வியாழன், 14 ஜனவரி, 2010
ரேஷன் கடைகளை சூறையாடிய யானைகள்
வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 45 ரேஷன் கடைகள், அடிக்கடி காட்டு யானைகளால் சூறையாடப்படுகின்றன. அதிக முறை பாதிப்புக்குள்ளான மாணிக்கா, இஞ்சிப்பாறை ரேஷன்கடைகள், யானை தாக்குதலை தவிர்க்க, ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது.
ஸ்டேன்மோரில் ஏற்கனவே இருந்த கடை உட்பட 3 கடைகள் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் ஒரு குட்டி உட்பட 8 காட்டு யானைகள் கடை கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தன. அரிசி, கோதுமை, உளுந்து, சர்க்கரை மற்றும் பொங்கல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வெல்லத்தை சாப்பிட்டு, பொருட்களை இறைத்தன. அதிகாலை வரை அங்கிருந்த யானைகள் பின்னர் வனத்திற்குள் சென்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக