ஞாயிறு, 10 ஜனவரி, 2010

அதிக வரி கட்டும் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடம்


புதுடெல்லி : நடப்பு நிதியாண்டின் இறுதிக் காலாண்டில் ரூ.1.5 கோடி வரி செலுத்தி, அதிக வரி கட்டிய விளையாட்டு வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நடிகர்களில் அக்சய குமாரும் அமீர் கானும் தலா ரூ.4.5 கோடி கடந்த டிசம்பரில் செலுத்தி முதலிடத்தில் உள்ளனர்.

இந்தியாவில் அதிகம் வரி செலுத்தும் 500 பேர்களின் பட்டியலை ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெறும் விளையாட்டு வீரர்கள் செலுத்திய வருமான வரி விவரம்:
ரூ.1.5 கோடி செலுத்தி விளையாட்டு வீரர்களில் முதலிடம் பிடித்த சச்சின், 500 பேர் பட்டியலில் 115வது இடத்தில் இருக்கிறார். டோனியும் சேவாக்கும் தலா ரூ.1 கோடி செலுத்தியுள்ளனர். ஆனால் 500 பேர் பட்டியலில் தோனி 199வது இடத்திலும் சேவாக் 201வது இடத்திலும் உள்ளனர். கங்குலி ரூ.90 லட்சமும் ஹர்பஜன் சிங் ரூ.70 லட்சமும் செலுத்தி உள்ளனர். ஐபிஎல் போட்டிகளுக்கு திட்டமிட்ட லலித் மோடி 47வது இடத்தில் இருக்கிறார். அவர் செலுத்திய வரி ரூ.3 கோடி.

பட்டியலில் உள்ள நடிகர் நடிகைகள் விவரம்: நடிகர்களில் ரூ.4.5 கோடி வரி செலுத்திய அக்சய குமாரும் அமீர் கானும் முறையே 25, 26வது இடங்களில் உள்ளனர். 500 பேர் பட்டியலில் அமிதாப் பச்சன் பெயர் இல்லை. ஆனால் அவர் மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா பெயர்கள் உள்ளன. நடிகைகளில் அதிகம் வரி செலுத்தியவர் ஐஸ்வர்யா. அவர் செலுத்திய வரி ரூ.1 கோடி. பட்டியலில் அவரது இடம் 193. அபிஷேக் செலுத்திய வரி ரூ.1.2 கோடி.

ஹிருத்திக், ஷாருக்கான் தலா ரூ.2 கோடி செலுத்தி உள்ளனர். சயீப் அலிகான், ரன்பீர் கபூர் தலா ரூ 1.2 கோடி செலுத்தி உள்ளனர். கஜோல், தீபிகா தலா ரூ 75 லட்சம் செலுத்தினர். ராணி முகர்ஜி ரூ.51 லட்சம் செலுத்தி உள்ளார்.
வர்த்தகர்களில் அதிகம் வரி செலுத்தியவர் மகேஷ் கோர்தான்தாஸ். அவர் செலுத்திய வரி ரூ.20 கோடி. நந்தன் நீல்கனி செலுத்திய வரி ரூ.9 கோடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக