சனி, 16 ஜனவரி, 2010

10 மணி நேரம் காத்திருப்பு


திருமலை : திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தவற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் திருமலைக்கு வந்தனர். பொங்கலை முன்னிட்டு, 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டதால் பக்தர்கள் குடும்பத்துடன் திருப்பதியில் குவிந்தனர். கோயிலில் உள்ள வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 23 அறைகளும் நிரம்பின. 2 கி.மீ. தூரத்துக்கு நீண்ட வரிசையில் நின்றனர். 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தங்குவதற்கு அறைகள் கிடைக்காமல் சாலை ஓரங்களில் தங்கினர். 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து முடி காணிக்கை செலுத்தினர். சீக்கிர தரிசன மூலம் பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.

கோயில் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக