வெள்ளி, 16 ஏப்ரல், 2010

லண்டனில் திப்பு சுல்தான் வாள் ஏல‌ம் ‌விட‌ப்ப‌ட்டது!


இ‌ந்‌தியா‌வி‌ல் ஆ‌‌ங்‌கிலேய‌ர்க‌‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌த்தை எ‌தி‌ர்‌த்து போ‌ரி‌ட்ட ம‌ன்ன‌ர் திப்பு சுல்தான் பயன்படுத்திய வாள் இங்கிலாந்தில் மூ‌ன்றரை கோடி ரூபா‌ய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் மைசூ‌‌ர் ம‌ன்னராக இரு‌ந்த ‌திப்பு சுல்தான், ஆ‌ங்‌கிலேயரு‌க்கு அடிப‌ணிய மறு‌த்தா‌ர். ஆ‌ங்‌கிலேயரு‌க்கு எ‌திராக போ‌ரி‌ட்டா‌ர் ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன். போரில் ‌தி‌ப்பு சு‌ல்தா‌ன் தோல்வி அடைந்ததும் 1799-ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள அவரது அரண்மனைக்குள் நுழைந்த ஆங்கிலேய படையினர் அங்கு இருந்த அவரது வாள் உள்பட எல்லா உடைமைகளையும் அள்ளிச்சென்றனர். அப்படி அள்ளிச்செல்லப்பட்ட பொருட்கள் எல்லாம் இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டன.

200 ஆண்டு கால பழமையான இந்த வாள் 2003-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது இந்த வாளை தொழில் அதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அது மீண்டும் ஏலத்துக்கு வந்தது.

இந்த வாளை லண்டனில் உள்ள சோத்பீ என்ற ஏல கம்பெனி ஏலம் விட்டது. இது ரூ.35 லட்சத்துக்கு ஏல‌ம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அ‌ந்த வா‌ள் மூ‌ன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதை விட 10 மடங்கு அதிகமாக அ‌ந்த வா‌ள் ஏல‌ம் போயு‌ள்ளது. வெள்ளியாலான இந்த வாளை வாங்கியவர் யார் என்பது தெரியவில்லை.

திப்பு சுல்தானின் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கியும் கடந்த புதன்கிழமை ஏலம் விடப்பட்டது. வெண்கலத்தாலான அரிய வகை பீரங்கியான இது 1790-ம் ஆண்டு காலத்தில் திப்பு சுல்தானின் ராணுவ தளவாடங்களில் ஒன்றாக இருந்தது. இதை ஒருவர் ரூ.2 கோடிக்கு வாங்கினார். அவரை‌ப் ப‌ற்‌றிய ‌விவர‌மு‌ம் வெ‌ளியாக‌வி‌ல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக