ஞாயிறு, 17 ஜனவரி, 2010

டிசிஎஸ் நிறுவனத்தில் 8,500 பேருக்கு வேலை


மும்பை : டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2009&10ம் ஆண்டின் கடைசி காலாண்டில் புதிதாக 8500 பேருக்கு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.
இந்தத் தகவலை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் துணைத் தலைவரும் ஊழியர் பிரிவின் தலைவருமான அஜோயேந்திர முகர்ஜி மும்பையில் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

2009&10ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னரே 8703 பேரைப் பயிற்சியாளர்களாக தேர்வு செய்துள்ளோம். வளர்ச்சி அடிப்படையில் பார்க்கும் பொழுது 2010ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 8500 பேரைப் பயிற்சியாளர்களாக நியமிக்க இருக்கிறோம்.
இவர்களைத் தவிர மூன்றாவது காலாண்டில் 3000 பேர் பணிமாற்றம் செய்யப்பட்டனர். நான்காவது காலாண்டில் மேலும் 3000 பேருக்கு பணிமாற்றம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையையும் சேர்த்தால் வழங்கப்படும் மொத்த வேலை
வாய்ப்புகளின் எண்ணிக்கை 23,203 ஆக உயரும்.

நடப்பு நிதியாண்டில் இதுவரை புதிதாக 32 வாடிக்கையாளர்களை டிசிஎஸ் பெற்றுள்ளது. இவர்களில் 7 வாடிக்கையாளர்கள் 50 லட்சம் டாலருக்கு மேல் கட்டணம் செலுத்தும் பிரிவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பு பெருகுவதால் புதிதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகிய மூன்றிலும் புதிதாக வேலை வாய்ப்பு வழங்குவதில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. புதிதாக கிடைக்கும் சேவை ஒப்பந்தங்களை நிறைவேற்ற தயாராக டிசிஎஸ் உள்ளது என முகர்ஜி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக