வியாழன், 7 ஜனவரி, 2010

மசாஜ் சாமியார் கைது


சென்னை : பாலியல் புகாரில் சிக்கிய சாமியார், புலித்தோல் பதுக்கியதாக கைது செய்யப்பட்டார். சிறைக்கு செல்லும் வழியில் நெஞ்சு வலி என்று கூறியதால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஹேமலதா, நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது பாலியல் புகார் கொடுத்தார். இதையடுத்து, தலைமறைவான சாமியாரை பெங்களூரில் மாம்பலம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் போலீசில் சாமியார் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்ப தாவது:
டிரைவர் வேலை கேட்டு வந்த ஆனந்தன் மூலம் ஹேமலதா மசாஜ் வேலைக்கு வந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. எனக்கும், மனைவிக்கும் மசாஜ் மட்டுமே செய்வார். அபிராமபுரத்தில் உள்ள பெண்ணுக்கும் எனக்கும் வீடு பிரச்னை உள்ளது.
அந்த பெண்ணின் உறவினர் கென்னடி மூலம் ஆனந்தன் எனக்கு எதிராக திரும்பினார். இதனால் அவரை வேலையை விட்டு நீக்கினேன். ஹேமலதாவும் பணம் திருடுவதாக சந்தேகப்பட்டதால் அவரையும் நீக்கினேன்.

அதனால், எல்லோரும் சேர்ந்து என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுகின்றனர். அபிராமபுரத்தில் போலீசார் என் மீது பொய் வழக்கு போட்டனர். இப்போது என் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. என்னிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டினர். நான் கொடுக்கவில்லை.
இவ்வாறு ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சாமியார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புலித்தோல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து கேட்டபோது, ‘‘தென் ஆப்ரிக்காவில் உள்ள உறவினர் பரிசு அளித்தார். 12 ஆண்டுகளாக அதன் மீது அமர்ந்து தியானம் செய்கிறேன்’’ என்றார் சாமியார். அதன்பின், புலித்தோல் வைத்திருந்த குற்றத்துக்காக அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வர ஸ்ரீகுமார், நேற்று முன்தினம் நள்ளிரவு சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறையில் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
அதனால் அங்கிருந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றவும், புலித்தோல் பறிமுதல் செய்த வழக்கை, நுங்கம்பாக்கம் போலீசுக்கு மாற்றவும் போலீசார் முடிவு செய்துள்ள
னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக