புதன், 27 ஜனவரி, 2010

ரிவர்வ் வங்கி கொள்கை- வட்டி உயருமா?


ரிசர்வ் வங்கியின் காலாண்டு பொருளாதார கொள்கை அறிவிப்பின் போது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கி வருகின்ற 29 ஆம் தேதி காலாண்டு பொருளாதார ஆய்வறிக்கையையும், எதிர்காலத்திற்கான பொருளாதார கொள்கைகளையும் அறிவிக்க உள்ளது

அப்போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தி, அதன் வாயிலாக பணவீக்கம் அதிகரிப்பதை குறைக்க வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் அதிகரிக்கும். இது அரை விழுக்காடு அதிகரிக்கும் என்று தெரிகிறது. தற்போது ரொக்க இருப்பு விகிதம் 8.5 விழுக்காடாக உள்ளது. இது 9 விழுக்காடாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் நிதி சந்தையில் ரூ.22 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருப்பது குறையும்.

அதே நேரத்தில் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி, வங்கிகள் உபரி பணத்தை ரிசர்வ் வங்கியில் வைக்கும் போது வழங்கும் வட்டி ஆகியவை அதிகரிக்கப்படாது என்று தெரிகிறது.

தற்போது வங்கி துறையில் மட்டும் ஆயிரம் பில்லியன் ரூபாய் ( 1 பில்லியன்-நூறு கோடி) புழக்கத்தில் உள்ளது.

ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் நடவடிக்கை காரணமாக வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பு பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும், தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியிலும், எளிதாக கடன் கிடைக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு, ரொக்க கையிருப்பு விகிதம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் வங்கி துறையில் அதிக அளவு பணபுழக்கம் உள்ளது. இவை ரிசர்வ் வங்கியில் ரிவர்ஸ் ரிபோ வாக வைக்கப்படுகிறது.

சில வங்கியாளர்கள் ரிபோ, ரிவர்ஸ் ரிபோ விகிதமும் உயர்த்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றனர். ஆனால் பெரும்போலோனார் அடுத்த மூன்று மாதத்திற்காவது தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், கடன் எளிதாக கிடைக்க 2008 அக்டோபர் முதல் 2009 ஏப்ரலுக்குள் ரிபோ வட்டி விகிதத்தை 4.25 விழுக்காடு குறைத்தது. இது ரிபோ வட்டி விகிதம் முன்பு 9 விழுக்காட்டில் இருந்து, 4.75 விழுக்காடாக குறைத்தது.

இதோ போல் ரிவர்ஸ் ரிபோ விகிதத்தையும் 3.25 விழுக்காடாக குறைத்தது.

வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் 9 விழுக்காட்டில் இருந்து ஐந்து விழுக்காடாக குறைத்தது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து பொருளாதாரம் தற்போது வளர்ச்சி நோக்கி போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி உட்பட எடுக்கப்போகும் நடவடிக்கை அதிக அளவாக இருக்காது. வட்டி உயர்வை கட்டுப்படுத்துவது சவாலானதாக இருக்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

தொழில் வளர்ச்சி அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் சில குறிப்பிட்ட தொழில்களே அதிக அளவு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதையும் கவணிக்க வேண்டும்

தொழில் நிறுவனங்கள் வங்கியில் இருந்து கடன் வாங்குவது குறைந்த அளவிலேயே உள்ளது. இது சென்ற காலாண்டில் சிறிது அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கடன் வாங்குவது 18 விழுக்காடு அதிகரிக்கும் என மதிப்பிட்டது. ஆனால் 13.7 விழுக்காடு என்ற அளவிலேயே அதிகரித்துள்ளது. இந்த மார்ச் மாதம் முடியும் காலாண்டில் கடன் வாங்குவது 15 விழுக்காடாக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக