செவ்வாய், 5 ஜனவரி, 2010

அமீர்கானின் Ô3 இடியட்ஸ்Õ அமெரிக்க வசூல் 22 கோடி


நியூயார்க் : பாலிவுட் நடிகர் அமீர்கானின் சமீபத்திய படமான Ô3 இடியட்ஸ்Õ, அமெரிக்காவில் இதுவரை இல்லாத வசூல் சாதனையாக 2 வாரங்களில் ரூ.21.6 கோடி குவித்துள்ளது.
அமெரிக்காவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனினும், திரையிடப்பட்ட முதல் 2 வாரங்களில் இதுவரை எந்தப் படமும் ரூ.18.8 கோடிக்கு மேல் வசூலை அளித்ததில்லை. அதை அமீர்கானின் Ô3 இடியட்ஸ்Õ படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் 2 வாரங்களில் அந்தப் படம் ரூ.21.6 கோடி வசூலை அள்ளித் தந்துள்ளது. இதை அமெரிக்க திரைப்பட வசூல் குறித்து தகவல் வெளியிடும் முன்னணி இணைய தளங்களான ஹாலிவுட் டாட் காம், டெட்லைன் ஹாலிவுட் ஆகியவை தெரிவித்தன.
படம் ரிலீசான முதல் வாரத்தில் ரூ.10.1 கோடி வசூலானது. அதன்மூலம், அமெரிக்க திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் வரிசையில் Ô3 இடியட்ஸ்Õ படத்துக்கு 12வது இடம் கிடைத்தது. அடுத்த மாதம் 12ம் தேதி, ஷாரூக்கான் நடித்துள்ள Ôமை நேம் இஸ் கான்Õ என்ற படம் ரிலீசாகிறது. அதுவரை அமீர்கானின் படம் வசூல் சாதனை தொடரும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, Ô3 இடியட்ஸ்Õ படத்தால் மும்பையில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மும்பை மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம், அமீர்கான் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை மனதில் கொண்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத் தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஜயகுமார் காவிட் நேற்று தெரிவித்தார்.

இந்தியன் வங்கியுடன் ஹூண்டாய் ஒப்பந்தம்


சென்னை : சென்னையில் தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், கார் கடன்களுக்காக இந்தியன் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி, இந்தியன் வங்கி & ஹூண்டாய் பைனான்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவன டீலர்கள் மூலம் கார் கடன் பெறலாம். நாடு முழுவதும் உள்ள இந்தியன் வங்கியின் 1,700 கிளைகளும் ஹூண்டாய் கார் வாங்க கடனுதவி அளிக்கும். இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு இருக்கும்.

உணவுக்கு 25% செலவு


புதுடெல்லி : இந்தியர்களின் ஆண்டு வருமானத்தில் 25 சதவீதம் (4ல் ஒரு பகுதி) உணவுக்கு செலவாகிறது. மருத்துவத்துக்கு 1.5 சதவீதம் மட்டுமே செலவிடப்படுகிறது என்கிறது ஆய்வு முடிவு.

இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் சிஎம்ஐஇ. அது 2008 &09ம் நிதி ஆண்டில் (2008 ஏப்ரல் & 2009 மார்ச்) இந்தியக் குடும்பங்களின் செலவினத்தை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
இந்தியக் குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.1.4 லட்சம். குடும்பங்களின் ஒட்டுமொத்த வருவாய் அளவு ரூ.2,800 கோடி. அதில் அதிகபட்சமாக 25.4 சதவீதம், உணவுக்கு செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த இடத்தை மின்சாரமும், பெட்ரோல் அல்லது டீசலும் பிடித்தன. அவற்றுக்கு செலவிட்ட தொகை 7.6 சதவீதம். 1.74 சதவீதத்துடன் போக்குவரத்து செலவுக்கு 3வது இடம் கிடைத்தது. வீட்டுக் கடன் உட்பட கடன்களைத் திருப்பிச் செலுத்தும் மாதத் தவணைக்கு 1.4 சதவீதம் செலவானது.

மருத்துவத்துக்கு இந்தியர்கள் செலவிட்டது 1.5 சதவீதம் மட்டுமே. ஆனால், படிப்புக்கு 3.21 சதவீதம் செலவழிக்கப்பட்டு உள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் மது வகைகளுக்கு முறையே 0.64 மற்றும் 0.6 சதவீதம் செலவானது. ஓட்டல் உட்பட வெளியிடங்களில் சாப்பிடுவதற்கு இந்தியர்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 1.02 சதவீதம் செலவிட்டனர். எனினும், உணவுக்கான மொத்த செலவில் இது சேர்க்கப்படவில்லை.

வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்கு 59 சதவீத குடும்பங்கள் செலவிட்டுள்ளனர். 64.55 சதவீத வீடுகளில் டிவி உள்ளது. அதில் 3.17 சதவீத வீடுகளில் எல்சிடி அல்லது பிளாஸ்மா டிவி உள்ளது. 70 சதவீத இந்திய குடும்பங்களில் கடன் வாங்கும் வழக்கமுள்ள நிலையில், 25 சதவீதத்தினர் மட்டுமே வங்கிகளில் கடன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை வங்கிகளில் 40 ஆயிரம் வேலை காலி


புதுடெல்லி : பொதுத் துறை வங்கிகளில் ரிடையர்மென்ட், ராஜினாமா மற்றும் புதிய கிளைகள் திறந்தது காரணமாக 40 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பொதுத் துறை வங்கிகளில் மொத்தம் 6 லட்சத்து 72 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இதில் ஸ்டேட் வங்கியில் மட்டுமே 2 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அடுத்ததாக பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கனரா வங்கியிலும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டில் ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்றனர். பலர் வேலையை ராஜினாமா செய்தனர். அதோடு எப்போதும் இல்லாத வேகத்தில் புதிதாக கிளைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வங்கிச் சேவையை அதிகரிக்க இதுதான் சரியான நேரம். எனவே புதிய ஊழியர்களுக்கான தேவை பெரிதும் அதிகரித்துள்ளது என பொதுத்துறை வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மொத்தம் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களில், 19 ஆயிரம் பணியிடங்கள் எஸ்பிஐ&யில் உள்ளன. சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் தலா 3 ஆயிரம் வேலைகள் காலியாக உள்ளன.

இந்தியன் வங்கி, யூகோ பாங்க், பஞ்சாப் சிந்த் வங்கி, ஓரியண்டர் பாங்க், யூனியன் பாங்க், பரோடா வங்கி போன்றவற்றிலும் தலா 1000 வேலைகளுக்கு மேல் காலியாக உள்ளது. இவை அனைத்தையும் இந்த ஆண்டு நிரப்ப இந்த வங்கிகள் முடிவு செய்துள்ளன.

திங்கள், 4 ஜனவரி, 2010

வாட்டியெடுக்கும் வறுமை.


புதிய பொருளாதாரக் கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு வறுமையை ஒழிக்கவில்லை; இந்த நிலைமை மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என வருத்தப்பட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். கிராமங்களில் மாத வருமானம் ரூ.356க்கு கீழ் இருந்தாலும் நகரங்களில் மாத வருமானம் ரூ.538க்கு கீழ் இருந்தாலும் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது. இப்படி கிராமங்களில் 28 சதவீதம் பேரும் நகரங்களில் 26 சதவீதம் பேரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பிறகு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. குறைந்து வந்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாகக் குறையவில்லை என்பதுதான் பிரதமரின் வருத்தம்.

இந்தியா இன்னமும் விவசாய நாடுதான். அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தில் இருப்பதும் விவசாயத் தொழில்தான். ஆனால், ஆந்திராவிலும் மகாராஷ்டிராவிலும் இன்னமும் விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகத்தான் இருக்கிறது. முக்கியக் காரணம், கந்து வட்டிக் கடன். அடுத்தது, விவசாய விளை பொருள்களுக்கு போதுமான விலை இல்லாத நிலைமை. விவசாய பொருட்களின் விலை உயர்ந்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். 75 சதவீத விவசாயிகளின் நன்மைக்காக, மீதமுள்ள 25 சதவீத மக்கள் இதைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என மன்மோகன் கூறியிருக்கிறார். ஆனால் உண்மை நிலைமை என்ன? துவரம் பருப்பு விலை கிலோ ரூ.100ஐ தாண்டிவிட்டது. ஆனால், விவசாயிக்கு கிடைக்கும் விலை ரூ.30தான். மீதி ரூ.70ஐ யார் பாக்கெட்டில் போட்டுக் கொள்கிறார்கள்? சர்க்கரை, எண்ணெய், அரிசி என அனைத்து பொருள்களின் விலையும் இரு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்து விட்டன. விவசாயிகள் அப்படியேதான் இருக்கிறார்கள்.
விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. போக்குவரத்து செலவு அதிகரிப்பால், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. அதோடு மருத்துவ செலவு, கல்விச் செலவு, பயணச் செலவு என அனைத்தும் அதிகரித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் லட்சாதிபதிகள் கூட இன்னும் சில ஆண்டுகளில் வறுமைக் கோட்டை தொட்டு விடுவார்கள்.

தலைவ‌லி வருவது எதனா‌ல்


பலரு‌க்கு‌ம் கால‌ம் காலமாக தலைவ‌லி‌ப் ‌பிர‌ச்‌சினை இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அவ‌ர்களோ எ‌ளிதாக வ‌லி ‌நிவாரண மா‌த்‌திரை ஒ‌ன்றை வா‌ங்‌கி போ‌ட்டு‌க் கொ‌ண்டு கால‌த்தை ஓ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள்.

ஆனா‌ல் உலக‌த்‌தி‌ல் பலரு‌க்கு‌ம் தலைவ‌லி எ‌ன்ற ஒரு ‌வியா‌தி ‌நி‌ச்சய‌ம் வ‌ந்‌திரு‌க்கு‌ம். ஒ‌வ்வொரு தலைவ‌லி‌க்கு‌ம் ப‌ல்வேறு காரண‌ங்க‌ள் இரு‌க்கலா‌ம்.

மாணவ‌ர்களு‌க்கு ‌சில சமய‌ங்க‌ளி‌ல் அ‌திகமான தலைவ‌லி வரு‌ம். அத‌ற்கு‌க் அவ‌ர்களது கண் கோளாறு காரணமாக இரு‌க்கு‌ம். க‌ண் கோளாறு காரணமாக தலைவலி வந்தால் கண்ணாடி போட்டுக் கொள்ளலாம்.

கண் நீர் அழுத்த நோய் இருந்தால் காலையில் தூங்கி எழுந்தவுடன் தலைவலி வரும். சாதாரணமாக கண் மூடி உட்கார்ந்தாலோ அல்லது இருட்டில் உட்கார்ந்தாலோ தலைவலி வரும் நப‌ர்களு‌ம் உ‌ண்டு.

ரத்த அழுத்தம் அதிகரித்தல் அ‌ல்லது பல் சொத்தை, சைனஸ் பிரச்சினை ஆகிய காரணங்களாலும் தலைவலி வரும்.

எ‌ந்த காரண‌த்‌தி‌ற்காக தலைவ‌லி வரு‌கிறது எ‌ன்பதை அ‌றி‌ந்து அத‌ற்கு‌ண்டான மரு‌ந்துகளை உ‌ட்கொ‌ள்வதுதா‌ன் ஆரோ‌க்‌கிய வா‌ழ்‌‌வி‌ற்கு வகை செ‌ய்யு‌ம்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பெண்களை அழ வைப்பதில் ஆண்களுக்கு முதலிடம்.


லண்டன் : உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.

லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை!

ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு... கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ... அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.

ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன...? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம்.
இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர். கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர்.

எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர். அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர். ÔÔநவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும்ÕÕ என்றார் சாரா.
சாரே... பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே... என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்.