ஞாயிறு, 25 ஏப்ரல், 2010

கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் வீரர் சச்சின்!


பெங்களூர்: 3வது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களிலேயே அதிகம் தேடப்பட்ட வீரராக சச்சின் டெண்டுல்கர் உருவெடுத்துள்ளார்.

இதுகுறித்த பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ஐபிஎல் வீரர்களிலேயே அதிகம் தேடப்பட்ட வீரர் டெண்டுல்கர்தான்.

2வது இடம் கங்குலிக்குக் கிடைத்துள்ளது. தொடர்ந்து 2வது வருடமாக அதிகம் தேடப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமை ஷான் வார்னுக்குக் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் புதிதாக இந்த ஆண்டு கில்கிளைஸ்ட், ரியான் ஹாரிஸ், பிரவீன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையா 7,8, 9வது இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலிலிருந்து டோணி, ஷேவாக் மற்றும் கடந்த இரு ஐபிஎல் தொடர்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய போலி ஐபிஎல் வீரர் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி அதிகம் தேடப்பட்ட அணியாக இருந்தது. இந்த ஆண்டு அந்த இடத்தை டெக்கான் சார்ஜர்ஸ் பிடித்துள்ளது. 2வது இடம் மும்பைக்கும், 3வது இடம் சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் கிடைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக