வெள்ளி, 30 ஏப்ரல், 2010

தமிழகம்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் 62 லட்சம் பேர்!


சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக 62 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.

சட்டசபையில் இன்று தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான கொள்கை விளக்க குறிப்புகளை அந்தத் துறைகளின் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 2004-ம் ஆண்டு வரை பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 5,67,619 மட்டுமே ஆகும்.

அதில் 31.3.2010ம் தேதி வரை 23,243 பேர் அரசு வேலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

31.3.2010ம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 61,98,028 பேர். இதில் 29,16,920 பேர் பெண்கள் .

குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்ற திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை197 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அதில் 81 பேர் சிறப்பு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடிக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களையும் சேர்த்தால் வேலை தேடி காத்திருப்போர் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக