செவ்வாய், 12 ஜனவரி, 2010
730 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சென்னை : பொங்கலை முன்னிட்டு 730 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்காக சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக 80 சிறப்பு பஸ்களை விட்டுள்ளது. இவை பொங்கல் கழித்து 2 நாட்களுக்கும் இயக்கப்படும்.
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு நேற்று முதல் 600 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இந்த சேவை 17ம் தேதி வரை இருக்கும். மற்ற போக்குவரத்து கழகங்களும் 50க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்குகின்றன.
சிறப்பு ரயில்கள்: திருநெல்வேலியில் இருந்து ஈரோடு வழியாக எழும்பூருக்கு இன்று பிற்பகல் 3.45க்கு சிறப்பு ரயில் (எண் 0614) புறப்படுகிறது. எழும்பூரில் இருந்து நாளை பிற்பகல் 2.40 மணிக்கு நாகர்கோவிலுக்கும்(எண் 0617) அங்கிருந்து எழும்பூருக்கு 15ம் தேதி காலை 10 மணிக்கும் சிறப்பு ரயில் (0618) புறப்படும்.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு 16ம் தேதி மாலை 6.45 மணிக்கு சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண் 0619) இயக்கப்படுகிறது. இவற்றுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக