வியாழன், 23 பிப்ரவரி, 2012

அரவணைப்பு….. சில முத்தங்கள்… கணவரின் மனம் கவரும்!

தம்பதியரிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவது வாடிக்கை. அதனையே ஊதிப்பெரிதாக்கி விரிசல் ஏற்படுத்தாமல் அன்பால் அதை சரியாக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், கணவரின் மனம் கவரவும் சில வழிமுறைகளை தெரிவிக்கின்றனர் குடும்ப நல ஆலோசகர்கள். அன்பால் அரவணைப்பு குடும்பத்தில் முதல் பிரச்சினையே பெற்றோர்களை கவனிப்பதில்தான் ஏற்படுகிறது. நம்முடைய பெற்றோர்களை எப்படி கவனிக்கிறோமோ அதேபோல கணவரின் பெற்றோர்களையும், கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டும். அன்பால் அரவணைத்து அவர்களுக்கு மரியாதை அளித்தால் கணவரின் குட் புக்கில் டாப் தான் நீங்கள். கணவருக்காக சமையுங்கள் கணவரின் மனம் கவர முதலில் அவரது வயிற்றுக்கு சரியான விருந்தளிக்க வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவிப்பர். எனவே சுவையாக சமைத்து சூடாக பரிமாருங்கள். வார இறுதி நாட்களில் ஸ்பெசல் சமையலாக இருக்கட்டும். அப்புறம் நீங்களும் அவருக்கு ஸ்பெசல்தான். மனதிற்குள் மத்தாப்பு கணவரின் துணிகளை துவைத்துப் போடுவது ஒரு கலை. திருமணத்திற்கு முன் யார் வேண்டுமானாலும் துணிகளை துவைத்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் தன்னுடைய துணிகளை மனைவி துவைத்துப் போடுவது கணவரின் மனதிற்குள் மத்தாப்பு பூக்கும். இனிமையான இரவு விருந்து இரவு நேரத்தில் கணவரின் வருகைக்காக காத்திருந்து உண்பது உங்கள் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்கும். தனக்காக தன் மனைவி பசியுடன் காத்திருப்பாள் என்ற எண்ணமே கணவரின் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கும். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது. அழகாய் அசத்தலாம் கணவருக்கு பிடித்தமான உடை அணிவது அவரது கண்ணை மட்டுமல்ல காதலையும் அதிகரிக்கச் செய்யும். அதுதான் திருமணமாகிவிட்டதே, இனி என்ன என்று உடலை கண்டுகொள்ளாமல் விடுவது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தும். எனவே உடலை கச்சிதமாய் வைத்திருங்கள். அதற்கேற்ப உடையணிந்தால் கணவர் உங்கள் கைகளில் என்பதை நீங்களே உணர்வீர்கள். கொஞ்சமாய் பேசுங்கள் நிறைய கேளுங்கள் எப்பவுமே லொட லொட என நீங்கள் பேசிக்கொண்டிருப்பதை விட கணவரை பேசவிட்டு நீங்கள் கேளுங்கள். இது உங்கள் மீதான பாசத்தை அதிகரிக்கும். நம் பேச்சை கேட்க ஆள் வந்துவிட்டார் என்று அவரை அதீத உற்சாகத்தில் ஆழ்த்தும். கை கோர்க்கும் காதல் இறுதியான, முக்கியமானது படுக்கையறையில் வெற்றிகளை விட தோல்விகள் தான் அதிகம் விரும்பத்தக்கதாக உள்ளது. எனவே விட்டுக்கொடுங்கள். அவர் தடுமாறினாலும் நம்பிக்கையூட்டுங்கள். நீங்கள் தோற்பது அவரது மனதில் இடம் பெறுவதற்கான வெற்றிக்கு வழி வகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக