ஞாயிறு, 31 ஜனவரி, 2010

காவல் நிலையத்தில் செல்போனுக்கு தடை


கோவை : கோவை மாநகரில் 15 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து, புலனாய்வு, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவுகள் இயங்கி வருகின்றன. சில காவல்நிலையங்களில் புகார் அளிக்க வருபவர்களை காக்க வைத்து விட்டு, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் வெகுநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருப்பதாக போலீஸ் கமிஷனர் சிவனாண்டிக்கு புகார்கள் வந்தன. மேலும் சிக்னல்களில் நிற்கும் போலீசார் பல நேரங்களில் செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை கண்காணிக்காமல் இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து கமிஷனர் சிவனாண்டி நேற்று வயர்லெஸ் மூலம் அனைத்து காவல்நிலையங்களுக்கும் பிறப்பித்த உத்தரவு:

போலீஸ் நிலையங்களில் அதிகாரிகள் முதல் காவலர் வரை யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. போலீஸ் நிலைய காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிடவேண்டும். பணி தொடர்பான அவசர தகவல்களுக்கோ மற்ற தேவைகளுக்கோ வயர்லெசையும், லேண்ட் லைன் போனையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாலைகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் இருக்கும் போலீசாரும் செல்போன் பேசக்கூடாது. இன்று (நேற்று) முதல் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களில் செல்போன் பேசுவதை நுண்ணறிவு பிரிவினர் கண்காணிப்பார்கள்.
இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக