செவ்வாய், 3 ஜனவரி, 2012

ஏப்ரல் 4ம் தேதி 10ம் வகுப்புத் தேர்வு: பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவிப்பு!

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் துவங்குகிறது என்று பள்ளிக்கல்வி தேர்வுத் துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தாமதமாக துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பாடங்கள் முழுமையாக நடத்தப்படாதது தான் அதற்கு காரணம். வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு மார்ச் மாத இறுதியில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக ஏப்ரல் மாதம் 4ம் தேதி துவங்குகிறது தேர்வு அட்டவணை விவரம் வருமாறு, 4-4-12 : தமிழ் முதல் தாள் 9-4-12: தமிழ் இரண்டாம் தாள் 11-4-12: ஆங்கிலம் முதல் தாள் 12-4-12: ஆங்கிலம் இரண்டாம் தாள் 16-4-12: கணிதம் 19-4-12: அறிவியல் 23-4-12: சமூக அறிவியல் இந்த ஆண்டு சுமார் 11 லட்சம் மாணவ, மாணவியர் சமச்சீர் பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 2 ஜனவரி, 2012

சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர். அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம். எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது. மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள். அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எதுவாக இருந்தாலும் கேட்டுச் செய்ங்க!

பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில் தங்களின் கணவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்த கொள்ள முடிவதில்லை. இதன் காரணமாகவே பிரச்சினைகள் எழுகின்றன. மனைவியின் விருப்பங்களை நிறைவேற்ற கணவன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தெரிவித்துள்ளனர் பாலியல் நிபுணர்கள். மென்மையாய் கசியும் இசை படுக்கையறையில் இசைக்கு தனித்தன்மை உண்டு. நீல ஒளி உமிழும் படுக்கையறையில் மென்மையான இசையை கசியவிட்டால் அது பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அதீத ஒலி எழுப்பும் இரைச்சலான இசையை ஒலிபரப்ப வேண்டாம். அது சிக்கலை ஏற்படுத்திவிடும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் படுக்கையறையின் முக்கிய எதிரியே செல்போன்தான். எனவே படுக்கையறைக்கு செல்லும் முன் செல்போனை ஆஃப் செய்ய வேண்டியதுதான் முதல் பணி. இல்லையெனில் படுக்கையறையில் தொண தொணக்கும் செல்போன் ஒலியும், அதை தொடர்ந்து உங்களின் பேச்சும் மனைவிக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுமாம். பிறகு என்ன செய்தாலும் சமாதானப்படுத்த முடியாது என்கின்றனர் உளவியலாளர்கள். அனுமதி அவசியம் தனக்குரிய பெண்ணாய் இருந்தாலும் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று உன்னை முத்தமிடலாமா? இன்று உனக்கு சம்மதமா? இப்படி ஏதாவது கேட்டு வைப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள். தொடக்கம் போல இறுதி முத்தம் என்பது உறவுக்கான திறவுகோல் என்பார்கள். நெற்றியில் தொடங்கி கண்கள், கண்ணம், முகவாய், இதழ் என படிப்பாய் உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள். தொடக்கத்தைப்போலவே முடிவிலும் முத்தம் வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. சுவாசப் புத்துணர்ச்சியோடு முத்தம் தரவேண்டும். செல்லப் பெயர் சூட்டுங்கள் படுக்கையறையில் செல்லப் பெயர் வைத்து அழைக்க வேண்டும் என்றுதான் அநேகம் பேர் எதிர்பார்க்கின்றனராம். தேவையில்லாத பேச்சுக்களை விடுத்து செல்லமாய் கொஞ்சவேண்டும். உடலை வருடவேண்டும், கொண்டாட வேண்டும் என்றுதான் பெரும்பாலான பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். பெண்களுக்கு மூட் இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் கைகளால் இதமாக பற்றி மென்மையாய் தலையை வருடுங்கள். அந்த இதமான வருடல் பெண்மையின் மென்மையை கிளறச்செய்யும். திருப்தியுறச் செய்யுங்கள் ஆண்களின் ஆசை சில நிமிடங்களில் முடிந்துவிடும். ஆனால் பெண்கள் அப்படியல்ல. சில முத்தங்கள், சில நிமிட ஸ்பரிசம் அதனால் ஏற்படும் கிளர்ச்சியோடு சிலநிமிடங்களில் ஏற்படும் உச்சநிலை என ஒரு தொடர்கதையாக நிகழும். எனவே திருப்தியுறும் வரை அவர்களுக்கு தேவையானவைகளை செய்யவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்கள்!

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் சுமார் 1000 சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நாகர்கோவில், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட எல்லா பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

தினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்!

லண்டன் : அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு குழுவினர் நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீக்கு உள்ள பங்கு பற்றிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவு குறித்து இங்கிலாந்தின் ஊட்டச்சத்து பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு: பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 3 விதமான பாதிப்புகள் காரணமாக இதயத்துக்கு ஆக்சிஜன் செல்வது தடைபட்டு மாரடைப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 2ம் நிலை சர்க்கரை நோய் ஏற்படுவதையும் டீ தடுப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ÔÔதினமும் டீ குடிக்காதவர்களைவிட 3 முதல் 6 கப் வரை டீ குடிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு 30 முதல் 57 சதவீதம் வரை குறையும். டீயில் உள்ள ஒருவித நோய் எதிர்ப்பு பொருளே இதற்குக் காரணம்ÕÕ என ருக்ஸ்டன், மேசன் தெரிவித்தனர்.

சனி, 31 டிசம்பர், 2011

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2012

வாசகர்கள் அனைவருக்கும் கண்ணாடி புத்தகத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2012

செவ்வாய், 29 நவம்பர், 2011

மோதிர விரல் நீளமா இருக்கா? அதிர்ஷ்டசாலிதான் நீங்கள் – ஆய்வில் தகவல்!


சிலரைப்பார்த்தால் முகத்தை வைத்து குணாதிசயங்களை கண்டுபிடித்து விடலாம். ஒரு சிலரின் நடை உடை பாவனைகளை வைத்து அவர்களின் குணத்தை கூறிவிடலாம். ஒருசிலர் மச்சத்தை வைத்து சாமுத்திரிகா லட்சணத்தை கூறிவிடுவார்கள். தற்போது கை விரல்களை வைத்து புதிதாக ஆராய்ச்சி செய்து அவர்களின் குணாதிசயங்களை கூறுகின்றனர்.

நோய்களை அறிந்து கொள்ளலாம்

ஆள்காட்டி விரல் மோதிர விரல்களின் அமைப்பினை வைத்து இதயநோய், புற்றுநோய் சளித்தொல்லை போன்ற நோய்களின் பாதிப்பையும் அறிந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டு பாதிப்புகள் வரும் சாத்தியக்கூறு அதிகம்.இதன் மூலம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது தொடர்பான ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது.

விரலும் ஆய்வு முடிவும்

ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் உள்ள விகிதம் பாலின ஹார்மோனுடன் தொடர்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். உடலில் ஆண்மையின் அடையாளங்களை நிர்ணயிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு மிகுந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும். ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்குமாம்.

கவர்ச்சிகரமான ஆண்கள்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக உள்ள ஆண்கள் கவர்ச்சி கரமானவர்களாம். இது போன்ற ஆண்களைத்தான் அநேக பெண்கள் விரும்புகின்றனராம். மோதிர விரல் நீளமான ஆண்கள்தான் தங்களின் வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று எண்ணற்ற பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனராம்.

ஹார்மோன் தூண்டப்படும்

ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக கொண்ட ஆண்களைப் பார்க்கும் போது பெண்களின் செக்ஸ் ஹார்மோன் அதிகமாக தூண்டப்படுகிறதாம். இதனால் மோதிர விரல் நீளமாக உடைய ஆண்கள் பெண்களுக்கு அதிக கவர்ச்சியானவராக தெரிகின்றனர். இடது கையை விட வலது கையில் மோதிர விரல் நீளமாக இருக்கும் பட்சத்தில் அது வெகுவாக கவர்கிறது என்று ஆய்வுத்தலைவர் காமிலோ பெர்டன்சி தெரிவித்துள்ளார்.

ஆண்மை அதிகரிக்கும்

ஆண்களுக்கு வலது கைதான் முக்கியமானது. இதில் இரண்டாவதாக உள்ள ஆட்காட்டி விரலை விட நான்காவதாக உள்ள மோதிர விரல் நீளமாக இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாம். விரல்களின் நீளத்திற்கும் ஆண்மைக்கும் தொடர்ப்பு இருப்பதாக தென்கொரிய நாட்டு ஆய்வாளர்கள் ஆண்டுகணக்கில் ஆய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.

உறவில் உற்சாகம்

150 ஆண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் ஆட்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்த ஆண்களுக்கு ஆண்மைத் தன்மை அதிகமாக இருந்தது தெரியவந்தது. இவர்கள் உறவின் போது தனது துணையை அதிக அளவில் உற்சாகப்படுத்துவார்களாம். அதிக நேரம் உறவில் ஈடுபட்டு துணையை திருப்திபடுத்துவதில் கில்லாடிகளாம் இவர்கள்.

என்ன உங்க கை விரலை இப்பவே சோதனை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா?