வெள்ளி, 23 ஏப்ரல், 2010

விப்ரோ லாபம் ரூ.1,209 கோடி!


மும்பை: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் லாபம் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மார்ச்சுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டு லாபம் ரூ.1.209 கோடி என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் நிகர வருமானம் ரூ.6,982 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தை ஆண்டு இதே காலாண்டில் ரூ. 6.451.4 கோடியாக இருந்தது நிகர வருவாய்.

இதைத் தொடர்ந்து தனது பங்குதாரர்களுக்கு 2:3 என்ற விகிதத்தில் போனஸ் அறிவித்துள்ளது விப்ரோ.

இது தவிர பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் டிவிடெண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பிறகு விப்ரோ தலைவர் அஜீம் பிரேம்ஜி கூறுகையில், "இந்த காலாண்டும் நிறுவனம் உறுதியான வளர்ச்சிப் பாதையில் பயணித்துள்ளது. இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் ஐடி, டெலிகாம் துறைக்கு ஏற்பட்ட சரிவின் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுள்ளோம். வர்த்தகச் சூழல் நன்றாக அமைந்துள்ளது" என்றார்.

கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த லாபமும் 18.49 சதவீதம் அதிகரித்து ரூ.4.593 கோடியாகியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் (Standalone basis) 46.85 சதவீதம் உயர்ந்து ரூ.1,236 கோடியாக அதிகரித்துள்ளது. 27 புதிய வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.

5,325 புதிய பணியாளர்கள் இந்தக் காலாண்டில் புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து விப்ரோவின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 1,08,071 ஆனது.
Read: In English
வரும் ஜூன் மாத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் விப்ரோ வருவாய் 1,215 மில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் ஆசிம் பிரேம்ஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக