வெள்ளி, 27 ஜனவரி, 2012
கரம் பற்றி காதோரம் சொல்லுங்கள், ஐ லவ் யூ…!
நம் நேசத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வாக்கியம் ஐ லவ் யூ. காதலிப்பதை விட அந்த காதலை வெளிப்படுத்துவதில்தான் சிரமம் அதிகம். எங்கே, எப்படி ஐ.லவ். யூ சொல்வது என்று தெரியாமல் மண்டை காய்ந்து போனவர்கள் தான் அதிகம். ஏதாவது ஒரு இடத்தில் எக்குத்தப்பாக சொல்லி மாட்டிக்கொண்டு அடிவாங்கியவர்கள் ஏராளம். தம்பதியர் அடிக்கடி ஐ.லவ்.யூ என்று கூறிக்கொண்டாலும் அந்த வாக்கியம் எத்தனை சக்தி படைத்தது என்று உணர்வதில்லை. எனவே காதலை எப்படி சொன்னால் நல்லது என்று ஆலோசனை கூறுகின்றனர் உளவியலாளர்கள். நீங்கள் டிரை செய்து பாருங்களேன்.
பசுமையான தருணங்கள்
இருவரின் வாழ்விலும் நிகழ்ந்த பசுமையான தருணங்களை நினைவு படுத்தலாம். அதை நினைத்து சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கும் போது துணையிடம் உங்களின் நேசத்தை வெளிப்படுத்தலாம். அந்த தருணத்தில் நிச்சயம் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.
நடிப்பாக வெளிப்படுத்தலாம்
நடிப்பின் மூலம் காதலை வெளிப்படுத்துவது எளிது. சமீபத்தில் பார்த்த திரைப்படத்தில் காதல் காட்சியை நினைவு படுத்தும் விதமாக நடித்து எளிதாக ஐ. லவ்.யூ கூறலாம். உங்களின் எண்ணத்தை புரிந்து கொண்டவராக இருந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.
நகைச்சுவைப் படம்
இருவரும் ஜாலியாக ஒரு நகைச்சுவைப் படத்திற்கு சென்றிருக்கும் போது உங்களின் துணை சந்தோசமாக படத்தில் மூழ்கியிருக்கும் போது மென்மையாக கரத்தை பற்றி காதோரம் ஐ.லவ். யூ சொல்லலாம். அதிக இருட்டும் இலேசான வெளிச்சமும் கலந்த தியேட்டரில் உங்களின் கோரிக்கையை உங்கள் துணை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு.
வேடிக்கை பேச்சு
இருவரும் சந்தோசமாக நகைச்சுவையாக பேசிக்கொண்டிக்கும் போது எளிதாக உங்களின் நேசத்தை வெளிப்படுத்தலாம். அந்த நேரத்தில் சொல்லும் ஐ.லவ்.யூ கொஞ்சம் எபெக்ட் ஆகத்தான் இருக்கும்.
நடனம் நல்லது
நடனம் என்பது உடல் முழுவதும் உற்சாகத்தை தரக்கூடியது. எனவே இருவரும் ஜோடியாக நடனமாடும் போது ஐ.லவ்.யூ சொல்வது அதீத உற்சாகத்தை தரும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக