புதன், 14 ஏப்ரல், 2010

சிண்டிகேட் வங்கியில் 426 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் தேவை


பொதுத் துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் 17 பிரிவுகளில் மொத்தம் 426 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல்ஊனமுற்றோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடும் உள்ளது.

என்னென்ன பதவிகள் – ஒதுக்கீடுகள்?

Post

Code No.
Post Scale

No. of Vacancies Out of which
TOTAL SC ST OBC GEN OH VH HI
01 Asst. Manager (RD) * I 125 44 22 79 150 – – –
02 Asst. Manager (Marketing) I 150 02 02 02
03 OL Officer I 10
04 Technical Officers # I 10
05 Manager (IT) II 14 05 09

‘
36

‘
39 01 01 01
06 Manager (Law) II 08
07 Manager (Credit) II 50
08 Manager (Security) II 07
09 Manager (FX) II 05
10 Managers (Risk Mgt) II 05
11 Senior Manager (IT) III 05 05 02 09 19 01 – –
12 Senior Manager (Credit) III 20
13 Senior Manager (FX) III 05
14 Senior Manager(Risk Mgt) III 05
15 Chief Manager (IT) IV 05 – – 01 05 – – –
16 Chief Manager (Risk Mgt) IV 01
17 Asst. General Manager (Risk Mgt.) V 01 – – – 01 – – -
Total 426 54 33 125 214 04 03 03



மாநிலவாரியாக காலியிடங்கள் (புரபேஷனரி ஆபீஸர் பதவிக்கு மட்டும்):

Sl.

No.
State
Vacancy


1. Karnataka 56
2. Andhra Pradesh 30
3. Tamil Nadu 07
4. Kerala 08
5. Uttar Pradesh 17
6. Haryana 05
7. Maharashtra 01
8. Gujarat 01
Total 125


சம்பள விவரம்:

Pay Scale, Allowances and Perquisites as applicable @
Scale Pay Scale (Rs.) Approx. total emoluments at the start of the scale inclusive of DA, CCA & HRA at Metropolitan Centres
JMGS – I 10000 -18240 Rs.17550.00
MMGS – II 13820 – 19920 Rs..24240.00
MMGS – III 18240 – 22280 Rs.31820.00
SMGS – IV 20480 – 24140 Rs.35660.00
SMGS – V 24140 – 26620 Rs.41950.00

தகுதிகள்:

உதவி மேலாளர், ஓ.எல்., அதிகாரி, டெக்னிகல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பதவி இடங்களுக்கு வயது 25 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலாளர் – செக்யூரிட்டி பணிக்கு வயது 25 முதல் 40 வரை இருக்கலாம்.

முதுநிலை மேலாளர் பணிக்கு வயது 25 முதல் 35 வரை இருக்கலாம். தலைமை மேலாளர் பணிக்கு வயது 25 முதல் 40 வரை இருக்கலாம். உதவிப் பொது மேலாளர் பதவிக்கு வயது 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். சார்ந்திருக்கும் பிரிவின் தன்மைக்கேற்ப உச்ச பட்ச வயதில் வயதுச் சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு இப்பணிகளில் எவ்வித சலுகையும் கிடையாது.

இப்பணிகள் அனைத்திற்கும் சேரும் துறைக்கேற்ப கல்வித் தகுதிகளும், பணி அனுபவமும் தேவைப்படும். இது குறித்த முழு விபரங்கள் அறிய இவ்வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

புரபேஷனரி ஆபீஸர் இடங்களுக்கு ரூ.300/-ம், சிறப்பு அதிகாரி பதவிக்கு ரூ.250/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுள்ளது. இக்கட்டணத்தை வங்கியின் இணைய தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள மாதிரி சலானின் மூலம் ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும், வேறு எந்த முறையிலும் கட்டணம் செலுத்தக் கூடாது.

எஸ்.சி., எஸ்.டி., ஊனமுற்றோருக்கு கட்டணம் ரூ.50/- மட்டுமே. கட்டணத்தை 10.04.2010 க்குள் செலுத்தி விட வேண்டும்.

விண்ணப்பங்கள்:

சிண்டிகேட் வங்கியில் கட்டணம் செலுத்திய பின் வங்கியின் இணைய தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக கட்டணமும், ஆன்லைன் விண்ணப்பமும் செய்ய வேண்டும்.

முதலில் கட்டணத்தை ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும்.இதன் பின் வங்கியின் இணைய தள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது கேட்கப்படும் அனைத்து விபரங்களையும் தவறாமல் முழுமையாக குறிப்பிட வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய சலானின் ஒரிஜினலை எழுத்துத் தேர்வு நடைபெறும் பொது எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின் எந்த படிவத்தையும் அனுப்ப வேண்டியது இல்லை. அனைத்து சான்றுகளும் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலின் போது மட்டுமே தேவை.

தேர்வு விவரம்:

சிண்டிகேட் வங்கிக்கான அதிகாரி பதவியின் சிறப்பு அதிகாரி பிரிவுக்கு கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் புரோபேஷனரி அதிகாரி பிரிவுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 135 நிமிட நேரத்தில் எழுதும் எழுத்துத் தேர்வு அப்ஜக்டிவ் வகையைச் சேர்ந்தது.
இத்தேர்வில் ரீசனிங், குவாண்டி டேடிவ் ஆப்டிடியூட், பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். எழுத்துத் தேர்வின் இரண்டாம் பகுதியாக டெஸ்கிரிப்டிவ் தேர்வை 60 நிமிட கால அவகாசத்தில் எழுத வேண்டும். இத் தேர்வை இந்தி மொழி வாயிலாகவும் எழுதலாம்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வை தமிழகத்தில் சென்னையிலும், நமது அருகிலுள்ள மாநிலங்களின் மையங்களான பெங்களூரு, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் எழுதலாம்.

சில முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 10.04.2010
எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் : 23.05.2010
பணிப் பிரிவு 4 முதல் 17 வரையிலான பதவிகளுக்கு
விண்ணப்பம் அனுப்ப இறுதி நாள் : 19.04.2010
இணைய தள முகவரி: www.syndicatebank.in

தமிழ்நாடு போலீஸில் சேரணுமா… இன்று முதல் விண்ணப்பங்கள்!


சென்னை: தமிழக காவல் துறையில் 328 பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1,095 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களுக்கு ஆள் எடுக்கிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன.

தமிழக போலீஸ் துறையில் காவலர் முதல் சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான பணி இடங்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. தற்போது 328 பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 1,095 சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிய 88 ஆண் சப்-இன்ஸ்பெக்டர்களும், 36 பெண் சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். சேம நலப்படையில் (ஆயுத போலீஸ் படை) 113 ஆண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், 48 பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், சட்டம் ஒழுங்கு போலீஸ் பிரிவில் பணியாற்ற 566 ஆண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும், 244 பெண் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எல்லா பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு. முன்னாள் ராணுவத்தினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீட்டர் இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 167 செ.மீட்டர் உயரம் போதும். மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 86 செ.மீட்டரும் இருக்க வேண்டும். பெண்களின் உயரம் குறைநëத அளவு 159 செ.மீட்டர் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 157 செ.மீட்டர் போதுமானது. தகுதியுடையோர் எழுத்து தேர்வு, உடற் தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 70 ஆகும்.

இன்று முதல் விண்ணப்பம்

சப்-இன்ஸ்பெக்டருக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைமை தபால் அலுவலகங்களிலும், குறிப்பிட்ட உதவி தபால் அலுவலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) முதல் விநியோகிக்கப்படும். விண்ணப்பத்தின் விலை ரூ.30. விண்ணப்ப கட்டணம் ரூ.230 ஆகும். இதை தபால் நிலையத்தில் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை `தலைவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம், 807, 2-வது தளம், பீ.டி.லீ.செங்கல்வராய நாயக்கர் மாளிகை, அண்ணா சாலை, சென்னை-2′ என்ற முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமாகவோ வருகிற மே மாதம் 3-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு கிடைக்கும்?

சென்னையில் அம்பத்தூர், அண்ணாசாலை, ஆவடி கேம்ப், மைலாப்பூர், பூங்காநகர், பரங்கிமலை, தியாகராயநகர், தாம்பரம் ஆகிய தலைமை தபால் அலுவலகங்களிலும், எழும்பூர், கோட்டை, பெரம்பூர், பூந்தமல்லி, தியாகராயநகர் வடக்கு, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, அண்ணாநகர் கிழக்கு ஆகிய தபால் அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும், பாரிமுனையில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபீசிலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வாங்கலாம் என்று சென்னை நகர மத்திய அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 3.05.2010

முழுமையான விவரங்களுக்கு…. கீழே உள்ள விளம்பரத்தை கிளிக்கிப் பெரிதாக்கிப் பார்க்கவும்.


2011ல் 30,000 பேரை பணியமர்த்தும் இன்போசிஸ்!


பெங்களூர்: கடந்த நிதியாண்டில் சம்பளத் தொகைக்காக மட்டும் ரூ.600 கோடி செலவிட்டுள்ளது இன்போசிஸ்.

இந்திய ஐடி துறையில் இதுவரை எந்த நிறுவனமும், ஒராண்டுக்கு இவ்வளவு சம்பளத்தொகை ஒதுக்கியதில்லை என கூறப்படுகிறது.

அதோடு, வரும் 2011ம் ஆண்டில் மேலும் 30 ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தவும் இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்தாண்டு (2011) பணியாளர் தேர்வுக்கான 'கேம்பஸ் இன்டர்வியூ'க்களையும் முன்னதாகவே செய்து முடித்துவிட்டது இன்போசிஸ்.

2011ம் ஆண்டில் பணியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே 19 ஆயிரம் பேருக்கு 'ஆஃபர்' வழங்கப்பட்டுள்ளது என்று இன்போசிஸ் தலைவர் டிவி மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.

இதுபற்றி பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய மோகன்தாஸ்,
'இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கா மற்றும் சீன அலுவலகங்களுக்காக ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மணிலாவில் 400 பேர் தேவை.

இதுதவிர நேரடி தேர்வு மூலமாகவும் 6,500 வரையிலான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

நிறுவனத்தின் நடுத்தர மற்றும் ஜூனியர் நிலை பணியாளர்களுக்கு பெரியளவிலான சம்பள உயர்வு தரப்பட்டுள்ளது. சீனியர் நிலையில் இருப்பவர்களுக்கு 10 சதவீத உயர்வு வழங்கப்படுகிறது.

சராசரியாக ஊதிய உயர்வு 14 முதல் 17 சதவீதம் வரை தரப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் இன்போசிஸ் மூலமாக தகுதி உயர்வு பெற்றிருக்கிறார்கள்' என்றார்.

சு‌ற்றுலா‌ப் பய‌ணிக‌ளி‌ன் வருகை‌யி‌ல் த‌மிழக‌ம் 3வது இட‌ம்!


இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்‌திரு‌ப்பதாக த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் வருமானத்தில் சுற்றுலாவும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாநிலங்கள் பற்றி இந்திய வர்த்தக மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில் வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நாடாளுமன்றம், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள் என நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலம் என்ற பெருமையை டெல்லி பிடித்துள்ளது. இங்கு ஆ‌ண்டு‌க்கு 23,40,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதேபோல் பாரம்பரிய சுற்றுலா தலங்கள், பிரபல மருத்துவமனைகள், வர்த்தக மையங்கள், அழகிய கடற்கரை, இந்தியாவின் வர்த்தக நகரம் என்ற பெருமை கொண்ட மும்பை, பாலிவுட் போன்றவற்றால் மகாராஷ்டிரா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20,60,000 பேர் வந்து சு‌ற்றுலா‌த் தல‌ங்களை பா‌ர்‌த்து செ‌ல்‌கி‌ன்றன‌ர்.

மூன்றாவது இடம் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னையில் சிறப்பாக உலக தரம்வாய்ந்த மருத்துவமனைகளால் அளிக்கப்படும் சிகிச்சையினால் ஈர்க்கப்பட்டு இங்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகள் மற்றும் அழகிய மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், கோவில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற சிறப்புமிக்க நகரங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு ஆண்டுக்கு 20,30,000 வெளிநாட்டினர் இங்கு வந்து செல்கின்றனர் எ‌ன்று அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திங்கள், 12 ஏப்ரல், 2010

78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்!!


லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற, உலகின் மிக அழகான பெண்மணி எனப் புகழப்பட்ட எலிசபெத் டெய்லருக்கும் அவரைவிட 30 வயது இளையவரான ஜாஸன் வின்டர்ஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

78 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9 வது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் நடித்ததை விட, திருமணம் செய்வதிலும் விவாகரத்து செய்வதிலும் அதிக புகழ் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.

இதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார்.

லேரி என்பவரை கடைசியாக திருமணம் செய்தார். 1996-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் குறைபாடுகளில் அவதிப்பட்டு வந்த அவர் இப்போதுதான் குணமாகி வீடு திரும்பினார்.

2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.

இந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயது நபரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார்.

எலிசபெத்தும் வின்டர்ஸும் நீண்ட நாள் நண்பர்களாம்.

சுகமான தூ‌‌க்க‌த்‌தி‌ற்கு ‌சில முய‌ற்‌சிக‌ள்!


பலரு‌ம் ‌நி‌ம்ம‌தியான தூ‌‌க்க‌ம் இ‌ன்‌றி அவ‌தி‌ப்படு‌கிறா‌ர்க‌ள். அத‌ற்கு அவ‌ர்களது நடைமுறை பழ‌க்க வழ‌க்க‌ங்க‌ள்தா‌ன் காரண‌ம் எ‌ன்பதை முத‌லி‌ல் உணர வே‌ண்டு‌ம்.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 அ‌ல்லது 9 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். 9 ம‌ணி‌க்கு‌ள் தொலை‌க்கா‌ட்‌சியை அணை‌த்து ‌வி‌ட்டா‌ல்தா‌ன் 1 ம‌ணி நேர‌த்‌தி‌ல் தூ‌க்க‌ம் உ‌ங்களை‌த் தழுவு‌ம்.

குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது ந‌ல்லது. வெ‌ளி‌ச்சமே இ‌ல்லாம‌ல் இருளாக இரு‌ப்பது‌ம் ச‌ரிய‌ல்‌ல. படு‌க்கை அறை கா‌ற்றோ‌ட்டமான, சு‌த்தமான அறையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

தூ‌ங்குவத‌ற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள்.

படுப்பதற்கு இரண்டரை மணிநேர‌த்‌தி‌ற்கு முன்பு இரவு உணவை முடித்துவிடுங்கள். தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு எ‌ளிய நடை‌ப்ப‌யி‌ற்‌சி அ‌ல்லது உட‌ற்ப‌யி‌ற்‌சி செ‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

ஹூன்டாய் புதிய ஐ20 ரக கார் அறிமுகம்.


இந்தியாவின் கார் உற்பத்தியில் இரண்டாவது இடத்தை வகிக்கும் ஹூன்டாய் மோட்டார் நிறுவனம் ஐ20 ரக காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்துடன் எர்ரா, ஸ்போர்ட்ஜ் என்ற இரண்டு புதிய ரக கார்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எர்ரா ரக காரின் விலை டெல்லியில் ரூ.4,51,816.

ஸ்போர்ட்ஜ் ரக காரின் விலை ரூ.5,31,817.

இதில் எர்ரா ரக கார் பெட்ரோல், டீசலில் இயங்கும் இரண்டு ரகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய கார்கள், சமீபத்தில் நடைமுறைக்கு வந்துள்ள பாரத் 4 மாசு கட்டுப்பாடு விதிகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ20 ரக டீசல் காரில், இது வரை எந்த காரிலும் இல்லாத ஆறு கியர் அமைப்பு உள்ளதாக ஹூன்டாய் தெரிவித்துள்ளது.