வெள்ளி, 15 ஜனவரி, 2010

‘மெட்ராஸ்’ விரைவில் மாற்றம்


புதுடெல்லி : நான்கு உயர் நீதிமன்றங்களின் பெயர்கள் அந்தந்த நகரங்களின் பெயர்களுக்கு ஏற்ப மாற்றப்பட உள்ளன.

மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என்று மாற்றப்பட்ட போதிலும் இங்குள்ள உயர் நீதிமன்றம் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்ற பெயரிலேயே உள்ளது. இந்த பெயர் சென்னை உயர் நீதிமன்றம் என மாற்றப்பட உள்ளது.

இதுபோல் கல்கத்தா என்ற பெயர் கொல்கத்தா என்று மாற்றபட்டு விட்டபோதிலும் கல்கத்தா உயர் நீதிமன்றம் என்றே உள்ளது. இதை கொல்கத்தா உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் பம்பாயின் பெயர் மும்பை என்று மாற்றப்பட்ட போதிலும் உயர் நீதிமன்றத்தின் பெயர் பம்பாய் என்றே உள்ளது. இதை மும்பை உயர் நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும்.

அசாம் தலைநகர் கவுகாத்தியின் பெயர் குவகாத்தி என்று மாற்றபட்டாலும் கவுகாத்தி உயர் நீதிமன்றம் என்றே உள்ளது. இதை குவகாத்தி உயர் நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும்.
மேற்கண்ட நான்கு உயர் நீதிமன்றங்களின் பெயர்களும் அந்தந்த நகரங்களின் பெயருக்கு ஏற்ப மாற்றுவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் பெயர் மாற்றம் இருக்கும். இதைத் தவிர வேறு எந்த உயர் நீதிமன்றத்தின் பெயரையும் மாற்றும் திட்டம் இல்லை என்று மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக