புதன், 13 ஜனவரி, 2010

பிளாஸ்டிக் எரித்த 69 பேர் சிக்கினர்


சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று போகி கொண்டாடப்பட்டது. போகிப் பண்டிகையன்று மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட்களை எரிக்கக் கூடாது என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
மேலும் மாசு அளவை கண்டறியும் கருவிகளுடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நகர் முழுவதும் நேற்று காலையில் ரோந்து சென்றனர். வடசென்னையில்தான் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், டியூப் எரித்துள்ளனர்.

அதனால் வடசென்னை பகுதியில் இணை கமிஷனர் சேஷசாயி தலைமையிலான போலீசார் 69 பேர் மீது சென்னை நகர போலீஸ் சட்டம் 74வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக