புதன், 27 ஜனவரி, 2010

அடுத்த 3 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைகள்


புதுடெல்லி : அடுத்த இரண்டு ஆண்டுகளில் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளில் சுமார் 50 லட்சம் தொழிலாளர்கள் கூடுதலாகப் பணியாற்ற உள்ளனர்.

மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒட்டுமொத்தமாக தற்பொழுது பணியாற்றுவோர் எண்ணிக்கை 1.3 கோடி 2016ம் ஆண்டு வாக்கில் இந்த எண்ணிக்கை 2.5 கோடியாக உயரும். இது கிட்டத்தட்ட இருமடங்கு. அடுத்த 3 ஆண்டுகளில் இத்துறையில் 50 லட்சம் வேலைகள் உருவாகும். மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் ஊழியர் பிரிவு துணைத் தலைவர் பிரின்ஸ் அகஸ்டின், ÔÔதொழிற்சாலைத் தள நிலையிலேயே ஊழியர்களின் உற்பத்தித்திறனை உயர்த்த தேவையான முதலீடுகளை பெரிய நிறுவனங்கள் செய்துவருகின்றன.

ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனÕÕ எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் 25 முதல் 30 சதவீதம் பேர் மட்டுமே பணித்தகுதி உடையவர்களாக கல்வியை முடிக்கின்றனர். இந்த அளவை உயர்த்த 78 ஐடிஐக்களோடு இணைந்து ஆட்டோமொபைல் உறபத்தியாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இன்னும் 22 நிறுவனங்களுக்கு உதவிட திட்டம் வகுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக