வியாழன், 7 ஜனவரி, 2010

கணவன்& மனைவி 245 மணி நேரம் சண்டை


லண்டன் : பிரிட்டனில் கணவன், மனைவி, சண்டை போடுவதன் மூலம் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 245 மணி நேரம் வீணாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இஷ்யூர் வீட்டு வசதி காப்பீட்டு நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த 1,000 ஆண் மற்றும் பெண்களிடம் தம்பதிக்குள் ஏற்படும் தினசரி சண்டை குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. வருடத்தில் சராசரியாக ஒரு தம்பதி 135 தடவை சண்டை போடுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. கணவன் மனைவி சராசரியாக தினமும் 40 நிமிடம் பல்வேறு வீட்டு பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் செய்வதற்காக செலவழிக்கின்றனர். இதன்படி பார்த்தால் ஆண்டுக்கு சுமார் 245 மணி நேரம் வீணாகிறது.

மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் செலுத்துதல் மற்றும் குழாய் மற்றும் மின்சார இணைப்பு பிரச்னைகளை சரிசெய்தல் உள்ளிட்ட வழக்கமான குடும்ப பொறுப்புகளை தள்ளிப் போடுவதால் தம்பதியரிடையே அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

அலுவலக வேலையை காரணம் காட்டி, வீட்டு வேலைகளை தள்ளிப் போடுவதாக ஆய்வில் பங்கேற்ற மூன்றில் ஒரு ஆண் ஒப்புக் கொண்டுள்ளார். வீட்டில் துணிகளை முறையாக அடுக்கி வைக்காமல் பரப்பி வைப்பதும் சண்டை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ÔÔவழக்கமான வீட்டுப் பணிகளை தட்டிக் கழிப்பதே கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறதுÕÕ என இஷ்யூர் நிறுவனத்தின் உயர் அதிகாரி மைக் பிக்கார்டு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக