திங்கள், 11 ஜனவரி, 2010

டெல்லி வாகன கண்காட்சி 20 லட்சம் பேர் பார்த்தனர்


புதுடெல்லி : டெல்லியில் நடைபெற்ற 10வது சர்வதேச வாகனக் கண்காட்சியை இதுவரை இல்லாத அளவாக 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

டெல்லி பிரகதி மைதானத்தில் 10வது சர்வதேச வாகன கண்காட்சி கடந்த 5ம் தேதி தொடங்கியது. நேற்றுடன் நிறைவடைந்தது. அதில் 25 நாடுகளைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்திய முன்னணி வாகன நிறுவனங்களும் அரங்கங்களை அமைத்தன. கார், பஸ், பைக் உட்பட அனைத்து வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மொத்தம் 2,100 அரங்குகளை அமைத்திருந்தன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் வகையில், பேட்டரியில் இங்கும் கார்கள், காற்றை அதிக மாசுபடுத்தாத எரிவாயு தொழில்நுட்ப வாகனங்களை பல நிறுவனங்கள் அறிமுகம் செய்தன. மொத்தம் 25 புதிய வாகனங்கள், கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டன.
1986ல் இருந்து நடத்தப்படும் வாகன கண்காட்சியில் இந்தமுறை அதிகபட்ச அளவாக 20 லட்சம் பேர் பார்வையிட்டனர்.

அவர்களில் 1.5 லட்சம் பேர் வாகனத் துறையைச் சேர்ந்த வர்த்தக பார்வையாளர்கள். இவர்களால் இந்த ஆண்டு வருவாய் அதிகரித் தது.
கண்காட்சி நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வர்த்தக இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ÔÔஉலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருவதை வாகன கண்காட்சியின் வெற்றி காட்டுகிறதுÕÕ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக