ஞாயிறு, 10 ஜனவரி, 2010
அடுத்த பில் கேட்ஸ் இந்தியராக இருப்பார்
வாஷிங்டன் : புதுமையான முயற்சி மூலம் உலக பணக்காரரான பில் கேட்சைப் போல அடுத்த பில் கேட்ஸ் இந்தியாவைச் சேர்ந்தவராக இருப்பார் என்று 40 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஜோக்பை இன்டர்நேஷனல். கடந்த நவம்பர் 20 முதல் 23 தேதி வரை அமெரிக்க முக்கிய நகரங்களில் இந்நிறுவனம் ஆய்வு நடத்தியது.
புதுமையான கண்டுபிடிப்பு மூலம் உலக பணக்காரர் ஆன பில் கேட்சைப் போல அவருக்கு அடுத்ததாக எந்த நாட்டைச் சேர்ந்தவர் வருவார் என்று கேட்கப்பட்டது.
ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்ட 3,779 பேர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். அவர்களில் 40 சதவீதத்தினர் அடுத்த பில்கேட்ஸ் இந்தியராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறினர். அல்லது சீனராகவும் இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆய்வில் பங்கேற்ற 96 சதவீதத்தினர், எதிர்கால வெற்றிக்கு புதுமையான முயற்சியே முக்கியமாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக