திங்கள், 26 ஏப்ரல், 2010

வி.ஜி.பி.யில் அமெரிக்க வீரர்களின் சாகச காட்சிகள்!


சு‌ற்றுலா‌ப் பய‌ணிகளை கவரு‌ம் ‌வித‌த்‌திலு‌ம், ‌விடுமுறை‌யி‌ல் உ‌ள்ள ‌சிறா‌ர்க‌ளி‌ன் கொ‌ண்டா‌ட்ட‌த்தை அ‌திக‌ரி‌க்கு‌ம் வகை‌யிலு‌ம் ‌மகாப‌லிபுர‌ம் சாலை‌யி‌ல் உ‌ள்ள பொழுதுபோ‌க்கு பூ‌ங்காவான வி‌ஜி‌பி‌யி‌ல் அமெ‌ரி‌க்க ‌வீர‌ர்க‌ளி‌ன் சாகச ‌‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெறு‌கிறது.

வி.ஜி.பி. தங்க கடற்கரையில் உள்ள யூனிவர்சல் கிங்டம் பொழுதுபோக்கு பூங்காவில், கோடை விடுமுறையை முன்னிட்டு அமெரிக்க வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 23-ந் தேதி தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி ஜுன் மாதம் 6-ந் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. வார நாட்களில் 4 காட்சிகளும், வார இறுதி நாட்களில் 5 காட்சிகளும் நடைபெறும். இதற்காக ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய கலை அரங்கம், குளு குளு வசதியுடன் நிர்மாணிக்கப்பட்டு உள்ளது.

இதன் தொடக்க விழா அமெரிக்க தூதரக அதிகாரி ஆன்ட்ரு சிம்கின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக