வெள்ளி, 6 ஜனவரி, 2012

புகை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி: ஆரோக்கியமான சிகரெட் கண்டுபிடிப்பு!

வாஷிங்டன்: திராட்சை விதையில் இருந்து புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இது விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலக்காத சிகரெட் என்பதால் புகைப் பிடிப்பவர்கள் தைரியமாக இந்த சிகரெட்டை புகைக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காசை கரியாக்காதே என்பார்கள் முன்னோர்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் புகையாக ஊதித் தள்ளுகின்றனர். புகையை இழுக்கும் போது உற்சாகம் ஏற்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு பகை என்பதை உணர மறுக்கின்றனர். உடம்பினுள் செல்லும் சிகரெட் புகையானது புற்றுநோய், நுரையீரல் நோய்களுக்கும் அடித்தளம் அமைக்கிறது. எனவே உடல்நலம் பாதிக்காத அதே சமயத்தில் உற்சாகம் தரக்கூடிய சிகரெட் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக் கழக விஞ்ஞானிகள். இந்த புதிய வகை சிகரெட்டினை, திராட்சை விதையில் இருந்து அவர்கள் உருவாக்கி உள்ளனர். உடல் நலத்தை பாதிக்காது புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது. இதனால் புற்று நோய் ஏற்படுகிறது. ஆனால் இந்த திராட்சை விதை சிகரெட் புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல உடல் நலத்தை பாதிக்காது. ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷதன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதேசமயத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்புகள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கை விட முடியாதவர்கள். புதிய சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் அறிவுறித்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக