ஞாயிறு, 10 ஜனவரி, 2010

45 லட்சம் பெண்கள் சிகரெட் பிடிக்கின்றனர்


சென்னை : எம்எல்ஏக்களுக்கு புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள அரங்கில் நேற்று நடந்தது. சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். கருத்தரங்கில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:
புகையிலை குறித்து எம்எல்ஏக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால், அவர்கள் பொதுக்கூட்டம் மற்றும் மக்களை சந்திக்கும் போது பேசுவார்கள். புகைப்பிடிப்பதை சிலர் ஸ்டைலாக நினைக்கின்றனர். பொது இடத்தில் புகைப்பிடிப்பதை தடுக்க வேண்டும். இந்த பழக்கத்துக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் 23 முதல் 26 ஆண்டுகள் குறைந்துவிடும். இந்தியாவில் 45 லட்சம் பெண்கள் புகைப்பிடிக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக