செவ்வாய், 12 ஜனவரி, 2010

இன்போசிஸ் பங்கு விலை 2009ல் 2 மடங்கானது


மைசூர் : முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் பங்கு மதிப்பு கடந்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்தது. 2010 மார்ச் வரை வருவாய் 2 சதவீதம் உயரும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட முன்னணி சாப்ட்வேர் நிறுவனம் இன்போசிஸ். அது கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையான நிதிநிலை முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளது. அதற்கு முன்னதாக, மைசூரில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகத்தில் அந்நிறுவன தலைமை அதிகாரி கோபாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:அக்டோபர் & டிசம்பர் 3 மாதங்களில் முதல்முறையாக நிகர லாபம் குறைந்துள்ளது. அது 3.6 சதவீதம் சரிந்து ரூ.1,582 கோடியாகி உள்ளது. முந்தைய ஆண்டில் இதே காலத்தில் நிகர லாபம் ரூ.1,641 கோடியாக இருந்தது.

ஊழியர்களுக்கு தாராளமான சம்பள உயர்வு அளித்தது, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவையே நிகர லாபம் குறையக் காரணம். எனினும், 2010 மார்ச் மாத இறுதியில் இன்போசிஸ் வருவாய் 2 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கிறோம். 2009ம் ஆண்டில் இன்போசிஸ் பங்கு விலை 2 மடங்கானது என்றார்.

இன்போசிஸ் பற்றிய தகவல்கள் நேற்று வெளியானதால் மும்பை பங்குச் சந்தையில் அந்நிறுவன பங்கு விலை 3.4 சதவீதம் உயர்ந்தது. மைசூர் இன்போசிஸ் வளாகத்தில் ஊழியர்களுக்கு கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் கோர்ட், ஜாக்கிங் டிரேக் உட்பட பல வசதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக