புதன், 14 ஏப்ரல், 2010

சிண்டிகேட் வங்கியில் 426 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் தேவை


பொதுத் துறை வங்கியான சிண்டிகேட் வங்கியில் 17 பிரிவுகளில் மொத்தம் 426 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., உடல்ஊனமுற்றோர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடும் உள்ளது.

என்னென்ன பதவிகள் – ஒதுக்கீடுகள்?

Post

Code No.
Post Scale

No. of Vacancies Out of which
TOTAL SC ST OBC GEN OH VH HI
01 Asst. Manager (RD) * I 125 44 22 79 150 – – –
02 Asst. Manager (Marketing) I 150 02 02 02
03 OL Officer I 10
04 Technical Officers # I 10
05 Manager (IT) II 14 05 09


36


39 01 01 01
06 Manager (Law) II 08
07 Manager (Credit) II 50
08 Manager (Security) II 07
09 Manager (FX) II 05
10 Managers (Risk Mgt) II 05
11 Senior Manager (IT) III 05 05 02 09 19 01 – –
12 Senior Manager (Credit) III 20
13 Senior Manager (FX) III 05
14 Senior Manager(Risk Mgt) III 05
15 Chief Manager (IT) IV 05 – – 01 05 – – –
16 Chief Manager (Risk Mgt) IV 01
17 Asst. General Manager (Risk Mgt.) V 01 – – – 01 – – -
Total 426 54 33 125 214 04 03 03



மாநிலவாரியாக காலியிடங்கள் (புரபேஷனரி ஆபீஸர் பதவிக்கு மட்டும்):

Sl.

No.
State
Vacancy


1. Karnataka 56
2. Andhra Pradesh 30
3. Tamil Nadu 07
4. Kerala 08
5. Uttar Pradesh 17
6. Haryana 05
7. Maharashtra 01
8. Gujarat 01
Total 125


சம்பள விவரம்:

Pay Scale, Allowances and Perquisites as applicable @
Scale Pay Scale (Rs.) Approx. total emoluments at the start of the scale inclusive of DA, CCA & HRA at Metropolitan Centres
JMGS – I 10000 -18240 Rs.17550.00
MMGS – II 13820 – 19920 Rs..24240.00
MMGS – III 18240 – 22280 Rs.31820.00
SMGS – IV 20480 – 24140 Rs.35660.00
SMGS – V 24140 – 26620 Rs.41950.00

தகுதிகள்:

உதவி மேலாளர், ஓ.எல்., அதிகாரி, டெக்னிகல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கு வயது 21 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலாளர் பதவி இடங்களுக்கு வயது 25 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலாளர் – செக்யூரிட்டி பணிக்கு வயது 25 முதல் 40 வரை இருக்கலாம்.

முதுநிலை மேலாளர் பணிக்கு வயது 25 முதல் 35 வரை இருக்கலாம். தலைமை மேலாளர் பணிக்கு வயது 25 முதல் 40 வரை இருக்கலாம். உதவிப் பொது மேலாளர் பதவிக்கு வயது 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். சார்ந்திருக்கும் பிரிவின் தன்மைக்கேற்ப உச்ச பட்ச வயதில் வயதுச் சலுகை உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு இப்பணிகளில் எவ்வித சலுகையும் கிடையாது.

இப்பணிகள் அனைத்திற்கும் சேரும் துறைக்கேற்ப கல்வித் தகுதிகளும், பணி அனுபவமும் தேவைப்படும். இது குறித்த முழு விபரங்கள் அறிய இவ்வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

புரபேஷனரி ஆபீஸர் இடங்களுக்கு ரூ.300/-ம், சிறப்பு அதிகாரி பதவிக்கு ரூ.250/-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்படுள்ளது. இக்கட்டணத்தை வங்கியின் இணைய தளத்தில் கொடுக்கப் பட்டுள்ள மாதிரி சலானின் மூலம் ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் மட்டுமே செலுத்த வேண்டும், வேறு எந்த முறையிலும் கட்டணம் செலுத்தக் கூடாது.

எஸ்.சி., எஸ்.டி., ஊனமுற்றோருக்கு கட்டணம் ரூ.50/- மட்டுமே. கட்டணத்தை 10.04.2010 க்குள் செலுத்தி விட வேண்டும்.

விண்ணப்பங்கள்:

சிண்டிகேட் வங்கியில் கட்டணம் செலுத்திய பின் வங்கியின் இணைய தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாக கட்டணமும், ஆன்லைன் விண்ணப்பமும் செய்ய வேண்டும்.

முதலில் கட்டணத்தை ஏதாவது ஒரு சிண்டிகேட் வங்கி கிளையில் செலுத்த வேண்டும்.இதன் பின் வங்கியின் இணைய தள முகவரியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது கேட்கப்படும் அனைத்து விபரங்களையும் தவறாமல் முழுமையாக குறிப்பிட வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்திய சலானின் ஒரிஜினலை எழுத்துத் தேர்வு நடைபெறும் பொது எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த பின் எந்த படிவத்தையும் அனுப்ப வேண்டியது இல்லை. அனைத்து சான்றுகளும் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணலின் போது மட்டுமே தேவை.

தேர்வு விவரம்:

சிண்டிகேட் வங்கிக்கான அதிகாரி பதவியின் சிறப்பு அதிகாரி பிரிவுக்கு கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் புரோபேஷனரி அதிகாரி பிரிவுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 135 நிமிட நேரத்தில் எழுதும் எழுத்துத் தேர்வு அப்ஜக்டிவ் வகையைச் சேர்ந்தது.
இத்தேர்வில் ரீசனிங், குவாண்டி டேடிவ் ஆப்டிடியூட், பொது அறிவு மற்றும் ஆங்கில அறிவு ஆகிய பிரிவுகளில் கேள்விகள் இருக்கும். எழுத்துத் தேர்வின் இரண்டாம் பகுதியாக டெஸ்கிரிப்டிவ் தேர்வை 60 நிமிட கால அவகாசத்தில் எழுத வேண்டும். இத் தேர்வை இந்தி மொழி வாயிலாகவும் எழுதலாம்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வை தமிழகத்தில் சென்னையிலும், நமது அருகிலுள்ள மாநிலங்களின் மையங்களான பெங்களூரு, எர்ணாகுளம் ஆகிய இடங்களில் எழுதலாம்.

சில முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 10.04.2010
எழுத்துத் தேர்வு நடை பெறும் நாள் : 23.05.2010
பணிப் பிரிவு 4 முதல் 17 வரையிலான பதவிகளுக்கு
விண்ணப்பம் அனுப்ப இறுதி நாள் : 19.04.2010
இணைய தள முகவரி: www.syndicatebank.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக