செவ்வாய், 5 ஜனவரி, 2010

அமீர்கானின் Ô3 இடியட்ஸ்Õ அமெரிக்க வசூல் 22 கோடி


நியூயார்க் : பாலிவுட் நடிகர் அமீர்கானின் சமீபத்திய படமான Ô3 இடியட்ஸ்Õ, அமெரிக்காவில் இதுவரை இல்லாத வசூல் சாதனையாக 2 வாரங்களில் ரூ.21.6 கோடி குவித்துள்ளது.
அமெரிக்காவில் பாலிவுட் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனினும், திரையிடப்பட்ட முதல் 2 வாரங்களில் இதுவரை எந்தப் படமும் ரூ.18.8 கோடிக்கு மேல் வசூலை அளித்ததில்லை. அதை அமீர்கானின் Ô3 இடியட்ஸ்Õ படம் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் 2 வாரங்களில் அந்தப் படம் ரூ.21.6 கோடி வசூலை அள்ளித் தந்துள்ளது. இதை அமெரிக்க திரைப்பட வசூல் குறித்து தகவல் வெளியிடும் முன்னணி இணைய தளங்களான ஹாலிவுட் டாட் காம், டெட்லைன் ஹாலிவுட் ஆகியவை தெரிவித்தன.
படம் ரிலீசான முதல் வாரத்தில் ரூ.10.1 கோடி வசூலானது. அதன்மூலம், அமெரிக்க திரையுலகின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்கள் வரிசையில் Ô3 இடியட்ஸ்Õ படத்துக்கு 12வது இடம் கிடைத்தது. அடுத்த மாதம் 12ம் தேதி, ஷாரூக்கான் நடித்துள்ள Ôமை நேம் இஸ் கான்Õ என்ற படம் ரிலீசாகிறது. அதுவரை அமீர்கானின் படம் வசூல் சாதனை தொடரும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, Ô3 இடியட்ஸ்Õ படத்தால் மும்பையில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மும்பை மருத்துவக் கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம், அமீர்கான் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சியை மனதில் கொண்டு நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத் தயாரிப்பாளரிடம் விளக்கம் கேட்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் விஜயகுமார் காவிட் நேற்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக