசாக வாங்கித்தருவது காதல் உணர்வுகளை அதிகரிக்கும். விடுமுறை கொண்டாட்டம் எத்தனைநாளைக்குதான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடைப்பது என மனைவிக்கு நினைப்பு வரும். அதேபோல் அலுவலகம், வீடு என ஒரே மாதிரியாக இருப்பதும் போராடிக்கும். எனவே தனியாக நேரம் ஒதுக்கி குளிர் பிரதேசங்களுக்கு ஜாலியாய் ஒரு டிரிப் போய் வரலாம். சின்ன சின்ன காமெடி இரவு உணவுக்குப்பின்னர் மனதிற்கு பிடித்த புத்தகத்தை படித்தவாறு அதில் உள்ள நகைச்சுவை துணுக்குகளை பரிமாறலாம். தொலைக்காட்சியின் நகைச்சுவை காட்சிகளை ஓடவில்லை மனதை நெருக்கும் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெறலாம். வேடிக்கையான தோல்வி செஸ், கேரம்போர்டு, கார்ட்ஸ் போன்ற விளையாட்டுகளை ரொமான்ஸ்சாக தொடங்கலாம். ஜெயிக்கும் தருணத்திலும் தோல்வியை தழுவி விட்டுக்கொடுப்பது வேடிக்கையோடு உங்கள் மீதான காதலை அதிகப்படுத்தும்.

காதலிக்குப் பிடித்த கலர் பச்சையா..?-கொடுத்து வச்ச ஆளு நீங்க!

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னது சரிதான என்பதை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்களேன். சந்தோஷம் தரும் மஞ்சள் மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள். நினைத்ததை முடிக்கும் சிவப்பு சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள். காதல் மன்னன் பிங்க் பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள். காதலில் திளைக்கும் பச்சை: பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள். புதுமையை விரும்பும் நீலநிறம் நீல நிறத்தை விரும்பும் பெண்கள் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும். சுயநலவாதியான பர்பிள் பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். தத்துவம் பேசும் ஆரஞ்ச் ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள். மன அழுத்தம் தரும் கறுப்பு கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதலை வெறுக்கும் வெள்ளை வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஏப்ரல் 4ம் தேதி 10ம் வகுப்புத் தேர்வு: பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவிப்பு!

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது தேர்வு அட்டவணை விவரம் வருமாறு, 4-4-12 : தமிழ் முதல் தாள் 9-4-12: தமிழ் இரண்டாம் தாள் 11-4-12: ஆங்கிலம் முதல் தாள் 12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள் 16-4-12: கணிதம் 19-4-12: அறிவியல் 23-4-12: சமூக அறிவியல் இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 2 ஜனவரி, 2012

சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம். எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது. மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எதுவாக இருந்தாலும் கேட்டுச் செய்ங்க!

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள். மென்மையாய் கசியும் இசை படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள். அனுமதி அவசியம் தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள். தொடக்கம் போல இறுதி முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும். செல்லப் பெயர் சூட்டுங்கள் படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும். திருப்தியுறச் செய்யுங்கள் ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்கள்!

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் சுமார் 1000 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்!

லண்டன் : அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு குழுவினர் நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீக்கு உள்ள பங்கு பற்றிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவு குறித்து இங்கிலாந்தின் ஊட்டச்சத்து பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 3 விதமான பாதிப்புகள் காரணமாக இதயத்துக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவதையும் டீ தடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ÔÔதினமும் டீ குடிக்காதவர்களைவிட 3 முதல் 6 கப் வரை டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 30 முதல் 57 சதவீதம் வரை குறையும். டீயில் உள்ள ஒருவித நோய் எதிர்ப்பு பொருளே இதற்குக் காரணம்ÕÕ என ருக்ஸ்டன், மேசன் தெரிவித்தனர்.