வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஆ‌ண்மை ச‌க்‌‌தியை அ‌திக‌ரி‌க்கு‌ம் மாதுள‌ம்!


மாதுள‌ம் பழ‌ம் அ‌திக ச‌த்து‌க்க‌ள் ‌நிறை‌ந்தது எ‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் அது எ‌ந்த வகை‌யி‌ல் உடலு‌க்கு ஆரோ‌க்‌கிய‌த்தை அ‌ளி‌க்‌கிறது எ‌ன்பதை பா‌ர்‌க்கலா‌ம்.

ஏதேனு‌ம் நோ‌யினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு அ‌திக நா‌ள் ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌‌ண்டவ‌ர்களு‌க்கு நோயின் பாதிப்பால் பலகீனம் ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம். அதுபோ‌ன்றவ‌ர்க‌ள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடையு‌ம் கூடும்.

மு‌க்‌கியமாக மாது‌ள‌ம் பழ‌ம் உட‌லி‌ல் தொண்டை, மார்பு, நுரையீரல், குட‌ல் பகு‌திகளு‌க்கு அதிக வலிமையை உண்டாக்குகிறது.

ஆண்மை குறைவு உ‌ள்ளவ‌ர்க‌ள் மாதுளம்பழம் சாப்பிடுவதால், ச‌க்‌தி கூடு‌ம். குழ‌ந்தை‌ப் பேறு‌ம் ஏ‌ற்படு‌ம்.
க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு ஏ‌ற்படு‌ம் ர‌த்த சோகையை‌த் த‌வி‌ர்‌க்க, கெலா‌க்‌ஸ் போ‌ன்றவ‌ற்றுட‌ன் மாதுள‌ம் பழ‌த்தை‌ச் சே‌ர்‌த்து பா‌ல் ஊ‌ற்‌றி சா‌ப்‌பி‌ட்டா‌ல் ர‌த்த ‌விரு‌த்‌தி ஏ‌ற்படு‌ம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக