வியாழன், 23 பிப்ரவரி, 2012

கிங்பிஷருக்கு ரூ 1650 கோடி பெயில் அவுட் தரும் ஸ்டேட் வங்கி!

மும்பை: நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதாகச் சொல்லப்படும் கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு ரூ 1650 கோடி கடன் தர அரசுக்கு சொந்தமான பாரத ஸ்டேட் வங்கி முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியும் தன் பங்குக்கு சில நூறு கோடிகள் தர முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல் கட்டமாக குறுகிய கால இயக்க முதலீட்டுத் தொகையாக ரூ 700 கோடியையும், வங்கி உத்தரவாதத் தொகையாக ரூ 500 கோடியையும் கிங்பிஷருக்குத் தருவதன் மூலம், அந்நிறுவனத்தின் அன்றாடப் பணிகள் பாதிப்பின்றி நடக்க உதவ முன்வந்துள்ளது எஸ்பிஐ. மேலும் அடுத்த ஆண்டு இந்த வங்கிக்கு கிங்பிஷர் செலுத்த வேண்டிய ரூ 550 கோடியைத் திருப்பித் தரும் கெடுவை நீட்டிக்கவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. மேலும் கிங்பிஷர் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ 360 கோடிக்கு எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் உத்தரவாதம் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அரசு வங்கிகளின் முடிவு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக