புதன், 6 ஜனவரி, 2010

ஹீரோயினூக்கு தனித்தன்மை முக்கியம்


நடித்து வரும் படங்கள்?
பார்த்திபனின் ‘வித்தகன்Õ ஆக்ஷன் படம். இதில் எனது நடிப்புக்கும் முக்கியத்துவம் உள்ளது. ‘அர்ஜுனன் காதலிÕ தலைப்பே கதையை சொல்லும். ஜெய்யை காதலிக்கும் கல்லூரி பெண்ணாக நடிக்கிறேன். இப்படம் வந்தால் என்னை எல்லோரும் லவ் பண்ணுவார்கள். காரணம், காதல் காட்சிகளில் உருகி நடித்திருக்கிறேன். ‘துரோகிÕ மற்றொரு ஆக்ஷன் படம். குடிசைப்பகுதி பெண் வேடம். எவ்வளவு ரவுசு பண்ணமுடியுமோ அவ்வளவு பண்ணி இருக்கிறேன்.

சில ஹீரோயின்கள் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க மறுக்கிறார்களே?
அது அவர்கள் விருப்பம். என்னைப் பொறுத்தவரை கதைதான் முக்கியம். சீனியர், ஜூனியர் என்ற பாகுபாடு பார்ப்பது கிடையாது. நல்ல படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யாருடனும் நடிப்பேன்.

நகுலன் உங¢களுக்கு சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே?
தெரியாது. ஒருவேளை சொல்லி இருக்கலாம். சொல்லாமலும் இருக்கலாம். அவர் எனக்கு நல்ல நண்பர்.

அசினுடன் ஒப்பிடுவது பிடிக்கிறதா?
எனக்கு பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரது சாயலில் இருக்கிறேன் என்கிறார்கள், சந்தோஷம். ஆனால் ஒவ்வொரு நடிகைக்கும் அவரவர்களின் தனித்தன்மை முக்கியம். அதைத்தான் நான் செய்கிறேன். அசினின் நடிப்பு, நடை, உடை, பாணி எதையும் காப்பி அடிக்கவில்லை.

இந்தியில் நடிக்கும் ஆசை?
அப்படியொரு கனவுகூட எனக்கில்லை. தெலுங்கில் 13வது வயதில் ஒரு படத்தில் நடித்தேன். இப்போதும் அங்கு வாய்ப்புகள் வந்தன. கதை சரியில்லாததால் ஏற்கவில்லை. எனக்கு தமிழ் படங்கள் போதும்.

தமிழில் டப்பிங் பேசப்போவதாக தகவல்?
இதுவரை பேசவில்லை. ‘கந்த கோட்டைÕயில் எனக்கு பின்னணி பேசியவர் சவீதா. என் குரல் போலவே இருப்பதாக பலர் கூறினார்கள். நடிப்பு 50 சதவீதம், டப்பிங் 50 சதவீதம் என இரண்டும் சமமாக இருந்தால்தான் அந்த கேரக்டருக்கு வெற்றி கிடைக்கும். தமிழ் நன்றாக பேசுவதால் டப்பிங் பேச முயற்சி செய்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக