புதன், 27 ஜனவரி, 2010
அனைவருக்கும் மும்பை சொந்தம்
லண்டன் : Ôமும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானதுÕ என்று ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
மும்பையில் மராத்தி பேசத் தெரிந்தவர்களே இனி டாக்சி ஓட்ட உரிமம் பெற முடியும் என்று அந்த மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த உத்தரவு வாபஸ் பெறப் பட்டது.
இந்நிலையில், ராஜ்ய சபா எம்.பி. எம்.கே. சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, லண்டனில் நடந்தது. அதில் முகேஷ் பேசியதாவது:
நாம் அனைவரும் முதலில் இந்தியர்கள். பிறகுதான் தாய்மொழி. மும்பை, சென்னை, டெல்லி போன்ற பெருநகரங்கள் அனைத்தும் நம் எல்லாருக்கும் சொந்தமானவை. அதுதான் உண்மை.
இந்தியாவில் பொருளாதார தாராளமயமாக்கல் வந்தபோது கம்பெனி தொடங்க லைசன்ஸ் பெற வேண்டிய நடைமுறை விலகியது. பெரிய நிறுவனங்களுக்கே சுதந்திரம் கிடைத்தபோது, ஏழைகள் டாக்சி ஓட்டுவதற்கு மொழி அடிப்படையில் லைசன்ஸ் பெறுவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
இப்போது இது பிரச்னையல்ல. இந்தியாவில் ஆண்டுக்கு 1.5 கோடி முதல் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் உண்மையான சவால் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக