செவ்வாய், 27 ஏப்ரல், 2010

மே 9இ‌ல் ‌வி‌ண்‌ணி‌ல் செலு‌த்த‌ப்படு‌கிறது கார்டோசாட் 2பி செயற்கைக்கோள்!


அடிப்படை கட்டமைப்பு, நகரத் திட்டப் பணிகளுக்கு உதவும் கார்டோசாட் 2பி செயற்கைக்கோளை மே 9ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்ணில் செலு‌த்து‌கிறது.

பெ‌ங்களூரு‌வி‌ல் செ‌ய்‌தியாள‌ர்‌க‌ளிட‌ம் பே‌சிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய செய்தித் தொடர்பாளர் எஸ்.சதீஷ், 700 கிலோ எடை கொண்ட கார்டோசாட் 2பி செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி-சி15 ராக்கெட் மூலம் மே 9ஆம் தேதி காலை 9.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் 5 ஆண்டுகள் எ‌ன்றா‌ர்.

கார்டோசாட் 2பி செயற்கைக்கோளுடன் 117 கிலோ எடைகொண்ட மேலும் 4 சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது எ‌ன்றும் இதில் ஒன்று பெங்களூரு - ஹைதராபாத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய மிகச் சிறிய செயற்கைக்கோளாகும் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மற்ற 3 செயற்கைக்கோள்கள் கனடா, ஸ்விட்சர்லாந்து நாடுகளை சேர்ந்தவை எ‌ன்று ச‌தீ‌ஷ் கூ‌றினா‌ர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக