வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஜெனரல் மோட்டார் மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது!


ஜெனரல் மோட்டார் நிறுவனம் இந்த வருட இறுதியில் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் எலக்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்யும் ரிவா எலக்ரிக் கார் கம்பெனியுடன், மின்சாரத்தால் இயங்கும் காரை தயாரிக்க சென்ற வருடம் செப்டம்பரில் ஜெனரல் மோட்டார் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

ஏற்கனவே ரிவா சிறிய எலக்ட்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த வருட இறுதியில், ஜெனரல் மோட்டார் நிறுவனம் பெரிய அளவிலான நான்கு கதவுகளை கொண்ட எலக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து ஜெனரல் மோட்டார் நிறுவனத்தின் துணை தலைவரும், இயக்குநருமான பி.பாலேந்திரன் கூறுகையில், ஜெனரல் மோட்டார் இ-ஸ்பார்க் என்ற எலக்ட்ரிக் காரை தயாரிக்க ரிவாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இது ஜெனரல் மோட்டாரின் சிறிய ரக காரை போன்று இருக்கும். இதற்கு தேவையான பேட்டரி தொழில் நுட்பத்தை ரிவா நிறுவனம் வழங்கும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக