வெள்ளி, 15 ஜனவரி, 2010

கிரிக்கெட் வாரியத்துக்கு 120 கோடி வரி விதிப்பு


மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறக்கட்டளையல்ல, அது வர்த்தக அமைப்புதான் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது. எனவே, ரூ.120 கோடி வரி கட்டவும் அது உத்தரவிட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயணங்கள், போட்டிகளை கவனிக்கிறது பிசிசிஐ. கிரிக்கெட் விளையாட்டை முன்னேற்றும் அமைப்பு என்பதால் அறக்கட்டளையாக அதைக் கருத வேண்டும் என்று வருமான வரித் துறையிடம் தெரிவித்திருந்தது. முதலில் அதை வருமான வரித் துறை ஏற்றுக் கொண்டது.

எனினும், பிசிசிஐ&யின் செயல்பாடுகளை கவனித்து வந்த வரித் துறை, பிசிசிஐ அறக்கட்டளையல்ல, வர்த்தக அமைப்புதான் என்று இப்போது அறிவித்துள்ளது.
இதுபற்றி மும்பையில் வருமான வரி உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ÔÔபிசிசிஐயின் நடவடிக்கைகள் அனைத்தும் வர்த்தக நோக்கம் கொண்டவை. அதில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு பகுதிதான். எனவே, வரி விலக்கு அளிக்க முடியாதுÕÕ என்றார்.

2006&07ம் நிதி ஆண்டில் பிசிசிஐ&யின் நிகர வருமானம் ரூ.274.86 கோடி. வருமான வரிச் சட்டப்படி அதில் ரூ.120 கோடியை வரியாக செலுத்த வேண்டும். தவிர, 2006 முதல் வரி செலுத்தாதற்கு அபராத தொகையும் பின்னர் அறிவிக்கப்படும் என மும்பையில் வருமான வரித் துறை தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக