புதன், 21 ஏப்ரல், 2010

நானோவுக்கு போட்டியாக நிஸ்ஸானின் குறைந்த விலை கார்!


மும்பை: உலகின் மிகக் குறைந்த விலை கார் என்று வலம் வரும் டாடா நானோவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் விதத்தில் ரூ 1.34 மதிப்புள்ள நவீன சிறிய ரகக் காரை தயாரிக்கிறது ஜப்பானிய நிறுவனம் நிஸ்ஸான்.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலையை நிறுவுகிறது நிஸ்ஸான்.

2012-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வரும் என்கிறார் நிஸ்ஸான் நிறுவன ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவுக்கான தலைவர் ஜில்லிஸ் நார்மண்ட்.

பஜாஜ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில், அதிக லாபத்துடன் வாகனங்கள் தயாரிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் அந்த நிபுணத்துவத்தை நிஸ்ஸான் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் நார்மண்ட் கூறினார்.

உலகில் சிறிய ரக மற்றும் மலிவு விலை கார்கள் (70 சதவிகிதம்) அதிகம் விற்பனையாவது இந்தியாவில்தான் என்றும், இந்த சந்தையை நிஸ்ஸான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

ஏற்கெனவே ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஒரகடத்தில் சிறிய மற்றும் நடுத்தர ரகக் கார்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியுள்ளது நிஸ்ஸான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக