ஞாயிறு, 10 ஜனவரி, 2010
100 ஆண்டுகள் பழமையான 5 மாடி கட்டிடம் இடிந்தது
மும்பை : தெற்கு மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் படுகாயம் அடைந்தனர்.
தென்மும்பையில் டாக்யார்ட் ரோடு ரயில் நிலையம் அருகே ரே சேம்பர் என்ற 5 மாடி கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.
இந்த கட்டிடம் சிதலமடைந்த நிலையில் இருந்ததால் குடியிருப்பதற்கு பாதுகாப்பு இல்லாதது என்று ÔமகாடாÕ அறிவித்திருந்தது. இதனால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறிவிட்டனர். எனினும் ஒரு சிலர் மட்டும் தொடர்ந்து இந்த ஆபத்தான கட்டிடத்திலேயே வசித்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த கட்டிடத்தின் சில இடங்களில் திடீரென கீறல் விழுந்தது. இது பற்றி அங்கு குடியிருந்தவர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 1.20 மணியளவில் கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்ள தொடங்கினர்.
கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கட்டிடம் இடிந்து விழுவதை நேரில் பிரோஸ் அன்சாரி என்பவர் கூறுகையில், “நான் சாலையில் நடந்து சென்றபோது திடீரென குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டு கட்டிடம் இடிவதை பார்த்தேன். அடுத்த சில நொடிகளில் அப்பகுதி முழுவதும் தூசு மண்டலமாக காட்சி அளித்ததுÓ என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக