புதன், 14 ஏப்ரல், 2010
சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழகம் 3வது இடம்!
இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதில் தமிழ்நாடு 3-வது இடத்தை பிடித்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் வருமானத்தில் சுற்றுலாவும் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மாநிலங்கள் பற்றி இந்திய வர்த்தக மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதில் வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், நாடாளுமன்றம், பூங்காக்கள், வர்த்தக வளாகங்கள் என நாட்டிலேயே அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் மாநிலம் என்ற பெருமையை டெல்லி பிடித்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 23,40,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் பாரம்பரிய சுற்றுலா தலங்கள், பிரபல மருத்துவமனைகள், வர்த்தக மையங்கள், அழகிய கடற்கரை, இந்தியாவின் வர்த்தக நகரம் என்ற பெருமை கொண்ட மும்பை, பாலிவுட் போன்றவற்றால் மகாராஷ்டிரா 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த மாநிலத்துக்கு ஆண்டுக்கு 20,60,000 பேர் வந்து சுற்றுலாத் தலங்களை பார்த்து செல்கின்றனர்.
மூன்றாவது இடம் தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னையில் சிறப்பாக உலக தரம்வாய்ந்த மருத்துவமனைகளால் அளிக்கப்படும் சிகிச்சையினால் ஈர்க்கப்பட்டு இங்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகள் மற்றும் அழகிய மலைப்பிரதேசங்கள், கடற்கரைகள், கோவில்கள், சரணாலயங்கள், அழகிய கிராமப்புறங்கள், சென்னை, கோவை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற சிறப்புமிக்க நகரங்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு ஆண்டுக்கு 20,30,000 வெளிநாட்டினர் இங்கு வந்து செல்கின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக