வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ரூ.10 கோடி செலவில் டெல்லியில் பெரியார் மையம்!


சென்னை: டெல்லியில் ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் மையத்தை நாளை மறுதினம் முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கவுள்ளார்.

இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

டெல்லி ஜசோலா பகுதியில் ரூ.10 கோடி செலவில் 5 மாடிகளைக் கொண்ட பெரியார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 2ம் தேதி மாலை நடக்கிறது. இதை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.

அங்கு நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனும், கலைஞர் கணினி மையத்தை மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவும், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் திறந்து வைக்கிறார்கள்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சுந்தரஜித் நூலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் டி.பி. யாதவ் திறந்து வைக்கிறார் என்றார்.

இந்த மையம் அமைய மறைந்த முன்னாள் பிரதமர் வி.சி.சி்ங் உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திட்டக் கமிஷனின் கூட்டத்தில் கலந்து கொள்ளவும், கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நேரில் அழைக்கவும் முதல்வர் கருணாநிதி டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக