செவ்வாய், 12 ஜனவரி, 2010

தென்மாவட்ட ரயில்களில் கூட்டம் அலைமோதியது


சென்னை : சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நேற்று இயக்கப்பட்ட அனைத்து ரயில்களிலும், கூட்டம் அதிகம் இருந்தது. முன்பதிவு செய்யப்படாத இரண் டாம் வகுப்பு பெட்டிகளில் பயணிகள் நெருக்கடியால், உட்கார்ந்து பயணம் செய்ய முடியாமல் நூற்றுக்கணக்கான பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.சென்னை எழும்பூரிலிருந்து நேற்று பகலில் இயக்கப்பட்ட வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மாலையில் இயக்கப்பட்ட ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு இயக்கப்பட்ட கன்னியாகுமரி, அனந்தபுரி,முத்துநகர்,ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது.

இதனால், இந்த ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில், நூற்றுக்கணக்கான பயணிகள் உட்கார இடமின்றி நின்று கொண்டே பயணம் செய்தனர். பொதிகை, நெல்லை, பாண்டியன், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்து இடம் கிடைக்காதவர்களும், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய வந்த பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இந்த ரயில்களில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்ய வந்த பயணிகள், மூன்று மணி நேரம் முன்பாகவே வந்து எழும்பூர் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் காத்திருந்தனர்.இப்பயணிகள் பெட்டிக்கு செல்லும் போது நெருக்கடியில் சிக்கிவிடாமலிருக்க, எழும்பூர் ரயில்வே போலீசார் "கியூ' அமைத்து உதவி செய்தனர். இருந்தாலும் இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு பெட்டியில் நூற்றுக்கணக்கானோர் உட்கார இடமின்றி நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

சிறப்பு ரயிலுக்கு அதிரடி வரவேற்பு:சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு நேற்று மாலைசிறப்பு ரயில் இயக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த ரயிலில் பயணம் செய்ய, சென்னையில் உள்ள ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில், நேற்று காலை 6 மணியிலிருந்து நூற்றுக்கணக்ககான பயணிகள் காத் திருந்தனர். முன்பதிவு துவங்கப்பட்ட 10 நிமிடத்தில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இரண்டு மணி நேரத்தில் "ஏசி' வகுப் புகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதனால், மணிக்கணக்கில் காத்திருந்த பல பயணிகள் முன்பதிவு செய்யமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக